Tuesday, March 24, 2020

நீங்கள் பாவிக்கும் அனைத்து ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் Proximity sensor காணப்படுகின்றது. எந்தவொரு button ஐயும்  பயன்படுத்தாமல்  அந்த Proximity sensor மூலம் இலகுவாக ஸ்கிரீன்ஷாட் 
எடுப்பதற்கான இலகு வழி இதோ



இந்த செயலியை கீழேயுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்யுங்கள்
 
 



முதலில் தரவிறக்கி நிறுவிய silent screenshot செயலியை (app) திறந்து கொள்ளுங்கள்

silent screenshot  என்பதை ON செய்துகொள்ளுங்கள்


Permission என்பதை தெரிவு செய்து அதில் காணப்படும் அனைத்து Option களையும் ON செய்து கொள்ளுங்கள்


அதில் Assist என்பதை தெரிவு செய்து  பின் Assist App என்பதை தெரிவு செய்து பின் silent screenshot என்பதை டிக் செய்து OK என்பதை அழுத்துங்கள்


Screenshot icon ஐ மறையச் செய்ய Overlay icon என்பதை தெரிவு செய்து பின்  Enable என்பதை OFF செய்துகொள்ளுங்கள்


Sensor என்பதை தெரிவு செய்து  பின் proximity sensor என்பதை தெரிவு செய்து பின் threshold 1 என்பதை தெரிவு செய்து OK என்பதை அழுத்துங்கள்


நீங்கள் ஸ்கிரீன்ஷோட் எடுக்காத சந்தர்ப்பத்தில் அந்த செயலியில் காணப்படும் silent screenshot என்பதை Off செய்து விடுங்கள்




இந்த  செயல்முறையை காணொளி மூலம் காணவும்   இதுபோன்ற தகவல் தொழில்நுட்பம் சார் விடயங்களை அறிந்து கொள்ளவும் எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Tuesday, March 17, 2020

உங்கள் கணனியில் அல்லது கைப்பேசியில் காலாவதியாகும் மின்னஞ்சல்களை அனுப்பவதற்கான இலகுவழி இதோ

இந்த Trick ஐ செய்து உங்கள் நண்பர்களையும் ஆச்சரியப்படுத்துங்கள்

முதலில் ஜிமெயில் (gmail) செயலியை திறந்து கொள்ளுங்கள்
அங்கு மின்னஞ்சல் அனுப்புவதற்காகக் காணப்படும் ப்ளஸ் (+) அடையாளத்தை அழுத்துங்கள்



வலது பக்க மூளையில் காணப்படும் மூன்று புள்ளி அடையாளத்தை அழுத்துங்கள்
அதில் Confidential Mode என்பதை தெரிவு செய்யுங்கள்.


அதில் Confidential Mode என்பதை ON செய்யுங்கள் 
பின் Set Expiration என்ற இடத்தில் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் எத்தனை நாட்கள் அல்லது எவ்வளவு காலம், அனுப்பும் நபருடைய இன்பாக்ஸில் இருக்கவேண்டும் என்பதை தெரிவு செய்து Save செய்து கொள்ளுங்கள்


உதாரணமாக நீங்கள் ஒரு நாளை தெரிவு செய்து அந்த மின்னஞ்சலில் அனுப்பியிருந்தால் அந்த மின்னஞ்சல் நீங்கள் அனுப்பிய நபரின் இன்பொக்ஸில் ஒரு நாள் மட்டுமே காணப்படும் பின் தானாகவே அழிந்துவிடும்


இந்த செயல்முறையை காணொளி மூலம் காணவும்   இதுபோன்ற தகவல் தொழில்நுட்பம் சார் விடயங்களை அறிந்து கொள்ளவும் எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Pages