Wednesday, October 14, 2015

வாழ்ந்து பார் ஒருமுறை

வாழ்ந்துதான்
பார்க்கணும்
புறப்படு விருப்போடு
சாதனை
படைத்திடவே
வீறு நடைபோடு

துன்பங்கள்
துயரங்கள்
துரத்தி வரும்
ஏழ்மையும்
வறுமையும்
இணைந்து வரும்

வீட்டுக்குள்ளேயும்
சில நேரம்
துன்பப்புயலடிக்கும்
வீட்டுக்கு
வெளியேயும்
பல நேரம் 
பூகம்பங்கள் வெடிக்கும்

சோதனைகள்
சவால்கள் 
வீடு தேடி வரும்
கண்டு சோர்ந்தால்
அவைகளே
உன்னை சாகடிக்கும்

இரவு பகல்
மாறுவது
இயற்கையின் நியதி
இயலாமையை
விலக்கு மாறும்
உன் தலை விதி

அடிமேல்
அடி அடித்தால்
அம்மியும் நரும்
முயற்சியுடன்
முன்னேறு-உன்
வாழ்வு சிறக்கும்

வாழ்க்கையெனும்
கடலில் 
உன் கைகளை 
துடுப்பாக்க
துன்ப அலைகளையும்
தாண்டி வெற்றியை
தேடிப்புறப்படு

சாவுவரட்டும்
வருமுன் 
வாழ்ந்து பாரு ஒருமுறை
வாழ்வதற்காய்
பயந்து பயந்து 
சாகாதே பல முறை

♥{ பூமதீன் }♥


www.ariwahem.blogspot.com

Pages