Sunday, November 23, 2014

குளிர்மை விளக்கு மின்மினிப்பூச்சி - The Moth



நாம் பாவிக்கும் அனைத்து வகையான மின்குமிழ்களும் ஒளியுடன் அதிகளவு வெப்பத்தை வெளியிடுகின்றன.



ஆனால் மின்மினிப்பூச்சி அப்படிப்பட்டதல்ல. மின்மினிப்பூச்சியின் வயிற்றுப் பகுதியில் நடைபெறும் ரசாயன தாக்கங்களின் விளைவாகவே ஒளிவெளியாகிறது.
இது ‘Bluminescence’ என அழைக்கப்படுகின்றது
மின்மினிப்பூச்சி கொண்டிருக்கும் ரசாயனங்களுக்கு (Luciferin,Luciferase,ATP) ஒட்சிசன் வாயு கிடைக்கும் போது தாக்கம் நடைபெற்று ஒளிவெளிப்படுகின்றது. 
ஒட்சிசன் கிடைப்பது நின்றவுடன் நிறுத்தப்படுகின்றது மின்மினிப்பூச்சியின் ஒளி விட்டு விட்டு தெரிய இதுவே காரணமாகும்.



மின்மினிப்பூச்சியின் ஒளியிலுள்ள சிறப்பம்சம் ,அது ஒளியுடன் சேர்ந்து பெரிதளவு வெப்பத்தை வெளியிடுவதில்லை. 
மின்மினிப்பூச்சி மிகவும் செம்மையாக 96% ஒளியாக மட்டுமே வெளிவிடுகின்றது.


                         







Pages