Wednesday, November 18, 2015

ரயில் பயணம்

ஒட்டி இணைந்த
குழந்தைகள்
ஓடுகின்றன
தண்டவாளத்தில்
எட்டிப் பார்த்தேன்
ஜன்னல் ஓரமாய்
எதிர் திசையில்
பயணிக்கும்
எண்ணற்ற காட்சிகளை

முட்டும் 
முகில்களிலிருந்து 
கொட்டும் 
மழைத்துளிகள் 
என் மேல் பட்டுத்
தரிக்கையில் 
தட்டிக் கழிக்கி்ன்றன 
என் கரங்கள்

கட்டித் தழுவும் 
காற்றுடன் 
மெட்டிசைத்தேன் 
கவியால்
எட்டுத் திக்கு 
சென்றாலும் 
விட்டுச் செல்லா 
கற்பனைகள் 
சிட்டுக் குருவிகள் போல் 
சிறகடிக்கின்றன என் 
மனச் சிறைதனிலே®

Pages