Breaking

Wednesday, June 17, 2015

எனது வேண்டுதல் - My Supplication

இறைவா!!

அல்லாஹ்வின் பெயரை
அழகிய முறையில்
அன்றாடம் உச்சரிக்க
ஆரோக்கியத்தை
வேண்டுகிறேன்




சத்திய மார்க்கத்தை
சகலருக்கும் எத்திவைத்து
சரியாய் பின்பற்ற
சக்தியை
வேண்டுகிறேன்

உரைகளை இனிமையாக்க
உண்மைகளை என்றும்
உரைக்க
உறுதியான நாவை
வேண்டுகிறேன்

இமைக்காமல் இருந்து
இறையோனை
இனிதாய் தொழும்
தேகத்தை
வேண்டுகிறேன்

பெற்றோரை பெரியோரை
பணிவாக
மதிக்கும் பண்பை
வேண்டுகிறேன்




தான் அல்லாதோரை
தப்பாய் தவறாய்
எண்ணா
எண்ணத்தை
வேண்டுகிறேன்

நன்றியில்லா
நாய்களுக்கும்
நன்றியுடன் விருந்தளிக்கும்
குணத்தை
வேண்டுகிறேன்

ஆதரவற்ற
அனாதைகளை
அரவணைக்கும்
அன்பை
வேண்டுகிறேன்




உயிர் வகைகளின்
உணர்வுகளை
உதாசீனம் செய்யா
உள்ளத்தை
வேண்டுகிறேன்

பாரினில் உயர
பட்சி போல்
பறந்து செல்ல
பன்முக முயற்சியை
வேண்டுகிறேன்



அனாதரவற்றோருக்கு
கிள்ளி எறியாமல்
அள்ளி வழங்கும்
கரங்களை
வேண்டுகிறேன்

சாஸ்திரம் அறிந்து
சங்கேத மொழியுணர்ந்து
சாதனை படைக்க
சாணக்கியத்தை
வேண்டுகிறேன்

கனவுகளை மெய்ப்பிக்கும்
கல்வியை தொடர்ந்து
கலைகள் பல கற்க
திறமையை
வேண்டுகிறேன்




காட்டுமிராண்டிகளையும்
கற்புடன் வாழ
வழியமைக்க உதவும்
ஒழுக்கத்தை
வேண்டுகிறேன்

அகிலத்தாரின்
ஆற்றல்கள்
அனைத்தையும் விஞ்சும்
அறிவை
வேண்டுகிறேன்

நூல் போன்ற
நுண்ணிய விடயங்களை
நுட்பமாய் நிறைவேற்றும்
நுணுக்கத்தை
வேண்டுகிறேன்

சக தோழர்களுடன்
சகஜமாய் பழகி
சந்தோசமாய் வாழ
சாதுரியத்தை
வேண்டுகிறேன்

செய்மதியை விட
வேகமாய்
செயலாற்ற
செயற்திறனை
வேண்டுகிறேன்


பொன்னான நேரங்களை
மண்ணாக்காமல்
நன்முறையில் கழித்திட
விவேகத்தை
வேண்டுகிறேன்

இவ்வுலக வாழ்வின்
இறுதி தறுவாயை
இறைவன் பெயர் கூறி
இறையடி சேர
இனிய மரணத்தை
வேண்டுகிறேன் ®

www.ariwahem.blogspot.com

Post Top Ad

Your Ad Spot

Pages