மகனே!
பசியின்
மயக்கத்தினால்
உறங்கி
விட்டாயா?
இல்லை
நீயும்
பட்டினியால்
இறந்து
விட்டாயா?
'பால்
தராத
பாவி'
யென்று
நினைத்து
விடாதே,
படைத்தவனே!
பாலன்
உயிர்
அணைத்து
விடாதே !
எந்தன்
மண்ணில்
காண்ப
தெல்லாம்
அலையும்
பிணங்களே!
பந்த
மெல்லாம்
பசியால்,
நோயால்
வெந்த
மனங்களே!
உணவு
யெங்கள்
ஊரில்
விளையும்
மருந்து
போன்றது !
உடையை
முழுதாய்
உடலும்
உடுக்க
மறந்து
போனது !
உந்த
னுடல்
உயிர்
பெறவே
உணவு
தேடினேன் !
பாதம்
நோகப்
பாலை
மண்ணில்
நீரை
நாடினேன் !
வளர்ச்சி
கண்ட
நாடு
மெங்கள்
வறுமை
மறந்தது !
உயர்வு
நிலைக்கக்
கடலின்
மீதே
உணவை
யெறிந்தது!
இரக்க
முங்கள்
நெஞ்சில்
வந்தால்
இரையைப்
போடுங்கள்!
பறக்கு
மெங்கள்
உயிரில்
கொஞ்சம்
பார்வைப்
போடுங்கள்!