Sunday, May 31, 2015

பூக்கள் என்றாலே அழகுதான் இந்தப் பூக்கள் உலகில் பல்வேறுபட்ட வகைகள் உள்ளன.

நறுமணத்தை நுகர்ந்தால் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்து மிக்க பூ பற்றி கேகள்விப்பட்டீர்களா?

கடந்த ஆண்டு  பிரித்தானியா சன்ஓர்லண்ட் பகுதியில் இவ்வாறான பூ பூத்திருந்தது

இப் பூவின் பெயர் கோர்ன் கொக்ல் ( Corn Cockle) என்பதாகும்.




19ம் நூற்றாண்டில் கோதுமை பயிர்செய்கை நிலங்களில் இப்பூக்கள் மலிந்து காணப்பட்டுள்ளன

20ம் நூற்றாண்டில் இந்த பூக்கும் தாவரத்தின் வளர்ச்சி முற்றாக கட்டுபடுத்தப்பட்டது

எனினும் பல ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் வளர்ந்துள்ளது



இந்த பூவின் வாசனையை நுகர்ந்தால் வயிற்று உபாதைகள், வாந்தி, வயிற்றோட்டம் ,உடல் பலவீனம், சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு மரணமும் சம்பவிக்கலாம்.


உயிர் கொல்லும் ஆயுத பூக்களும் அகிலத்தில் உண்டு.

Wednesday, May 27, 2015

மகனே! பசியின்
மயக்கத்தினால்
உறங்கி விட்டாயா?
இல்லை நீயும்
பட்டினியால்
இறந்து விட்டாயா?




'பால் தராத
பாவி' யென்று
நினைத்து விடாதே,
படைத்தவனே!
பாலன் உயிர்
அணைத்து விடாதே !




எந்தன் மண்ணில்
காண்ப தெல்லாம்
அலையும் பிணங்களே!
பந்த மெல்லாம்
பசியால், நோயால்
வெந்த மனங்களே!





உணவு யெங்கள்
ஊரில் விளையும்
மருந்து போன்றது !
உடையை முழுதாய்
உடலும் உடுக்க
மறந்து போனது !




உந்த னுடல்
உயிர் பெறவே
உணவு தேடினேன் !
பாதம் நோகப்
பாலை மண்ணில்
நீரை நாடினேன் !




வளர்ச்சி கண்ட
நாடு மெங்கள்
வறுமை மறந்தது !
உயர்வு நிலைக்கக்
கடலின் மீதே
உணவை யெறிந்தது!



இரக்க முங்கள்
நெஞ்சில் வந்தால்
இரையைப் போடுங்கள்!
பறக்கு மெங்கள்
உயிரில் கொஞ்சம்
பார்வைப் போடுங்கள்!



*# கலைநிலா சாதிகீன் #*


www.ariwahem.blogspot.com





நவீன உலகின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்புக்கள் 

தொடுதிரையில் தொங்கிக் கொண்டிருக்கும் மக்கள்

உள்ளங்கையில் சுழலும் அறிவு

நேரத்தை குடிக்கும் வீர வீராங்கனைகள்






1.ஒளியியல் விசைப் பலகை





2.சுட்டிக் கனணி





3.எந்திர மூளை




4.கடிகாரப் பேசி




5.கண்ணாடி விளையாட்டு




6.உள்ளங்கை உலோகம்




7.மாத்திரை செயலி




8.தட்டுக் காட்சியகம்




9.வரைபட கை







Monday, May 25, 2015

ஆகாயக் கடல்
பூலோகக் கடலை 

தொடும் தூரமே

நம் பார்வை
செல்லும் 

தூரம்

Saturday, May 9, 2015

அகிலத்தார்
அனைவரும்
விரும்பும்
விலைமதிப்பில்லா
சொத்து
மழலையின்
புன்னகை எனும்
முத்து


உன் கவலை
மறக்க
மருந்து
நீ மழலை சிரிப்பை
அருந்து

பல்லில்லாமல்
சிரித்தாலும்
பார்த்து ரசிக்கவே
மனம்
பாடாய் படுத்தும்


துன்பங்களை
துடைத்தெறிய
சிறந்த வழி
தினம்
மழலை புன்னகையில்
விழி



பொன்னகையில்
மயங்காதோரும்
தோற்றுப் போவர்
மழலையின்
புன்னகையில்...... ®



Pages