Sunday, December 27, 2015

நான் Mastercard  ஒன்றை இணையத்தில் விண்ணப்பித்து இலவசமாகப் பெற்றுக்கொண்டேன். நீங்களும் Mastercard  ஒன்றை இலவசமாக பெற விரும்புகின்றீர்களாஅப்படியானால் இப்பதிவை படியுங்கள் Mastercard  ஒன்றை இலவசமாக பெற்றிடுங்கள்


Mastercard  ஒன்றை அனைவரும் இணையத்தில் இருந்தே வீட்டிற்கு இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இணைய வணிகத்தில் கால்பதிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த Master card பற்றிய அறிமுகம் இருக்கும். இப்பதிவு அறிவு சார்ந்த பதிவாகும். ந்த அட்டையை  பெறுவது, பயன்படுத்துவது  அனைத்தும் உங்கள் நாட்டு நிதி துறை  சட்டங்களுக்கு உட்பட்டது என்பதுடன்.  இப்பதிவு இலங்கை நிதி சட்டங்களை அடிப்படையாக வைத்து  பதியப்படுகிறது என்பதை கவனிக்க.

அறிமுகம் :
மாஸ்டர்கார்டு (MasterCard ) ஓர் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் ஒரு பொதுப் பங்கு நிறுவனமாக உள்ளது. இது கட்டணமுறைகள்,  கடனட்டைகள் போன்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது.

இணையத்தில் இதன் முக்கியத்துவம்:
இணையத்தில் Visa அட்டைகளுக்கு ஒப்பாக பயன்படுத்தப்படுகிறது. பல நாட்டு வங்கிகளும் இதை வழங்குகிறது. இணையத்தின் பெரும்பாலான சேவைகள் இந்த அட்டையை ஆதரிக்கின்றன. துரதிஷ்டவசமாக Adsense   இவ்ட்டை முறைகள் எதனையும் ஆதரிப்பதில்லை.






Payoneer Master Card :
Payoneer  card இணையத் தளத்தில் பதிவு செய்து ஒரு வாரத்தில் New York  நகரத்தில் இருந்து தபாலில் இலவசமாக  அனுப்புவார்கள்
Payoneer Card  ன் நன்மைகள்:
1. Infolinks, Freelancer போன்ற சேவைகள் மூலம் பணம் பெறுபவர்கள் நேரடியாக அருகில் உள்ள ATM இல் சென்று பணம் பெற முடியும்.
2. வங்கிக்கு செல்லாமல் வங்கி கணக்கு இல்லாமல் master card பெறலாம்.

Payoneer கணக்கை ஆரம்பிக்கும் வழிமுறைகள் இதோ!
1) இந்த Link Click செய்யுங்கள்
payoneer.com





2)  Sign up Now என்பதை Click செய்யுங்கள்



3) உங்கள் பெயர் , email address , பிறந்த திகதி என்பற்றை வெற்றிடத்தில் நிரப்புங்கள் .

பின் NEXT என்ற பட்டனை அழுத்தவும்.




4)   உங்களது நாடு , முகவரி , நகரம் மற்றும் Postal code என்பற்றை வெற்றிடத்தில் நிரப்புங்கள்
# Postal code தெரியாத இலங்கை நாட்டவர்கள் கீழே உள்ள Link ல் உங்களுடைய ஊர் தபால் நிலையத்தின் postal code ஐ பெறலாம்.
link:

postal code.lk

பின் NEXT என்ற பட்டனை அழுத்தவும்.



5) User name என்ற இடத்தில் உங்கள் email ஐயும் கீழே password ஐ இரண்டு தரம் பதிவு செய்யுங்கள்
Security question ல் ஏதாவதொரு கேள்வியை தெரிவு செய்து உங்கள் ஞாபகத்தில் இருக்கக்கூடிய பெயரொன்ரை பதிலாக கொடுங்கள்.

பின் NEXT என்ற பட்டனை அழுத்தவும்.




