Wednesday, September 23, 2015

தன் குறை தனக்கு தெரியாது

ஒரு மனைவி தன் கணவனிடம்
"ஏங்க நம்ம பக்கத்து வீட்ல புதுசா
குடிவந்த பொம்பலைக்கு ஒழுங்காவே துணி துவைக்க தெரியல, நம்ம ஜன்னல் வழியே எட்டிப் பார்தேன், துணி எல்லாம் அழுக்கா காயப்போட்டு
இருக்கா, அவள் கணவன் அந்த அழுக்கு ஆடையை
எப்படித்தான் போடுரானோ?"
எனக் கூறினாள்.

கணவன் "சரி விடு" என்றான்.
மறுநாளும் இதே போல் கணவனிடம்
பக்கத்து வீட்டு பெண்ணை பற்றி குறைகூறினாள்.
கணவனும் "சரி விடு" என்றான்.

இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் இப்படியே குறை சொன்னாள்.
நான்காம் நாள் வந்து தன் கணவனிடம்

"ஏங்க பக்கத்து வீட்டு பொம்பல
இன்னிக்குதாங்க துணிய ஒழுங்கா
பளிச்ன்னு துவச்சி காயப்போட்டு
இருக்கா" எனச் சொன்னாள்.

கணவன் அவளை பார்த்து சிரித்தான்.
அவள் 
"ஏன் என்னை பார்த்து
சிரிக்கிறீ்கள்?" என கேட்டாள்.
அதற்க்கு கணவன் 
"நீ நம் வீட்டு ஜன்னலின்
கண்ணாடியை துடைப்பதே இல்லை,
நான்தான் இன்று ஜன்னலின்
கண்ணாடியை துடைத்தேன்" என்று
கூறினான்.

அவள் தன்மீது குறையை
வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு
பெண் மீது குறை சொன்னோமே என
வருந்தி தலை குனிந்தாள்.

நம்மிடமே 1008 குறைகள்
இருக்குப்போது அடுத்தவரின்
குறையை துருவி துருவி
ஆராயலாமா? 

♥{ Fazna }♥

Pages