இன்றைய இணையமானது வெறும் தகவல்களை தருவதுடன் மாத்திரம் நின்று விடாது ஒவ்வொரு தனி மனிதனதும் நிறுவனங்களினதும் ஒரு அங்கமாக திகழும் வகையில் இணையத்தினூடாக பலவேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் ஒவ்வொருவரும் தமது எண்ணங்கள், கருத்துக்கள், உணர்வுகளை பகிர்ந்துகொள்வதற்காக முகநூல் (Facebook), கூகுள் பிளஸ், டுவிட்டர் என பல ஏராளமான சமூக வலைதளங்களும் அவரவர் ஆயுள் முழுவதும் தத்தமது ஆவணங்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்ற கோப்புக்களை பாதுகாப்பாக சேமித்துக்கொ ள்வதற்கு Drop box , Ondrive, Google Drive, Mega, Mediafire போன்ற இன்னும் இணையத்தினூடாக வழங்கப்படும் ஏராளமான சேவைகளைப் போன்று ஒவ்வொரு தனி மனிதனும் நிறுவனமும் வெவ்வேறுபட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொ டுக்க இன்று இணையத்தினூடான பல்வேறு சேவைகள் உருப்பெற்றுள்ளது.
இவ்வாறு வெவேறுபட்ட இணையத்தினூடான சேவைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்துப்ப யன்பெறக்கூடிய வகையில் ஒரு உன்னதமான பணியினை செய்யக்கூடியதே IFTTT எனும் தளம் வழங்கும் சேவையாகும்.
IFTTT என்றால் என்ன?
"IF THIS THEN THAT" என்பதன் சுருக்கமே IFTTT என்பதாகும். இதற்கு தமிழில் "இது நடந்தால் இதனை செய்யவும்" என பொருள் கொள்ளலாம். உதாரணமாக முகநூல் கணக்கை வைத்துள்ள நீங்கள் Drop Box சேவையையும் பயன்படுத்துபவர் எனின் முகநூலில் நீங்கள் ஒரு புகைப்படத்தில் Tag செய்யப்படும்போ து நாம் IFTTT தளத்தில் உருவாக்கும் கட்டளைகள் மூலம் அந்த புகைப்படத்தை தானாகவே Drop box இல்சே மிக்கும் செயற்பாட்டினை செய்கிறது IFTTT எனும் சேவை.
இதற்கு நாம் IFTTT தளத்தில் எமக்கென்று ஒரு கணக்கை உருவாக்கி உள்நுழைவதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும் இரு வேறு இணையத்தினூடான சேவைகளை ஒன்றிணைத்து பயன்களை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இணையத்தினூடான சேவை என்பதற்கும் அப்பாற்பட்டு SMS, Phone Call, Android Notification போன்றவைகளையும் இது ஆதரிக்கின்றது.
உதாரணத்திற்கு உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனைத்தையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு முகவரியில் இருந்து வரும் ஒரு மின்னஞ்சலை மாத்திரமோ உங்கள்தொ லைபேசிக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு தொடரும் இதன் மிகநீண்ட பட்டியலானது ஒவ்வொரு தனிநபருக்கும், நிறுவனத்திற்கும் மிகவும் பயனளிக்கக் கூடிய ஒன்றாக இருந்து வருகின்றது.
இந்த தளத்தில் உபயோகிக்கப்படும் மிகமுக்கியமான சொற்கள்.
♦Channels:
இது IFTTT தளம் ஆதரவு அளிக்கக்கூடிய வெவ்வேறுபட்ட இணைய சேவைகளையும் ஏனைய சேவைகளையும் குறிக்கும். தற்போதைக்கு இது 100 க்கும் மேற்பட்ட சேவைகளை (Channels) ஆதரிக்கின்றது.
உதாரணத்திற்கு : Google Drive, Facebook, SMS, Yahoo போன்றன.
♦Triggers:
இது மேற்கூறப்பட்ட ஒவ்வொரு Channel களிலும் ஏற்படக்கூடிய மாற்றமாகும் உதாரணத்திற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்று வருதல்.
♦Action:
Triggers எனும் ஒரு செயற்பாடு இடம்பெறும் போது எந்த செயற்பாட்டை செய்ய வேண்டும் என்பது Action ஆகும்.
♦Ingredients:
இது Trigger இன் ஒரு பகுதியை குறிக்கும் அதாவது உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் தலைப்பு,உள்ளடக்கம், முகவரி போன்றவைகளாகும்.
♦Recipes:
IFTTT ஆதரிக்கும் இருவேறு சேவைகளுக்கு இடையிலான தொடர்பினை ஏற்படுத்தும் முழுமையான செயற்பாடும் Recipes என்பதாகும். இதன் சேவையை பயன்படுத்துகையில் மேற் குறிப்பிட்ட சொற்களை அறிந்திருத்தல் அவசியம்.
கணனி முன் அமர்ந்து பல மணி நேரங்களாக நீங்கள் செய்ய வேண்டிய ஒரு செயற்பாட்டினை ஒரு சிலம ிடங்களிலேயே இந்த தளம் உங்களுக்காக நிறைவேற்றித் தருகின்றது. அதிலும் முற்றிலும் இலவசமாக என்பதுடன் நாம் இணையத்தின் மூலம் நிறைவேற்றிக்கொ ள்ளக்கூடிய வெவ்வேறுபட்ட 1000 இற்கும் மேற்பட்ட பயன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
♥கீழுள்ள இணைப்பிணை அழுத்தி தளத்தில் உங்கள் கணக்கொன்றை ஆரம்பித்துக் கொள்ளுங்கள்
இணைப்பு :
♥ Android பாவனையாளர்கள் கீழுள்ள இணைப்பில் தரவிறக்கம் செய்யுங்கள்
♥ Apple பாவணையாளர்கள் கீழுள்ள இணைப்பில் தரவிறக்கம் செய்யுங்கள்