Thursday, August 20, 2015

போலிக் காட்சிகள்

திரை பின்
திரை இடும்
குறை கொண்ட
மானிடம்

அரை குறை
ஆடை எல்லாம்
அலங்காரம் என்பர்,
ஒருவர் நின்று
ஒன்பது பேரை
அடிக்க
ஊரே நின்று
விசிலடிக்கும்
அனாசாரம் எல்லாம்
கலாசாரம் என
காண்பிப்பார்


கண்ட மக்கள் 
கல்லின் போதையோ
எண்ணி மாறியது 
மானிட நாகரிக 
பாதையோ
மாயவலை போர்த்தி 
மந்திர காதல் 
செய்வார்

அதில் எந்திரமும் 
காதல் செயும்
கானல் நீரில் 
காதலை தேடுவர்
இளநீரில் நீந்தியும் 
காட்டுவர்

யாவும் உண்மை என
தாவும் 
மனித கூட்டம்
பாவம் பாலாகி 
பெரும் நட்டம்
மங்கை அலங்கரித்து 
மத்தியில் வெயிப்பர்
உடலை காட்டி ஊன்றி 
தன் கொடி நாட்டி
கோடியில் புரள்வர்
தாசிக்கும் 
இவ்வேசிக்கும் 
வித்தியாசம் யாதோ?

மாமியார் மருமகள் 
சண்டை
வீசி விளையாடாத 
கத்தி சண்டை
கூட்டு குடும்பமும்
கூண்டோடு அழியும்
நாட்டு நடப்பும்
வெறும் ஏட்டில் 
பதியும்
பல பொய்களை
தொட்டிலில் தாலாட்டி
கட்டிலில் காதலை 
காட்டுவர்


சந்தேகப் பட 
கற்று கொடுத்து
சந்தியில் உறவை 
நிறுத்தி
சமாதானம் நாடுவது 
நடிகர்கள் வழக்கம்

திரை பின் நடித்து 
எடுத்த பயிற்சி
நடிகர் கூட்டம் 
மக்கள் முன் நடிக்க
நாகரிகம் நாரி போச்சி

பள்ளியில் படிப்பவனும்
பத்திரமாய் காப்பான்
தந்திரமாய் பணம் 
கேட்கும்
மந்திகளின் புகைப்படத்தை

மூணு மணி நேரம்
குந்திருந்து பார்க்க
கூடி வரும் நேரம்
மூடி வரும் 
கார் மேகம்
பொழிந்தால் அனைத்தும் 
காமம்


மாற்றம் காண 
வந்தவரும்
மாறிப் போனார்
நாரிப் போன 
இச்சாக்கடையில்
நரிகளை நம்பி 
தொலைத்ததால்

#* Azra Nusrah *#

Pages