Wednesday, December 28, 2016

இன்றைய இணையமானது வெறும் தகவல்களை தருவதுடன் மாத்திரம் நின்று விடாது ஒவ்வொரு தனி மனிதனதும் நிறுவனங்களினதும் ஒரு அங்கமாக திகழும் வகையில் இணையத்தினூடாக பலவேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.



அந்தவகையில் ஒவ்வொருவரும் தமது எண்ணங்கள், கருத்துக்கள், உணர்வுகளை பகிர்ந்துகொள்வதற்காக முகநூல் (Facebook), கூகுள் பிளஸ், டுவிட்டர் என பல ஏராளமான சமூக வலைதளங்களும் அவரவர் ஆயுள் முழுவதும் தத்தமது ஆவணங்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்ற கோப்புக்களை பாதுகாப்பாக சேமித்துக்கொ ள்வதற்கு Drop box , Ondrive, Google Drive, Mega, Mediafire போன்ற இன்னும் இணையத்தினூடாக வழங்கப்படும் ஏராளமான சேவைகளைப் போன்று ஒவ்வொரு தனி மனிதனும் நிறுவனமும் வெவ்வேறுபட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொ டுக்க இன்று இணையத்தினூடான பல்வேறு சேவைகள் உருப்பெற்றுள்ளது.



இவ்வாறு வெவேறுபட்ட இணையத்தினூடான சேவைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்துப்ப யன்பெறக்கூடிய வகையில் ஒரு உன்னதமான பணியினை செய்யக்கூடியதே IFTTT எனும் தளம் வழங்கும் சேவையாகும்.



IFTTT என்றால் என்ன?

"IF THIS THEN THAT" என்பதன் சுருக்கமே IFTTT என்பதாகும். இதற்கு தமிழில் "இது நடந்தால் இதனை செய்யவும்" என பொருள் கொள்ளலாம். உதாரணமாக முகநூல் கணக்கை வைத்துள்ள நீங்கள் Drop Box சேவையையும் பயன்படுத்துபவர் எனின் முகநூலில் நீங்கள் ஒரு புகைப்படத்தில் Tag செய்யப்படும்போ து நாம் IFTTT தளத்தில் உருவாக்கும் கட்டளைகள் மூலம் அந்த புகைப்படத்தை தானாகவே Drop box இல்சே மிக்கும் செயற்பாட்டினை செய்கிறது IFTTT எனும் சேவை.



இதற்கு நாம் IFTTT தளத்தில் எமக்கென்று ஒரு கணக்கை உருவாக்கி உள்நுழைவதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும் இரு வேறு இணையத்தினூடான சேவைகளை ஒன்றிணைத்து பயன்களை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இணையத்தினூடான சேவை என்பதற்கும் அப்பாற்பட்டு SMS, Phone Call, Android Notification போன்றவைகளையும் இது ஆதரிக்கின்றது.



உதாரணத்திற்கு உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனைத்தையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு முகவரியில் இருந்து வரும் ஒரு மின்னஞ்சலை மாத்திரமோ உங்கள்தொ லைபேசிக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு தொடரும் இதன் மிகநீண்ட பட்டியலானது ஒவ்வொரு தனிநபருக்கும், நிறுவனத்திற்கும் மிகவும் பயனளிக்கக் கூடிய ஒன்றாக இருந்து வருகின்றது.



இந்த தளத்தில் உபயோகிக்கப்படும் மிகமுக்கியமான சொற்கள்.

♦Channels: 
இது IFTTT தளம் ஆதரவு அளிக்கக்கூடிய வெவ்வேறுபட்ட இணைய சேவைகளையும் ஏனைய சேவைகளையும் குறிக்கும். தற்போதைக்கு இது 100 க்கும் மேற்பட்ட சேவைகளை (Channels) ஆதரிக்கின்றது.
உதாரணத்திற்கு : Google Drive, Facebook, SMS, Yahoo போன்றன.

♦Triggers: 
இது மேற்கூறப்பட்ட ஒவ்வொரு Channel களிலும் ஏற்படக்கூடிய மாற்றமாகும் உதாரணத்திற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்று வருதல்.

♦Action: 
Triggers எனும் ஒரு செயற்பாடு இடம்பெறும் போது எந்த செயற்பாட்டை செய்ய வேண்டும் என்பது Action ஆகும்.

♦Ingredients: 
இது Trigger இன் ஒரு பகுதியை குறிக்கும் அதாவது உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் தலைப்பு,உள்ளடக்கம், முகவரி போன்றவைகளாகும்.

♦Recipes:
 IFTTT ஆதரிக்கும் இருவேறு சேவைகளுக்கு இடையிலான தொடர்பினை ஏற்படுத்தும் முழுமையான செயற்பாடும் Recipes என்பதாகும். இதன் சேவையை பயன்படுத்துகையில் மேற் குறிப்பிட்ட சொற்களை அறிந்திருத்தல் அவசியம்.



