Tuesday, December 30, 2014
Sunday, December 28, 2014
புத்தகசாலை - Librery
புழுதி படிந்து
புரட்டப் படாத
பக்கங்களுடன்
புன்னகைத்தவாறு
தன்னகத்தே
புத்தகங்களை கொண்டு
புதியோரை
வரவேற்க
புதுப் பொழிவுடன்
பூத்துக் குழுங்குகின்றன
எத்தனையோ
புத்தகசாலைகள்
®
புரட்டப் படாத
பக்கங்களுடன்
புன்னகைத்தவாறு
தன்னகத்தே
புத்தகங்களை கொண்டு
புதியோரை
வரவேற்க
புதுப் பொழிவுடன்
பூத்துக் குழுங்குகின்றன
எத்தனையோ
புத்தகசாலைகள்
®
Saturday, December 27, 2014
How to convert PDF file to Word document?
How to convert PDF file to Word
document?
Portable document format is a
file format used to present and exchange documents reliably, independent of
software, hardware or operating system. Invented by adobe, PDF files are easily
viewed using free PDF reader software. We can convert PDF files to word ,
image, text or HTML files by using UniPDF free software without using internet
connection.
Thursday, December 25, 2014
Monday, December 22, 2014
Thursday, December 18, 2014
காக்கை சொன்ன கதை - The story that crow said me
நந்தவன பூலோகத்தை
நகைப்புடன் தினகரன்
எட்டிப் பார்க்க
எத்தனிக்கும் நேரமது
நண்பர்கள் உறங்க
நான் மட்டும்
விழித்திருக்க
நடை போட்டு வந்ந
நாட்டுப்புற
கருப்பழகி காக்கை
என்னிடம்
கதைத்தது
'காகா' என்று
காக்கை சொன்ன
கதை
'கா'ரணம் 'கா'ட்டாமல்
உன்
'கா'ரியத்தை 'கா'தலி
'கா'ரிருள் 'கா'ணாமல் போகும்
'கா'லைக் 'கா'ட்சிதனிலே.....
நகைப்புடன் தினகரன்
எட்டிப் பார்க்க
எத்தனிக்கும் நேரமது
நண்பர்கள் உறங்க
நான் மட்டும்
விழித்திருக்க
நடை போட்டு வந்ந
நாட்டுப்புற
கருப்பழகி காக்கை
என்னிடம்
கதைத்தது
'காகா' என்று
காக்கை சொன்ன
கதை
'கா'ரணம் 'கா'ட்டாமல்
உன்
'கா'ரியத்தை 'கா'தலி
'கா'ரிருள் 'கா'ணாமல் போகும்
'கா'லைக் 'கா'ட்சிதனிலே.....
Tuesday, December 16, 2014
Monday, December 15, 2014
வெற்றியின் வலி - Pain of success
வெற்றி பெற்ற
ஒவ்வொரு மனிதனிடமும்
வலி நிறைந்த
கதை உண்டு
ஒவ்வொரு
வலி நிறைந்த கதையும்
வெற்றியை
முடிவாக கொண்டிருக்கிறது
வலியை
ஏற்றுக் கெண்டு
வெற்றிக்கு தயாராகுங்கள்
ஒவ்வொரு மனிதனிடமும்
வலி நிறைந்த
கதை உண்டு
ஒவ்வொரு
வலி நிறைந்த கதையும்
வெற்றியை
முடிவாக கொண்டிருக்கிறது
வலியை
ஏற்றுக் கெண்டு
வெற்றிக்கு தயாராகுங்கள்
Sunday, December 14, 2014
Wednesday, December 10, 2014
நிறம் மாறும் பாறை - Colorful Rock
நம் வாழ்வில் வண்ண மயமான விடயங்களை நாம் அதிகம் ரசிக்கின்றோம்.
அதேபோல் நான் கூறப்போகும் விடயமும் வண்ணங்களுடன் தொடர்புபட்ட
தகவலே……
அவுஸ்திரேலியா கண்டத்தின் வடக்குப் பிரதேசத்தில் “ஆலிஸ்பிரிங்ஸ்”
என்று ஓர் ஊர் உள்ளது.
