Monday, November 30, 2015

இந்தக் காலம்

அமுத மழை
பொழிந்த காலம்
இன்றில்லை
மகனே...

இது அடிக்கடி
அமில மழை
பொழியும்
கடைசி காலம்

கண் பார்க்கும்
இடமெல்லாம்
காசு விளையாடும்
காலம் மகனே.

இது
கண்ணசரும் நேரம்
சிறுநீரகம்
களவு போகும் காலம்

பிறத்தலும் இறத்தலும்
கொத்துக் கொத்தாய்
நிகழும் காலம்
மகனே

கதிரியக்கத்தால்
மனித இயக்கம்
அதோகதியான
காலம் மகனே...

இது
இயற்கையெனும்
அட்சயப் பாத்திரத்தின்
அடியில்
பெரும் ஓட்டை 
விழுந்த காலம்

இது
மனித இனம்
முதுகில்
மருந்துப் பொட்டலம்
சுமக்கும் காலம்

நாளை
புதிதாய் ஒரு
கவலை வரும்
மகனே...

(சுவாசக்)காற்று
வாங்கப் போனேன்
கடை மூடிக்கிடக்கிறது
என்ற.நிலமை வரும்

அகல
பூவிழி விரித்து
ஆச்சரியப் பட்டிருக்க
நேரமில்லை மகனே

புறப்படு நீ
பூமியில் வாழ்வதென்றால்
போராடும்
திறன் வேண்டும்..!

♥{ றாபி }♥

Pages