Thursday, March 31, 2016

Android மற்றும் Apple பாவணையாளர்களுக்கு Whatsapp வழங்கும் புதிய சேவை இது.

வாட்ஸ்அப் சேவை முற்றிலும் இலவசமாக்கப்பட்டதை தொடர்ந்து அதன் மாதாந்த பயனர்கள் ஒரு பில்லியன் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த சேவையில் அடிக்கடி பல புதுப்புது மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதையும் அவதானிக்கமுடிகிறது. அந்தவகையில் வாட்ஸ்அப் மூலம் நாம் பகிரும் தகவல்களில் தடித்த (bold), வளைந்த (italic) மற்றும் குறுக்குக் கோடிட்ட(Strikethrough) எழுத்துக்களைப் பகிர்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.


அண்ட்ராய்டு சாதனங்களுக்கான இதன் புதிய பதிப்பு இதுவரை கூகுள் ப்ளேஸ்டோரில் மேம்படுத்தப்படவில்லை எனினும் கீழ்வரும் இணைப்பு மூலம் அதை தரவிறக்கி நிறுவுவதன் ஊடாக அதனை புதிய பதிப்புக்கு மேம்படுத்திக்கொள்ளலாம்.

இதன் புதிய பதிப்பை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவியதன் பின்னர் பின்வரும் வழிமுறைகளில் தடித்த, வளைந்த மற்றும் குறுக்குக் கோடிட்ட எழுத்துக்களைப் பகிரலாம்.
இனி வாட்ஸ்அப் மூலம் பி.டி.எப் ஆவணங்களையும் பகிர்ந்துகொள்ள முடியும். வாட்ஸ்அப் மூலம் தடித்த, வளைந்த குறுக்குக் கோடிட்ட எழுத்துக்களில் சொற்களை அமைப்பதுஎப்படி?

♥ தடித்த (bold) எழுத்துக்களை கொண்டசொற்கள்:
தடித்த எழுத்துக்களில் சொற்களை அல்லது வசனங்களை எழுதவேண்டும் எனின் குறிப்பிட்ட சொல்லின் அல்லது வசனத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் நட்சத்திர குறியீட்டை ( * )சேர்க்கவேண்டும்.
உதாரணம்: *அறிவகம்* (இது தடித்த சொற்களை கொண்ட வசனமாக மாற்றப்படும் )

♥ வளைந்த எழுத்துக்களை கொண்ட சொற்கள்:
வளைந்த (italic) எழுத்துக்களில் சொற்களை அல்லது வசங்ளை அமைக்கவேண்டும் எனின் அதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் underscore ( _ ) எனும் குறியீட்டை சேர்க்கவேண்டும் .
உதாரணம்: _அறிவகம்_ (இது வளைந்த சொற்களை கொண்ட வசனமாக மாற்றப்படும்)

♥ குறுக்குக் கோடிட்ட (Strikethrough) எழுத்துக்களை கொண்ட சொற்கள் :
அதேபோல் குறுக்குக் கோடிட்ட எழுததுக்களை எழுத அவற்றின் இறுதியிலும் ஆரம்பத்திலும் Tide ( ~ ) எனப்படும் அலை குறியை சேர்க்க வேண்டும்.
உதாரணம்: ~அறிவகம்~ ( இது குறுக்குக் கோடிட்ட சொற்களை கொண்ட வசனமாக எனமாற்றப்படும் )



♦ Android பாவனையாளர்கள்:
கீழுள்ள இணைப்பில் ( Link ) Download செய்து உங்கள் ஸ்மார்ட் போனில் Install செய்யுங்கள்


♦ Apple பாவனையாளர்கள்:
கீழுள்ள இணைப்பில் ( Link ) Download செய்து உங்கள் ஸ்மார்ட் போனில் Install செய்யுங்கள்




*குறிப்பு:
மேலே தரப்பட்டுள்ள அனைத்து Link களையும் Click செய்தவுடன் விளம்பரமொன்று காண்பிக்கப்படும் 5 செக்கன்கள் காத்திருந்து SKIPAD என்பதை Click செ ய்தால் உரிய வலைத்தளத்தை பெற்றுக்கொள்ள முடியும்.


இது பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள Whatsapp ல் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

♦Whatsapp number: +94757326766

Monday, March 21, 2016

இந்த மாசம் தாத்தா, பாட்டி நம்ம
வீட்டுக்கு வரலையாப்பா?’ ஆசையோடு கேட்டான் மகன் அமுதன். “அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க
பெரியப்பா தாத்தா, பாட்டியை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா கவலைப்படாதே!’ குதர்க்கமாய்ப் பதில்
சொன்னாள் உஷா, என் மனைவி.