6) Id type : என்ற இடத்தில் national ID என்பதை தெரிவு செய்யுங்கள்
தேசிய அடையாள அட்டையில் அச்சிடப்பட்டுள்ள பெயரை கொடுக்கவும்.
உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் , நாட்டின் பெயரையும் கொடுக்கவும்

பின் படத்தில் காட்டியவாறு I agree என தொடங்கும் மூன்று நிபந்தனைகளையும் Tick செய்யவும்.

பின் ORDER என்ற பட்டனை அழுத்தவும்.





விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்தால் கடைசியில் இந்த படம் போன்ற மாதிரியை பெற்றுக்கொள்வீர்கள்.


உங்களுடைய கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், அவர்களிடம் இருந்து ஒரு mail வரும். அதில் ஒரு சில கேள்வியையும் , உங்களுடை N.I.C கேட்டு இருப்பார்கள் , உங்களுடை N.I.C  ஐ  Scan அல்லது Mobile மூலம் படம் பிடித்து , Upload செய்து கொள்ளுங்கள்.இதை கொடுத்தால் மட்டுமே, நீங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.


இப்போது,  உங்கள் பெயரில் ஒரு Master card இணை உங்கள் வீட்டுக்கு அவர்கள் அனுப்பி வைப்பார்கள். இது எப்படியும் 2-3 வாரத்திற்குல் உங்களுக்கு கிடைத்துவிடும். அந்த Card இல் 16 இலக்கம் மேலுக்கு எழுதப்பட்டிருக்கும். அதில் இறுதியில் முடியும் 4 இலக்கத்தை அவர்கள் Verification இற்காக கேட்பார்கள். Card பெற்ற பின் அதை கொடுத்து agree என தொடங்கும் நிபந்தனைகளை Tick செய்து Activate செய்து கொள்ளுங்கள்.





சரிஇப்போது  நீங்கள் payoneer master card  ஒன்றுக்கு சொந்தக்காரர்.

 Payoneer Card  இன் மட்டுப்பாடுகள்:
1. US payment இணைப்பு இல்லாமல் உங்களால் Recharge செய்ய முடியாமல் இருப்பதே இதன் மிகப்பெரும் குறை. என்றாலும் உங்களுக்கு பணம் தரப்போகும் நிறுவனம் அவர்களுடன் இணைக்கப்பட்டது என்பதால் பிரச்சனை இல்லை.
2. குறிப்பிட்ட சில நிறுவனங்களே இதில் இணைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக அனைவரும் அறிந்த நிறுவனங்கள் Freelancer, Infolinks ஆகும்.
3. பண மாற்றத்தில் சில மேலதிக சேவை கட்டணம் பெறப்படுகிறது. பொருட்கள் வாங்கும் போது இவை இல்லை.

எமது அடுத்த பதிவில் paypal கணக்கு எவ்வாறு ஆரம்பிப்பது? Paypal உடன் payoneer கணக்கை எவ்வாறு இணைப்பது? Payoneer master card இற்கு பணம் அனுப்பது எவ்வாறு போன்றவற்றை பதிவிடுவேன். காத்திருங்கள்.


payoneer கணக்கை ஆரம்பிக்கும் முறை பற்றிய youtube காணொளிக்கான

அந்த காணொளியை(Video) Download செய்வதற்கான


*குறிப்பு:
மேலே தரப்பட்டுள்ள அனைத்து Link களையும் Click செய்தவுடன் விளம்பரமொன்று காண்பிக்கப்படும் 5 செக்கன்கள் காத்திருந்து SKIP AD என்பதை Click செய்தால் உரிய வலைத்தளத்தை பெற்றுக்கொள்ள முடியும்.







இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
பதிவிற்கான Link:
   

www.ariwahem.blogspot.com








Friday, December 25, 2015

பணமெனும் காகிதத்தில்
அலையோடு
போராடும் கப்பலாய்
துடுப்பில்ல ஓடமாய்
மனித வாழ்கை

புத்தியிருந்தும்
பணமின்றி
யுக்தியெல்லாம்
சக்தியற்று போகுது

வித்திட்ட 
மனிதெரெல்லாம்
விலைபேசி பார்க்குது
அறிவியல் வித்தகரையும்
கோழையாக்கி காட்டுது

