Friday, October 23, 2015

கவலையை விடு

நெல்நாற்று கதிர்களைத்
தாங்கி நிற்குதடா
அறுவடைக்குப் பின்
வைக்கப்போர் ஆகுதடா



பருத்திச்செடி 
காய்களைச் சுமந்து
நிற்குதடா
பறித்தப் பின் 
காய்ந்த பருத்திமார்
ஆகுதடா

வாழை குலையுடன் 
தலை வாசலில்
நிற்குதடா
விழா முடிந்த பின் 
கொல்லையில் 
கிடக்குதடா



பந்தியில் 
வாழை இலைக்கு
முதலிடமடா
பந்திக்குப் பின் 
கிடக்கிறது அது
குப்பையிலடா

பிறருக்கு உதவுவது 
குறை இல்லையடா
உனக்கு வாழ்வில் 
குறைவு இல்லையடா

சொந்தங்கள் 
பகையானால் என்னடா
நட்புகள் சொந்தமாகும் 
கவலையை விடுடா

♥} தி. அருணாசலம் {♥

Pages