மதியை மதித்தவன்
வானத்தி்ல் ஏறி
மதியை மிதித்துவந்தான் - தலை
விதியை நம்பி
விழுந்தவனே! நீ
விழுந்தே கிடக்கின்றாய்
வெற்றி எழுத்தாய்
வியர்வையைக் கொண்டவன்
விதியை எழுதுகிறான் - பொய்
நெற்றி எழுத்தை
நம்பியவன் நீ
நீரி்ல் எழுத்தானாய்
கைகளில்தான் உன்
வரும்காலம் அது
கைகளிலின் சக்தியிலே - வெறும்
பொய்களின் வழியில்
போனவனே! அதை
ரேகையில் தேடுகிறாய்
கோளும் நாளும்
குறித்து ராமன்
கொற்றவன் ஆவதற்கு - அந்த
நாளில் என்ன
நடந்தது ? பாவம்
நடந்தான் காட்டுக்கு
காலம் பார்த்து
நடந்தது தானே
கண்ணகி கல்யானம் - அவள்
கோலம் இழந்து
கொண்டதுவோ மலர்
குங்கும அலங்கோலம்
வானத்தி்ல் ஏறி
மதியை மிதித்துவந்தான் - தலை
விதியை நம்பி
விழுந்தவனே! நீ
விழுந்தே கிடக்கின்றாய்
வெற்றி எழுத்தாய்
வியர்வையைக் கொண்டவன்
விதியை எழுதுகிறான் - பொய்
நெற்றி எழுத்தை
நம்பியவன் நீ
நீரி்ல் எழுத்தானாய்
கைகளில்தான் உன்
வரும்காலம் அது
கைகளிலின் சக்தியிலே - வெறும்
பொய்களின் வழியில்
போனவனே! அதை
ரேகையில் தேடுகிறாய்
கோளும் நாளும்
குறித்து ராமன்
கொற்றவன் ஆவதற்கு - அந்த
நாளில் என்ன
நடந்தது ? பாவம்
நடந்தான் காட்டுக்கு
காலம் பார்த்து
நடந்தது தானே
கண்ணகி கல்யானம் - அவள்
கோலம் இழந்து
கொண்டதுவோ மலர்
குங்கும அலங்கோலம்
சாதகம் பார்த்தாய்
சகுனம் பார்த்தாய்
சகலமும் பார்த்தாயே - ஒரு
பாதகம் இன்றி
வாழ்ந்தாயா? வெறும்
பயத்தால் சாகின்றாய்
அழுவது சிலநாள்
சிரிப்பது சிலநாள்
அ னைவர்க்கும் உள்ளதுதான் - கதை
முழுவதும் உனக்கு
முன்னால் தெரிந்தால்
மூச்சில் சுவை ஏது?
*# டாக்டர் அப்துல் ரகுமான் #*