Monday, July 27, 2015

உங்கள் எண்ணங்களுக்கு
அன்னமூட்டும்
வண்ண மலர்களை நீங்கள்
பார்த்ததுண்டா?

♦உருவங்களுக்கு உவமையாக
மலர்களை குறிப்பிடுவார்கள்
சில மலர்கள் உருவங்களை
ஒத்திருப்பது ஆச்சரியத்தின்
அறிகுறியே!

♥கீழே காணும் மலர்களை
எங்காவது பார்த்திருக்கின்றீர்களா?
அவற்றின் பெயர்கள் உங்களுக்கு
தெரியுமா?

தெரிந்தால் Commant Box ல் குறிப்பிடுங்கள்





































இதை பார்த்தால் கூட
மனம் இறங்குமா?

Friday, July 24, 2015

Dear viewers,
You can post your Articles in This Blogsite

Send your Articles(English or Tamil) to our Email

Email:
ariwaham@gmail.com

*-*Your Article must include Your Name and City *-*


indroduce our Blogsite to Your friends

www.ariwahem.blogspot.com




Wednesday, July 15, 2015

'கன்னிவெடி கவனம்' என்று
பலகை சொன்னால்
கண்ணிமைக்கும் பொழுதில்
கண் காணா தூத்தில் நீ




'கடி நாய் கவனம்' என்று
கதவு சொன்னால்
நொடிப் பொழுதில்
நூறு மைல் வேகத்தில் நீ



'புதைகுழி கவனம்' என்று
பாதை சொன்னால்
போதையிலிருந்தாலும்
வேறு திசையில் நீ



'புற்றுநோய் கவனம்' என
பெட்டி சொல்லியும்
இன்னும் புகைவண்டி போல்
நிக்கோடின் மோகத்தில் நீ

#*RAAFI*#





Tuesday, July 7, 2015

வாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலும் 
அவைகளில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை தான் 
இங்கு தொகுத்திருக்கின்றோம்.



வாட்ஸ் அப் செயலியில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பாருங்கள்..
1.ஆர்ச்சிவ் சாட்(Archive chat)
இந்த அம்சம் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சாட்டினை தற்காலிகமாக மூடி வைத்து 
அதனை பின்னர் பயன்படுத்த வழி செய்யும்
இதை மேற்கொள்ள நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து 
ஆர்ச்சிவ் சாட் பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.



2.ம்யூட் க்ரூப் சாட் (Mute Group chat)
சில சமயங்களில் க்ரூப் சாட்களின் நோட்டிபிகேஷன்கள் வெறுப்பேற்றலாம்
அது போன்ற நேரங்களில் Menu button - Mute Button - Group Name - க்ளிக் செய்யலாம்.



3.லாஸ்ட் சீன் (Last seen)
நீங்கள் கடைசியாக வாட்ஸ் அப் பயன்படுத்திய நேரத்தினை 
வாட்ஸ் அப் தானாகவே காண்பிக்கும்
இதை நிறுத்த Settings-- Account -- Privacy --Last seen Option- க்ளிக் செய்து 
Nobody என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.



4.ஷார்ட்கட் (Shortcut)
சாட் மெனுவினை அழுத்தி பிடித்தால் 
அவை ஷார்டகட்டாக ஹோம் ஸ்கிரீனில் தெரியும்
ஒரு வேலை சைனோஜென் இயங்குதளத்தினை பயன்படுத்தினால் 
செயலியை டிராக் செய்து தனி ஃபோல்டரில் 
பாஸ்வேர்டு செட் செய்தும் வைத்து கொள்ளலாம்.



5.ஆட்டோ டவுன்லோடிங் (Auto Downloading)
வாட்ஸ் அப் மீடியா ஃபைல்கள் தானாக டவுன்லோடு ஆவதை தடுக்க 
Setting -- Chat Setting -- Media Auto Download 
என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம்.



6.குறுந்தகவல் (Message)
நீல நிற அம்பு குறி தெரிந்தால் உங்களது குறுந்தகவல் படிக்கப்பட்டு விட்டது என அர்த்தமாகும்
ஆனால் சரியான நேரத்தினை அறிந்து கொள்ள 
குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.



7.பேக்கப் (Backup)
வாட்ஸ்அப் சாட்களை பேக்கப் செய்ய 
Settings--chat settings-- backup conversation Option - க்ளிக் செய்தால் போதுமானது.
லாக் வாட்ஸ்அப் தகவல்களை பாதுகாப்பாக வைக்க 
சந்தையில் கிடைக்கும் செயலிகளை கொண்டு 
வாட்ஸ் அப் செயலியை லாக் செய்து கொள்ளலாம்



8.புகைப்படங்கள் (Photos)
வாட்ஸ் அப் புகைப்படங்களை கேலரி அல்லது கமெரா ரோலில் வைத்து கொள்வது 
சில சிலருக்கு பிடிக்காமல் இருக்கும்
அவ்வாறானவர்கள் புகைப்படங்களை 
வாட்ஸ்அப் செயலி மூலம் மறைத்து வைத்து கொள்ளலாம்.


9.போன் நம்பர் (Phone number)


சிம் கார்டுகளை புதிதாக மாற்றும் போது வாட்ஸ் அப் செயலியை 
UNINSTALL செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்
மாற்றாக Settings -- Account -- Change Number Option-ல் 
புதிய நம்பரை என்டர் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.



இப்பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்
இது பற்றிய உங்கள் கருத்துக்களை Cmmants Box ல் பதிவிடவும்


www.ariwahem.blogspot.com

Pages