குருடர்
"நான் தோற்றத்தை
பார்த்து ஏமாற மாட்டேன்"
செவிடர்
"நான் ஒட்டுக்
கேட்கவே மாட்டேன்"
கையில்லாதவர்
"நான் யார் குறையையும்
பார்த்து கைகொட்டி
சிரிக்க மாட்டேன்"
காலில்லாதவர்
"நான் காசு பணம்
வந்ததும் கால் மேல்
கால் பாட மாட்டேன்"
குள்ளமானவர்
"நான் யார் முன்னும்
தலை குனிந்து
நிற்க மாட்டேன்"
மூளை வளர்ச்சி குன்றியோர்
"நான் யாரையும்
ஏமாற்ற திட்டமிட மாட்டேன்"
அதனால் எங்களை
"மாற்றுத்திறனாளி"
என்கிறார்கள்
நீயா என்னை
"ஊனம்"
என்கிறாய்
'ஊனம் என்னடா ஊனம்
ஞானம் தானே வேணும்
ஞானம் வர வேணும்னா
மனசு மாற வேணும்'