Wednesday, April 20, 2016

Google இத்தனை சேவைகளை வழங்குகிறதா?

கூகுளின் பல சேவைகளை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவற்றுள் youtube , blogger, google drive, gmail, google+ ,goggle docs என்பவையும் உள்ளடங்கும் கூகுள் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை. Google தேடியந்திரமானது வெறும் இணையதளங்களை தேடித்தருவதுடன் மாத்திரம் நின்றுவிடாது பல்வேறு தகவல்களையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ள உதவுகின்றது.

நீங்கள் கூகுள் பற்றி தேடாவிட்டாலும் கூகுள் உங்களை தேடி வரும் என்றே சொல்ல வேண்டும்.
கூகுள் பல்வேறு வடிவங்களில் அதன் சேவையினை பயனர்களுக்கு வழங்கிவந்தாலும் அன்று தொடக்கம் இன்றுவரை தேடல் இயந்திரத்தின் முதல்வனாகவே இருந்து வருகிறது இந்த கூகுள். தேடல்களுக்கான சிறந்த முடிவுகளை Google தருவதோடு இன்னும் இலகுவாக தேடல் முடிவுகளை அடைந்திட கூகுள் பல்வேறு சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


கூகுள் தேடியந்திரத்தில் அண்மையிலும் கூட ஏராளமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியின் ஸ்கோர் விபரங்களை நேரடியாக அறியும் வசதி, கூகுள் மூலம் ரசமட்டம்அல்லது நீர்மட்டம் போன்றவற்றைபெறுவதற்கான வசதி, கூகுளின்ஆழமான தேடல் முடிவுகள், போன்றன
அவற்றுள் சிலவாகும்.

♥ பறவை, மிருகங்களின் சப்தத்தை கேட்கலாம் :
இந்த வசதி மூலம் ஆந்தை, கோழி,யானை, பூனை, குதிரைபோன்றவைகள் உட்பட 15 க்கும் மேற்பட்டவிலங்குகளின் சப்தத்தை கூகுளின் முகப்புப் பக்கம் மூலமே கேட்க முடியும்.
நீங்களும் இந்த வசதியை பெறுவதற்கு கூகுளில் குறிப்பிட்ட விலங்கின் பெயருடன் Sound என்பதை தட்டச் செய்யுங்கள்
உதாரணம்: யானையின் சப்தத்தை அறிய Elephant Sound என தட்டச்சு செய்தால் அதன் உருவப் படத்துடன் அதன் சப்தத்தை கேட்பதற்கான வசதி உங்களுக்கு தோன்றும்.

அதே நேரம் ஏனைய மிருகங்களின் சப்தங்களும் கீழே பட்டியல் படுத்தி தரப்பட்டுள்ளதை உங்களால் அவதானிக்கலாம்.
தற்பொழுது குறிப்பிட்ட சில விலங்குகளின் ஓசைகளே பட்டியல் படுதப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில்
பல நூற்றுக்கணக்கான மிருகங்களின் ஓசைகளை கூகுளின் மூலம் அறிந்து கொள்வதற்கான வசதி தரப்படலாம்.


♥ கூகுள் மூலம் எண்களை எழுத்துக்களாக மாற்றலாம்:
கூகுள் தேடியந்திரம் மூலம் ஒன்று தொடக்கம் ஒரு ட்ரில்லியன் (1000000000000) வரையான எண்களை எழுத்துக்களாக மாற்றிக் கொள்ள வசதி தரப்பட்டுள்ளது. இதற்கு குறிப்பிட்ட எண்களுக்கு பின்னால் =English என தட்டச்சு செய்யவேண்டும்.
உதாரணம்: 1000 என்பதை எழுத்து வடிவிவில் பெற்றுக்கொள்ள 1000=English என தட்டச்சு செய்ய வேண்டும்.