கணனி முன் அமர்ந்து பல மணி நேரங்களாக நீங்கள் செய்ய வேண்டிய ஒரு செயற்பாட்டினை ஒரு சிலம ிடங்களிலேயே இந்த தளம் உங்களுக்காக நிறைவேற்றித் தருகின்றது. அதிலும் முற்றிலும் இலவசமாக என்பதுடன் நாம் இணையத்தின் மூலம் நிறைவேற்றிக்கொ ள்ளக்கூடிய வெவ்வேறுபட்ட 1000 இற்கும் மேற்பட்ட பயன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

♥கீழுள்ள இணைப்பிணை அழுத்தி தளத்தில் உங்கள் கணக்கொன்றை ஆரம்பித்துக் கொள்ளுங்கள்
இணைப்பு :


♥ Android பாவனையாளர்கள் கீழுள்ள இணைப்பில் தரவிறக்கம் செய்யுங்கள்



♥ Apple பாவணையாளர்கள் கீழுள்ள இணைப்பில் தரவிறக்கம் செய்யுங்கள்


Wednesday, December 21, 2016

You Dress but, you haven't soul
I have soul but , I haven't a dress



Monday, December 19, 2016

அத்தனை செயலுக்கும்
முட்டுக்கட்டை
அறிந்தே பிறந்திடும்
சினமடா
அடியோடு அதனை
நீக்கிடவே
அருந்தவம் புரிந்திட
வேண்டுமடா


சினமது நெஞ்சினில்
இருந்திட்டால்
சிதைந்து போகும்
வாழ்க்கையடா
சிறுக சிறுக மனதிற்குள்
சிரமமின்றி துயரம்
நுழையுமடா



மலர்போல் மலர்ந்த
முகமுமே
மரித்தவர் முகம்போல்
தெரியுமடா
மனதினில் வெறுப்பு
முட்புதராய்
மண்டி உன்னை
அழிக்குமடா

ஒருகணம் யோசித்துப்
பார்த்திட்டால்
ஓட்டம் எடுக்கும்
சினமடா
ஓசை இன்றி அன்புமே
ஓடி வந்து
ஒட்டிக்கொள்ளுமடா.



ஆணவத்தை அகத்தினில்
அடக்கிவிட்டால்
ஆதவன் போல் முகம்
ஒளிருமடா
ஆக்கம் தேடியே வந்து சேர்ந்து
ஆகாயம் போல்
மனம் விரியுமடா.

மனசை மலராய்
மாற்றியே
மணம்வீசி புகழைப்
பரப்படா
மறந்தும் சினத்திற்கு
இடம்தராது
மனதினில் நிம்மதி
பெற்றிடடா



சினத்தை மனதினில்
அடக்கிவிட்டால்
சிகரமாய் வாழ்வு
உயருமடா
சிந்தித்துப் பார்த்து
நடையிட்டே
சிரமேற்கொண்டு நீ
செயல்படடா.

அறிவுக்கு அங்குசம்
போட்டிடடா
அடக்கத்தோடு என்றும்
இருந்திடடா
அயராது முயற்சிகள்
செய்திடடா
அடுத்தவருக்கு உதவி
வாழ்ந்திடடா.



சினமும் தன் சுவடை
இழக்குமடா
சிந்தையில் மகிழ்ச்சி
பிறக்குமடா
சிகரம் தொட்டிட
எழுந்திடடா
சிரஞ்சீவியாய் உலகில் 
வாழ்ந்திடடா.


♥{ இ.இலாசர் - வேளாங்கண்ணி }♥

Saturday, December 10, 2016

Android இயங்குதளத்தின் வருகையின் பின் Samsung ஸ்மார்ட் போன்களும் மக்கள் மத்தியில் அதிகம் பழக்கத்துக்கு வந்துள்ளது. அந்தவகையில் நீங்களும் Samsung ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா?



அப்படியாயின் , அதில் நாம் வழமையாக பார்க்கக்கூடிய எழுத்துருவை ( Font ) மாற்றி புதிய எழுத்துருக்களை நிறுவி பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். Samsung ஸ்மார்ட் போன்களில் அழகிய எழுத்துருக்களை நிறுவிக் கொள்ள உதவுகிறது HiFont எனும் Android ஸ்மார்ட் போன்களுக்கான செயலி



நாம் கீழே வழங்கியிருக்கும் இணைப்பின் மூலம் இதனை இலவசமாகவே உங்கள் ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் நிறுவிக் கொள்ள முடியும்.



பின்னர் இந்த செயலியை திறந்தால் பல அழகிய எழுத்துருக்கள் ( Fonts ) இதில் பட்டியல்படுத்தப்படும். அவைகள் Fashion, Handwriting, All Caps, Typewriter என ஏராளமான பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளதுடன் பல வர்ண எழுத்துருக்களும் இதில் தரப்பட்டுள்ளன.



அவற்றுள் உங்களுக்கு பிடித்த எழுத்துருவை தெரிவு செய்து Download என்பதை அழுத்த வேண்டும். குறிப்பிட்ட எழுத்து தரவிறக்கப்பட்டதன் பின்னர் தோன்றும் USE என்பதை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட எழுத்துருவை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ள முடியும்.



*நிறுவும் போது Install Blocked எனும் பிழைச்செய்தி தோன்றினால் Setting - Security எனும் பகுதியில் தரப்பட்டிருக்கும் Unknown Sources என்பதில் Tick செய்து கொள்க.


 இறுதியாக Settings - Display - Font எனும் பகுதியின் ஊடாக நீங்கள் நிறுவிய எழுத்துருவை தெரிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.








Pages