நம் வாழ்வில் வண்ண மயமான விடயங்களை நாம் அதிகம் ரசிக்கின்றோம்.
அதேபோல் நான் கூறப்போகும் விடயமும் வண்ணங்களுடன் தொடர்புபட்ட
தகவலே……
அவுஸ்திரேலியா கண்டத்தின் வடக்குப் பிரதேசத்தில் “ஆலிஸ்பிரிங்ஸ்”
என்று ஓர் ஊர் உள்ளது.
அங்கிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் ஓர் அதிசயக் கற்பாறை இருக்கிறது. ஒரே பாறையாலான அந்தக் குன்று உலகிலேயே மிகப்பெரியது எனக்
கருதப்படுகிறது.
அங்கு வாழும் பழங்குடிமக்கள் அந்தக்
கற்பாறையை “உலுரு பாறை” என்று அழைக்கின்றனர்.
அந்த அதிசய பாறை பரந்த பாலை வனத்தில் உள்ளது. அது
348 மீட்டர் உயரமும் 9 கிலோமீட்டர் சுற்றளவும் கொண்டது. இந்தப்
பிரமாண்டமான கற்பாறை பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து பார்ப்போருக்கு சிவப்பு நிறக்
கூடாரம் ஒன்று தன்னந்தனியே நிற்பது போன்ற
பிரமையை உண்டு பண்ணும்.
உலக அதிசயங்களுள் ஒன்றான அப்பாறையின் மற்றொரு வியப்பான அம்சம்
என்னவென்றால் அவ்வப்போது நிறம்மாறிக் காட்சி அளிப்பதாகும். அதன் இயற்கை நிறம் கருங்கற் பாறைக்கு உள்ள நீலம் கலந்த சாம்பல்
நிறம்தான்.
ஆனால், வெயிலில்
அது சிவப்பாக மாறிவிடுகிறது.
நண்பகலில் அது பழுப்பு நிறமாகத்
தோன்றும்.
மாலைப் பொழுதில் அது நீலம் கலந்த
சிவப்புப் பாறையாகக் காட்சியளிகின்றது.