♥ சொற்களை உடனடியாக தமிழில் மொழி பெயர்துக் கொள்ளலாம்:
பொருள் தெரியாத ஆங்கில சொல்லுடன் In Tamil எனும் சொல்லை தட்டச்சு செய்வதன் மூலம் அவற்றுக்கான தமிழ் மொழி பெயர்ப்பை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.
உதாரணம்: Thanks எனும் ஆங்கில சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பை உடனடியா கூகுள் தளம் மூலம் பெற்றுக் கொள்வதற்கு Thanks in Tamil என தட்டச்சு செய்யலாம்

♥ கூகுள் தேடியந்திரத்தில் i'm feeling curious என்றோ அல்லது fun facts என்றோ தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் ஏராளமான புதிர்களுக்கு உடனடியாக கூகுளின் முகப்புப் பக்கத்திலேயே விடைகளை பெறமுடியும். அவைகள் ஒவ்வொன்றும் ஒருவினாவுக்கு விடையாக அமைந்திருப்பதுடன் அவைகள் பெறப்பட்ட தளங்களின் இணைப்பும் கீழே தரப்படுகின்றது. அத்துடன் மேற்குறிப்பிட்ட முறையில் தேடிப்பெறும் தேடல் முடிவின் கீழே தரப்படும் ASK ANOTHER QUESTION என்பதை சுட்டுவதன் மூலம் இன்னும் பல சுவாரஷ்யமான உண்மைகளை தொடர்ச்சியாக பெறலாம்.


♥ குறிப்பிட்ட ஓரிடத்தின் காலநிலையை பற்றி அறியலாம் :
Weather என தட்டச்சு செய்து காலநிலைஅறிய வேண்டிய இடத்தினை தட்டச்சு செய்யுங்கள்
உதாரணம் : இலங்கையின் நகரம் Colombo இன் காலநிலையை அறிய வேண்டுமெனின் Weather colombo என தட்டச்சு செய்ய வேண்டும்

♥ Google ஐ ஒரு கணிப்பானாக பயன்படுத்தலாம் :
கணிக்க வேண்டிய சமன்பாட்டை Google இல் தட்டச்சு செயய்யுங்கள்
உதாரணம் : 5*5(9+1) இதனை Google இடம் கொடுத்துப் பாருங்கள் துல்லியமாக 250 என சொல்லும்.

♥ ஓர் அலகிலிருந்து இன்னுமோர் அலகுக்கு மாற்றலாம்:
கிராம் இனை கிலோகிராம் இற்கு மாற்ற 3500g to kg தட்டச்சு செய்யுங்கள்
இதே போல வெப்பநிலை, நீளம், வேகம், ஒலி, இடம்,நேரம், சேமிப்பகம், என ஏராளமான அலகுகளை மாற்றிக் கொள்ள முடியும்.

♥ தற்போதைய உங்கள் வலையமைப்பின் முகவரியை கண்டறியலாம்:
Google தேடல் பக்கத்தில் My Ip என தட்டச்சு செய்யுங்கள்.

♥ குறிப்பிட்ட ஓர் இடத்தின் நேரத்தை அறியலாம் :
Time என தட்டச்சு செய்து குறிப்பிட்ட இடத்தினை தட்டச்ச செய்யுங்கள்
உதாரணம் : Time America

♥ நாணய மாற்று விகிதத்தை அறியலாம் :
குறிப்பிட்ட நாட்டு நாணயத்தை அடையாளப் படுத்தப்படும் குறியீட்டுடன் பின்வரும் அமைப்பில் தட்டச்சு செய்யுங்கள்
உதாரணம் : 10 அமெரிக்க டொலர்களை இலங்கை ரூபாவுக்கு மாற்றிக் கொள்ள 10 USD to SLR என தட்டச்சு செய்யுங்கள்

♥ ஒரு சொல்லின் பொருளை அறியலாம் :
Define என தட்டச்சுசெய்து பொருளறிய வேண்டிய சொல்லை தட்டச்சு செய்யுங்கள்
உதாரணம் :Leadership என்பதன் பொருளறிய வேண்டும் எனின் define leadership என தட்டச்சு செய்யுங்கள்

♥ ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் சனத்தொகைய அறியலாம் :
Population என தட்டச்சு செய்து சனத்தொகையை அறிய வேண்டிய நாட்டை அல்லது பிரதேசத்தை தட்டச்சு செய்யுங்கள்.
உதாரணம் :
Population srilanka என தட்டச்சு செய்யுங்கள்


♥ ஏதாவது ஒன்றினை தேடிப் பெருவதற்காக Google தளத்தினை திறந்தால் அது உங்கள் நாட்டிற்குரிய Domain இற்கு அதுதானாகவே மாறிக்கொள்ளும். அதாவது நீங்கள் இலங்கையில் இருந்து Google தளத்தை பயன்படுத்தும் போது www.google.lk என்றவாறு தோன்றும். இது போல் நாட்டுக்கு நாடு அதன் Domain Name மாறுபடும் எனவே நீங்கள் குறிப்பிட்ட ஏதாவது ஒன்றுதொடர்பான தகவலை தேடிப்பெறும்போது அதன் தேடல் முடிவானது குறிப்பிட்ட நாட்டை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கும்.
உதாரணம் : www.google.lk மூலம் PizzaHut என்பதை தேடும் போது அது இலங்கையில் உள்ள Pizza Hut தொடர்பானவிடயங்களை தரும்.