அப்போது என் அலைபேசி மணி
ஒலித்தது. “எடுங்க உங்க
அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘
உஷாவின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்.
“வணக்கம்ண்ணே, கோபுதான்
பேசுறேன்… சொல்லுங்க’ என்றேன்.
“என்னடா, அப்பா, அம்மாவை
அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை.
(அண்ணி தொந்தரவு செய்திருப்பாள்.)


“கொஞ்சம் வேலையாப்
போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். புறப்பட ஆயத்தமானேன்.

“அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான்
அமுதன். “என்னடா சந்தேகம்?’ “தாத்தா, பாட்டிக்கு நீங்க , பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்கள்… தாத்தாவையும், பாட்டியையும் மாறி மாறி வச்சுக்கிறீங்க… உங்களுக்கு நான் ஒரே பிள்ளை உனக்கு
வயசாய்ட்டா ஒரு மாசம் நான்
வச்சுக்குவேன்…. அடுத்த மாசம் நீ எங்கே போவே...?’

என்னை யாரோ பிடரியில் ஓங்கி
அறைந்ததுபோல உணர்ந்தேன்...!

Friday, March 18, 2016

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்துவது Youtube தளத்தைத்தான். அத்தோடு எல்லாரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்தான் facebook. இவற்றில் எண்னற்ற வீடியோக்கள் காணப்படுகின்றன

அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் வீடியோக்களை
டவுன்லோட் செய்யும் வசதி Youtube , facebook
தளத்தில் இல்லை. பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன்படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.

ஸ்மார்ட் போன் பாவிப்போர் Youtube , facebook வீடியோக்களை இலகுவாகவும், வேகமாகவும் Download செய்வதற்கான Android app ஐ பற்றி நான் அறிந்ததை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்

அத்துடன் Daily motion , Instagram , Vimeo , Vuclip போன்ற தளங்ளில் உள்ள வீடியோக்களை இலகுவாகவும், வேகமாகவும் Download செய்யலாம்

1. Snaptube என்ற Android app ஐ கீழுள்ள இணைப்பில் ( Link ) Download செய்து உங்கள் ஸ்மார்ட் போனில் Install செய்யுங்கள்






2. + என்ற குறியீட்டினை அழுத்தி உங்களுக்கு பிடித்த வீடியோ தளத்தையும் இத்துடன் இணைத்து அதிலுள்ள வீடியோக்களையும் இலகுவாக Download செய்யுங்கள்



3. உங்களுக்கு விருப்பமான தளத்தை தெரிவு செய்யுங்கள் உதாரணம் Youtube தளத்தை தெரிவு செய்யுங்கள்



4. உங்களுக்கு விருப்பமான வீடியோவை Search செய்து தெரிவு செய்யுங்கள்


5. சிவப்பு நிற வட்டத்தினுள் காணப்படும் கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்துங்கள்
அந்த வீடியோவின் நீங்கள் விரும்பிய Format ஐ தெரிவு செய்யுங்கள் அவ்வளவுதான் அந்த வீடியோ வேகமாக Download ஆவதை Notification ல் காணலாம்




இத்தகவலை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

*குறிப்பு:
மேலே தரப்பட்டுள்ள அனைத்து Link களையும் Click செய்தவுடன் விளம்பரமொன்று காண்பிக்கப்படும் 5 செக்கன்கள் காத்திருந்து SKIP AD என்பதை Click செய்தால் உரிய வலைத்தளத்தை பெற்றுக்கொள்ள
முடியும்.

Thursday, March 17, 2016

வலிகளுக்கு மருந்தாகும்
வேளாண்மை - உன்
விழிகளுக்கு விருந்தாகும்
பசுமை
மொழிகளுக்கு அழகூட்டும்
உவமை கொண்டு - கவி
துளிகளை விசிறியது என்
பேனா மை
உளிகளால் செதுக்க முடியா
புதுமை - காண
வழிகளமைப்பதே எனதூர்
மகிமை

Saturday, March 5, 2016

விந்தை உலகில் விசித்திரக் காட்சிகள் கண்களை கவர்ந்திழுக்கின்றன.
மனித உடலில் விதவிதமான உறுப்புக்கள் இணைந்து செயற்படுகின்றன.
ஓவியங்கள் விழிகளுக்கு விருந்தளிக்கும் கவின் கலையாகும்.
ஆக்கபூர்வமான சிந்தனையுடையோர் அழகியல் கலைகளையும் ஆக்கபூர்வமாகவே அமைப்பர்.
விரலோவியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
வண்ணங்களில் கலவையை விரல்களின் மீது விசிறிய (வி)சித்திரங்களே விரலோவியங்கள் கீழே காணுங்கள்























If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.


Pages