பெற்றவரையும்
உற்றவரையும்
உருகெடுத்து
உறவை பறித்து
பந்த பாசம் எல்லாம்
காசுதான் பேசுது

கரு கொடுத்தவன்
உருபார்க்க பக்கத்தில்
தந்தையில்லை
பணமோகத்தில்.
அவனது யாகம்

பெண்மையெல்லாம்
பணதாகத்தில்
விலையாகி போகுது.
உண்மையாய் 
உழைக்க போன பெண்ணும்
பணநாட்டில்
கொடுமையிலும்.
கொலைத்தண்டனையிலும்
உயிரை வேட்டையாடுது

பெத்த பிள்ளையும்
பணத்துக்கு 
விலையா போகுது
மனித குணத்தை
தொலைத்தே வாழுது

பிணத்தையும் பேரம்
பேசி பார்க்குது
வையகத்தின் வாழ்க்கை
பணத்திற்க்கு
விலையாகி போனது
பண மையத்தில் புள்ளி
போட்டே உலகம் 
கோலம் போடுது

♥{ ஸியா }♥


Friday, December 11, 2015

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார
மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார் ” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே"


"தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது ? என்று

அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு”
அறிஞர் மிக வருத்தமடைந்தார்.

பையனை அழைத்தார். கேட்டார் "தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” பையன் சொன்னான்”தங்கம்" அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”


பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு

கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ” ”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி
இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால்
அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!


வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்

♥} Haris Jamaly {♥

Saturday, December 5, 2015

சில பேர் கல்யாணத்தக்கு பண்ற
செலவுல பாதியைக் கூட
பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை

பணக்கார பங்காளக்களின்
பாத்ரூம் பரப்பளவை விட
பல கோடி குடிசைகளின்
பரப்பளவு சின்னது

சில பெண்களின் செருப்பு
எண்ணிக்கையளவு கூட பலபெண்களிடம்
சேலைகள் இல்லை

ராணுவ பட்ஜெட்டின்
அளவை விட இங்கு
நடக்கும் ஊழல்களின்
மதிப்பு அதிகம்


சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட்
போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் 
ஒரு வருஷசம்பளம்

சிலர் வயிறு குறைய 
வேண்டுமென 
கஷ்டப் படுகிறார்கள் 
பலர் வயிறு
நிறைய வேண்டுமென
கஷ்டப்படுகிறார்கள்

சட்ட புத்தகத்தில் இருக்கும் 
நீதிப் பிரிவுகளை விட 
இங்கு இருக்கும்
சாதிப் பிரிவுகள் அதிகம்

சிலர் கிரெடிட் கார்டுகளை
நம்பியும்,பலர் 
சமுர்த்தி கார்டுகளை
நம்பியும் இருக்கிறார்கள்

நட்சத்திர உணவு விடுதியின் 
சிக்கன் விலையில் 
ஒரு குடும்பம் ஒரு மாதம்
சாப்பிடலாம்

பகலில் கூட ஏசி 
ஓடும் வீடுகளும்
இரவில் கூட விளக்கு 
எரியாவீடுகளும் 
இங்குள்ளன

கனவு போன்ற 
வாழ்க்கை வாழ்பவர்களும்
கனவில் மட்டுமே
வாழ்பவர்களும் வாழும்
இங்குள்ளனர்

Monday, November 30, 2015

அமுத மழை
பொழிந்த காலம்
இன்றில்லை
மகனே...

இது அடிக்கடி
அமில மழை
பொழியும்
கடைசி காலம்

கண் பார்க்கும்
இடமெல்லாம்
காசு விளையாடும்
காலம் மகனே.

இது
கண்ணசரும் நேரம்
சிறுநீரகம்
களவு போகும் காலம்

பிறத்தலும் இறத்தலும்
கொத்துக் கொத்தாய்
நிகழும் காலம்
மகனே

கதிரியக்கத்தால்
மனித இயக்கம்
அதோகதியான
காலம் மகனே...

