Breaking

Sunday, August 30, 2015

நீங்கள் Facebook பக்கத்திற்கு அட்மினா(Admin) ?அப்டின்னா இது உங்களுக்குதான்

நீங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு
அட்மினாக இருக்கிறீர்களா? இதை
கட்டாயம் வாசியுங்கள்.. லைக் ஐ
அள்ளுங்கள்.


இன்று என்ன முக்கியமான செய்தி ?
என்ற காலம் மாறி இன்றைக்கு எந்த
செய்தி வைரலாக உள்ளது என்று
கேட்கும் நிலை உருவாகிவிட்டது.
இன்றைக்கு சில விஷயங்கள் உலக
அளவில் பலரால் பேசப்பட்டால் அதனை
வைரல் என ஒத்துக் கொள்கிறோம்.
இன்னும் சிலரோ. ஒரு சில
விஷயங்களை வேண்டுமென்றே
அனைவரையும் பேச வைத்து
வைரலாக்குகிறார்கள். 

மேகிக்கு தடை
என்றால் அதுவும் வைரலாகிறது.
இவை உலகம் முழுவதும்
அனைவராலும் படிக்கப்படும் விஷயம்
என்று வைத்துக் கொள்வோம். சம்பந்தமே
இல்லாமல் அஜித்துக்கு குழந்தை
பிறந்தது ‘குட்டி தல’ என்றும், விஜய்
படத்தில் டீஸர் வெளியானது ‘புலி
டீஸர்’ என்றும் எப்படி ட்ரெண்டாகும் என்ற
கேள்வி அனைவருக்குமே இருக்கும்.


பல ஃபேஸ்புக் பக்கங்களின் அட்மின்கள்
சிறப்பாக அன்றைய ட்ரெண்டை
பிடித்து, அதற்கேற்ப தங்கள் பதிவுகளை
பதிவிடுவார்கள். ஆனால் இன்னும்
சிலரோ, “இன்றைக்கு ட்ரெண்டாகும்
விஷயத்தைதான் நானும்
பதிவிடுகிறேன். ஆனால் எனது
பக்கத்தில் அதிக லைக்குகளோ அல்லது
ஷேர்களோ இருப்பதில்லை. அதிகபேர்
பதிவுகளை பார்ப்பதுமில்லை” என்று
புலம்புகிறார்கள்.

ஒரு பதிவு எப்படி அதிக பேரை
சென்றடைகிறது…? ஒரு பக்கத்தை
எப்படி ஒரு அட்மின் மேம்படுத்த
வேண்டும் என்பதை பார்ப்போம்…
ஃபேஸ்புக் எப்படி செயல்படுகிறது?
ஒரு பதிவை பயன்பாட்டாளர்களுக்கு
கொண்டு சேர்க்க சில விஷயங்களை
அடிப்படையாகக் கொண்டு ஃபேஸ்புக்
செயல்படுகிறது. 

உங்கள் பதிவு எந்த
மாதிரியான பதிவாக இருக்கிறது
என்பதை பார்க்கிறது. அது புகைப்படம்,
வீடியோ அல்லது வார்த்தைகளாகதான்
பெரும்பாலும் இருக்கிறது. இதனை
எந்த அளவுக்கு உங்களது பக்கத்தில்
பதிவிடுகிறீர்கள் என்பது முக்கியம்.
நீங்கள் பதிவிடும் தகவல் அனைவரையும்
சென்றடைவது அவ்வளவு எளிதல்ல.


மொத்தம் 18 மில்லியனுக்கும்
அதிகமான பிஸினஸ் பக்கங்கள் பணம்
செலவழித்து தங்களை சந்தைப்படுத்தி
வருகின்றன. இதற்கிடையே உங்களது
பதிவு அனைவரையும் சென்றடைய
சில வழிமுறைகளை தொடர
வேண்டும்.

1}- இணையதளங்களை
பொறுத்தவரையில் நாம் பதிவிடும்
நேரம் என்பது மிகவும் முக்கியம்.
செய்தியின் வேகம் என்பது
அனைவரைவிட வேகமாக இருக்க
வேண்டும். உதாரணமாக இலங்கை
கிரிக்கெட் அணியின் வெற்றி,
கிட்டத்தட்ட வெற்றி பெற்ற சில
நொடிகளில் பதிவிடப்பட வேண்டும்.

அப்போதுதான் அது அதிகப்படியான
பயனீட்டாளர்களை சென்றடையும்.
மேலும் பயனுள்ள தகவல்களை கொண்ட
பொதுவான பதிவுகள் குறிப்பிட்ட
நேரத்தில்தான் அதிகப்படியான நபர்களை
சென்றடையும் என்பதால் அந்த நேரத்தில்
தான் பதிவிடப்பட வேண்டும். 

