பணம்
இருக்கு என்பதற்காக
அதிகமாய்
சாப்பிடவும் முடியாது
இல்லை
என்பதற்காக
சாப்பிடாமல்
இருக்கவும் முடியாது
அதிகமாய்
இருக்கிறவனையும்
நிம்மதியாக
இருக்க விடாது
ஒன்றுமே
இல்லாதவனையும்
நிம்மதியாக
இருக்க விடாது
இருப்பவனிடம்
மேலும்
சேர்ந்து கொண்டேயிருக்கும்
இல்லாதவனை
விட்டு
விலகிக் கொண்டேயிருக்கும்
இருப்பவனை
எதையும்
யோசிக்காமல்
வாங்க வைக்கிறது
இல்லாதவனை
எதையும்
வாங்க
யோசிக்க வைக்கிறது
இருக்கும் வரை
சொந்தங்கள்
கூடவே இருக்கும்
இல்லாத வரை
பாசம்
கூடவே இருக்கும்
பணமே
உன் குணமே
விசித்திரமே!!!!
*# தி.அருணாசலம் #*
www.ariwahem.blogspot.com |