இது
இயற்கையெனும்
அட்சயப் பாத்திரத்தின்
அடியில்
பெரும் ஓட்டை 
விழுந்த காலம்

இது
மனித இனம்
முதுகில்
மருந்துப் பொட்டலம்
சுமக்கும் காலம்

நாளை
புதிதாய் ஒரு
கவலை வரும்
மகனே...

(சுவாசக்)காற்று
வாங்கப் போனேன்
கடை மூடிக்கிடக்கிறது
என்ற.நிலமை வரும்

அகல
பூவிழி விரித்து
ஆச்சரியப் பட்டிருக்க
நேரமில்லை மகனே

புறப்படு நீ
பூமியில் வாழ்வதென்றால்
போராடும்
திறன் வேண்டும்..!

♥{ றாபி }♥

Wednesday, November 25, 2015

நடக்கும் , ஓடும் , குதிக்கும் குழந்தைகளை நாம் கண்டுள்ளோம் பறக்கும் குழந்தைகளை நீங்கள் நிஜ வாழ்வில் பார்த்ததுண்டா? மனித குழந்தைகளால் பறக்க முடியுமா?
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை


மனவளர்ச்சி குன்றிய தனது இரண்டு வயது மகன், பல்வேறு வகையான உயரங்களில் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை, தந்தையொருவர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.




இவ்வாறு படங்களில் காட்சியளிக்கும் குழந்தைக்கு பறக்கும் சக்தியுண்டு என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "எலன் லோரன்ஸ்" என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறான புகைப்படங்களை

வெளியிட்டுள்ளார் . இது எந்தளவுக்கு உண்மையானது என்றும் தெரியாதிருப்பினும் இவருடைய மகனுக்கு 18 மாதங்கள்  நிறைவடைந்தவுடனேயே, இவ்வாறான புகைப்படங்களை வெளியிடுவதற்கு அவர் ஆர்வம்காட்டி வந்துள்ளார்.



தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள படங்களில், வில் என்று அழைக்கப்படும் புகைப்படவியலாளரின் மகன், கலிபோர்னியாவிலுள்ள கோல்டன் கேட் பாலம் மற்றும் அங்குள்ள தேசிய பூங்கா போன்ற இடங்களில், குறித்தவொரு உயரத்தில் அந்தரத்தில் பறந்துகொண்டிருப்பதை போன்ற படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


"எனது மகனுக்கு குறையுண்டு என்னும் அதே நேரத்தில், அவன் எங்களுக்கொரு ஆசீர்வாதமாக பிறந்துள்ளான் என்றும் எனது மகன் மனவளர்ச்சி குன்றியவனாக இருந்தாலும் அவனுக்கு ஒரு சக்தியுண்டு" என்றும் வில்லின் தந்தை தெரிவித்துள்ளார்



மேலும் இந்த புகைப்படங்களை கண்டுள்ள கலை இயக்குனர் ஒருவர், இந்த புகைப்படங்களை கொண்டு 2016ஆம் ஆண்டுக்கான நாட்காட்டிகளை தாயாரித்து, இதை போன்று மனவளர்ச்சி குன்றிய பாடசாலைகளின் வருமானத்துக்காக நன்கொடையாக கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளார் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



வில் பிறந்த பின்னர் அவன், என்னுடைய வயிற்றில் சாய்ந்திருக்கும் போது, அவனுடைய கைகளும் கால்களும் பறக்கும்படியாக உயர்ந்து செல்லும். அவன் சாதாரண குழந்தைகளை போன்று இருக்கவில்லை' என்றும்

லோரண்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரிந்து கொள்வதற்காக நாம் வைத்தியரிடம் கொண்டு சென்றோம். 


அவருடைய எண்ணங்கள், மனதில் தோன்றும் உணர்வுகள் அனைத்தும் சாதகமானவை அல்ல என்றும் இவர் மனவளர்ச்சி குன்றியவராகவே இருப்பார் என்றும் வைத்தியர்கள் தெரிவித்தார்கள் என்றும் வில்லின்
தந்தை தெரிவித்துள்ளார்.

இக்குழந்தை பற்றிய மேலதிக தகவல்களை பெற கீழுள்ள இணைப்பிற்கு சென்று பாருங்கள்

Pages