அங்கிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் ஓர் அதிசயக் கற்பாறை இருக்கிறது. ஒரே பாறையாலான அந்தக் குன்று உலகிலேயே மிகப்பெரியது எனக்
கருதப்படுகிறது.
அங்கு வாழும் பழங்குடிமக்கள் அந்தக்
கற்பாறையை “உலுரு பாறை” என்று அழைக்கின்றனர்.
அந்த அதிசய பாறை பரந்த பாலை வனத்தில் உள்ளது. அது
348 மீட்டர் உயரமும் 9 கிலோமீட்டர் சுற்றளவும் கொண்டது. இந்தப்
பிரமாண்டமான கற்பாறை பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து பார்ப்போருக்கு சிவப்பு நிறக்
கூடாரம் ஒன்று தன்னந்தனியே நிற்பது போன்ற
பிரமையை உண்டு பண்ணும்.
உலக அதிசயங்களுள் ஒன்றான அப்பாறையின் மற்றொரு வியப்பான அம்சம்
என்னவென்றால் அவ்வப்போது நிறம்மாறிக் காட்சி அளிப்பதாகும். அதன் இயற்கை நிறம் கருங்கற் பாறைக்கு உள்ள நீலம் கலந்த சாம்பல்
நிறம்தான்.
ஆனால், வெயிலில்
அது சிவப்பாக மாறிவிடுகிறது.
நண்பகலில் அது பழுப்பு நிறமாகத்
தோன்றும்.
மாலைப் பொழுதில் அது நீலம் கலந்த
சிவப்புப் பாறையாகக் காட்சியளிகின்றது.
Tuesday, December 9, 2014
Monday, December 8, 2014
Thursday, December 4, 2014
காணாமல் போகும் பறவை - Cagou
“ககோவ்”(CAGOU) என்ற பறவை காணாமல் போகும் பறவை என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் இது பெர்முடா தீவுகளில் மட்டும் காணப்படுகிறது. இந்தப் பறவை இயற்கை ஆய்வாளர்களுடன் கடந்த 300 ஆண்டுகளாக
`கண்ணாமூச்சி' விளையாடி வந்திருக்கிறது. இந்தப் பறவை இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று நினைக்கப்படும் போதெல்லாம் சில பறவைகள் கண்ணில் தென்படும்.
ஒரு காலத்தில் பெர்முடா தீவுகளில் மிக அதிகமாகக்காணப்பட்ட இப் பறவைகள், இங்கு குடியேறிய ஆங்கிலேயர்களுக்கு நல்ல உணவாகின. குறிப்பாக 17-ம் நூற்றாண்டில் இடையிடையே கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்ட போது `ககோவ்' பறவையே முக்கிய உணவானது. அப்புறம் அப்பறவைகள் கண்ணில் படாமல் போக, அவை முற்றிலுமாக அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட நிலையில் 1916-ம் ஆண்டு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து மறுபடி காணாமல் போன அவை 1951-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது ஒரு தீவுத் திட்டில் 18 ஜோடிகள் மட்டும் இருந்தன.
அடுத்து, பெர்முடாவின் வனக் கட்டுப்பாட்டு அலுவலர் டேவிட்விங்கேட் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினார். பெர்முடா தீவுக்கு வரும் வெப்ப மண்டலப் பறவைகள் `ககோவ்' பறவைகளை அழித்து அவற்றின் கூடுகளை ஆக்கிரமிப்பதை அவர் அறிந்தார். எனவே `ககோவ்' பறவைகளின் கூடுகளை பெரிய வெப்பமண்டலப் பறவைகள் நெருங்காமல் தடைகளை ஏற்படுத்தினார்.
அதன்விளைவாக, மகிழ்ச்சி அளிக்கும் வகையில் `ககோவ்' பறவைகளின் எண்ணிக்கை 126 ஜோடிகளாக அதிகரித்துள்ளது.
அதன்விளைவாக, மகிழ்ச்சி அளிக்கும் வகையில் `ககோவ்' பறவைகளின் எண்ணிக்கை 126 ஜோடிகளாக அதிகரித்துள்ளது.
நீர் Cagu பறவையை கண்டுள்ளீரா?