Friday, February 27, 2015

வலிகள் இன்றி
வாழ்க்கை
இல்லை

வலியை மறந்து
வாழப் போகிறேன்
வானமே
என் எல்லை

விடியலை நோக்கி
என் பயணம்
விடுதலை தேடும்
கூண்டுகிளி போல

வாடாத கனவுகளோடு
வெற்றி எனும்
கனியை பறிக்க

விடா முயற்சியோடு
என் பயணம்
தொடர்கிறது........

♥* Zatheer Khan *♥






Never Think Hard
Abaut Past
It brings
Tears

Dont Think More
About Future
It Brings
Fears

Live This Moment
With a SMILE
It brings
Cheers

கடந்த காலத்தை
பற்றி
நினைக்காதே
அது கண்ணீரை
கொண்டுவரும்

எதிர்காலத்தை
பற்றியும்
நினைக்காதே
அது பயத்தை
கொண்டுவரும்

தற்காலத்தில்
புன்னகையுடன் வாழ்
அது
மகிழ்ச்சியை
கொண்டுவரும்





Sunday, February 22, 2015

கருப்பாயினும்
வெள்ளையாயினும்
உனக்கும் எனக்கும்
குருதி நிறம்
சிவப்பே

மானமுள்ள
மனிதரிடம்
மனிதாபிமானம் இருப்பது
சிறப்பே

www.ariwahem.blogspot.com

Friday, February 20, 2015

காலம்
உனக்கிருக்க
காலனை
அழைப்பதேனோ?

ஞாலம்
போற்ற இருக்கு
போர்வையில்
உறங்குவதேனா?

விழித்து
வெற்றி தேடு
பலித்த
நாட்கள் ஓட

போர்க்களம்
புகுந்த பின்
தயக்கமேனோ?
போரிட
பலமிருந்தும்
வெட்கமேனோ?


வலிகள்
என்ன புதிதா?
வலிகளை மறக்கும்
வழி செய்வது
புதிரா?

விதி நம்பி
மதி
இழக்கலாமோ?
தோல்விகள்
குரைக்க
நம்பிக்கை
நரைக்கலாமோ?

உறங்காத
விழி கொண்டு
இறங்கிடு
உறங்காத மனமே

விடா முயற்சியை
விடாத போது
உனக்கு
தோல்விகள் ஏது?

♥*AZRA NUZRAH*♥



Saturday, February 14, 2015

சிந்தனை செய்
பிறர் உனை
நிந்தனை
செய்த போதும்
சிந்தனை செய்

நீ
பொறுமை கொண்டால்
பெருமைப்படு
தற்பெருமை கொணடால்
மனம்
வெறுமை அடையும்

எருமை
அதன் கருமை
அதற்கு அருமையானதே
பழமையாயினும்
புலமை இருந்தால்
தலைமை தாங்கலாம்

வறுமைப் படினும்
திறமை
இருந்தால்
அருமை வெற்றி
உரிமை உனக்கு

மடமை நீக்கும்
கடமை தனை
உடமையாக்கிடு
அதை வழமையாக்கிடு ®

Friday, February 6, 2015

நாங்க
Train ல
Without போனாலும்
Window board ல_தான்_போவோம்

#ariwahem.blogspot.com

Wednesday, February 4, 2015

படித்து
மேதையாக
வேண்டிய மொட்டுக்கள்
குடித்து
போதையாக
மலருகின்றன

விதையிலிருந்து
வெடித்து வரும்
விருட்சங்களை
ஒடித்து கொல்கின்றனர்
மதுவை
வடித்துக் கொடுக்கும்
விஷக்கிருமிகள் ®

Tuesday, February 3, 2015

குடிச்சிட்டு
வண்டி_ஓட்டினா
இப்டிதான்
குட்டிக்_கரணம்
போடொனும்

#ariwahem.blogspot.com

Sunday, February 1, 2015

பூவே_முதல்
பூவே
இந்த
அணில்_குஞ்சு
உனக்காக.....

போகும்
வழி_எங்கும்
உன்_வாசனை
எனக்காக.....

Pages