காலை 6
மணி முதல் மதியம் 3 மணி வரை
பதிவிடும் பதிவுகளை விட இரவு 10
மணி முதல் அதிகாலை 3 மணி வரை
பதிவிடும் பதிவுகள் அதிக
பயனீட்டாளர்களை சென்றடைவதாக
ஃபேஸ்புக் பற்றிய ஆய்வு கூறுகிறது.

அதனால் எந்த பதிவை எப்போது பதிவிட
வேண்டும் என்பதையும் ஆராய்ந்து
பதிவிட வேண்டும்.


2}- ஒரு ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின்
பதிவிடும் பதிவுகள்,
கூடியவரையில் ஒரிஜினல்
பதிவுகளாக இருக்க வேண்டும்.
புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள்
அவர்களால் உருவாக்கப்பட்டவையாக
இருக்க வேண்டும். 

இல்லையெனில்
ஃபேஸ்புக்கின் பயன்பாட்டாளர்கள்
அதிகப்படியானவர்களை
சென்றடையாது. மேலும்
பயன்படுத்துபவர்களும் இது எங்கயோ
பார்த்த பதிவுதானே என பகிராமல்
செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.


3}- பக்கம் ஆரம்பித்து அதிகமான
பதிவுகளை பதிவிடுவதும் மட்டும்
முக்கியமல்ல. பக்கத்தில்
பயன்பாட்டாளர்களுடன் எவ்வளவு
தொடர்பில் இருக்கிறோம் என்பதும்
முக்கியம். 

ஒரு பதிவுக்கு எத்தனை
பேர் கமெண்ட் செய்கிறார்கள்.
எத்தனை பேர் பகிர்கிறார்கள். எத்தனை
பேர் தங்களது சந்தேகங்களை, பக்கத்தின்
இன்பாக்ஸில் கேட்கிறார்கள் என்பதுதான்
விஷயம். அதிக தொடர்பில் இருக்கும்
பக்கங்கள் அதிக பேரை சென்றடையும்.




4}- அதுபோல தகவல்களை சில
இணையதள டூல்களை பயன்படுத்தி
எவ்வளவு அழகான முறையில்
அளிக்கிறோம் என்பதும் அதிக பேரை
சென்றடையும் காரணங்களில்
ஒன்றாகிறது.


5}- ஒரே விஷயத்தை அதிகம் பேர்
பேசும்போது அதற்கான ஒரு
ஹாஷ்டேக்கை உருவாக்குவார்கள்.
அந்த ஹாஷ்டேக் தொடர்பான
செய்திகளை உடனடியாக
வழங்கும்போது. சரியான
பயன்பாட்டாளரை அந்த செய்தி
சென்றடைய அதிக வாய்ப்பு உள்ளது.

♥ பதிவுகளை தடுப்பது என்ன?

1}- பயன்பாட்டாளர் ஒருவர் கிரிக்கெட்
பற்றிய பதிவுகளைதான் அதிகம்
பார்க்கிறார், விரும்புகிறார் என்றால்
ஃபேஸ்புக்கில் அவருக்கு அது
தொடர்பான பதிவுகள்தான் அதிகமாக
தெரியும். அதில் நீங்கள் பதிவிடும்
சினிமா பற்றிய பதிவு தெரிய
வாய்ப்பு மிகவும் குறைவு.

2}- உங்கள் பக்கத்தில் பயன்பாட்டாளர்கள்
அளித்துள்ள எதிர்மறை கருத்துக்களோ,
உங்களை பற்றிய எதிர்மறை
பதிவுகளோ கூட உங்களை பக்கத்தை
அதிகம் பேர் பார்ப்பதை தடுக்கும்.

3}- தனிமனித தாக்குதலால் புகார்
செய்யப்படுவது, செக்ஸ், பாலியல்
தொடர்பான பதிவுகள், ஆபாச
புகைப்படங்கள் ஆகியவற்றை
பயன்படுத்தும்போது அதிகம் பேர்
பார்ப்பதை தடுப்பதுடன், ஃபேஸ்புக்
இதுபோன்ற பதிவுகளை அழிக்கவும்
செய்துவிடுகிறது.

இதுபோன்ற விஷயங்களை கவனத்தில்
கொண்டு உங்கள் பதிவுகளை
கூடியமட்டில் நீங்களே உருவாக்கிய
பதிவாகவும், அதிக பயனுள்ள
தகவலாகவும் அளிக்கும் போது அது
அதிகபேரை சென்றடையும்.
இந்த விஷயங்களை ஒரு ஃபேஸ்புக்
பக்கத்தின் அட்மின் கவனித்தாலே
போதும் அந்த பக்கம் லைக்குகளால்
நிறையும்.






www.ariwahem.blogspot.com


Post Top Ad

Your Ad Spot

Pages