♥ இருந்தாலும் இந்த Pizza Hut தொடர்பான பொதுவான தேடல் முடிவை பெறவிரும்பினால் என்ன செய்யலாம்?
இதற்கு Google.com என்பதுடன் ncr என்பதை சேர்த்து Google இன் முகவரியை அமைக்க வேண்டும் அவ்வாறு அமைத்தால் http://www.google.com/ncr என்றவாறு அமையும்.(ncr = no country redirect) இதன்போது Google இன் Domain Name நாட்டுக்கு நாடு மாற்றமடையாது இதன் போது எந்த ஒரு தேடல் முடிவினதும் பொதுவான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்


♥ எமக்குத் தேவையான குறிப்பிட்ட ஒரே வடிவத்தை கொண்ட கோப்புக்களை தேடிப்பெறலாம் :
நீங்கள் குறிப்பிட்ட ஒரே வடிவத்தினை கொண்ட ஆவணங்கள் அல்லது கோப்புக்களை Google இல் தேடிப்பெறவேண்டும் எனின் நீங்கள் பெறவிரும்பும் கோப்பின் பெயரை தட்டச்சு பின் file type ஐ கொடுக்க வேண்டும்
உதாரணம் .mp4 வடிவில் அமைந்த தமிழ் திரைப்படங்களை Google இல் தேட வேண்டும் எனின் Tamil Movie filetype:mp4 என தட்டச்சு செய்து தேட வேண்டும்

♥ ஒரு தகவலை தேடிப்பெற முயற்சிக்கும் போது நீங்கள் தேடும் ஒரு சொல்லுடன் நீங்கள் தேடாத இன்னுமொரு சொல்லும் தேடல் முடிவில் வந்தால்
உதாரணத்திற்கு நீங்கள் Google தேடியந்திரத்தின் மூலம் "அகத்தின்அழகு" என்ற சொற்களைக் கொண்ட தளங்களை பார்க்க விரும்புகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் நீங்கள் அகத்தின் அழகு என தட்டச்சு செய்து தேடும் போது "முகத்தில் தெரியும்"என்ற சொல்லும் அதனுடன் தானாகவே
சேர்ந்து வருவதனை அவதானிப்பீர்கள். அதாவது தேடல் முடிவு "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என அமைந்திருக்கும். எனவே இங்கு முகத்தில் தெரியும் என்ற சொல் உங்கள் தேடல் முடிவில் வராமல்"அகத்தின் அழகு" என்ற சொற்களைக்கொண்ட தளங்கள் மாத்திரம் தேடல்முடிவில் தேன்ற வேண்டும் எனின் முகத்தில் தெரியும் என்ற சொல்லுக்கு முன்னாள் கழித்தல் குறியீட்டை (Minus-) இட்டு தேடலை மேற்கொள்ளலாம்.
உதாரணம் :
அகத்தின் அழகு -முகத்தில் தெரியும்.


♥ ஒரு ஆங்கில சொல், அது எவ்வாறுஉருவானது என்பதை அறியலாம் :
குறிப்பிட்ட ஒரு ஆங்கில சொல், அது எவ்வாறு உருவானது என்பதை Google தளம் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதாவது நீங்கள் அறிய வேண்டிய சொல்லுடன் etymology என தட்டச்சு செய்து தேடுவதன் மூலம் இதனை அறிந்து கொள்ள முடியும்.
உதாரணம் : technology எனும் சொல் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதனை அறிய Google தேடியந்திரத்தில் technologyetymology என தட்டச்சு செய்ய வேண்டும்

♥ ஒரு நாட்டின் நேரத்துடன் இன்னுமொரு நாட்டினது நேரத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்:
உதாரணம்: கொழும்பில் பிற்பகல் 4 மணி ஆக இருக்கும் அதே நேரம் மலேசியாவில் நேரம் என்ன? என்பதை அறிய விரும்பினால் 4:00 pm colombo in Malaysia என Google தேடியந்திரத்தில் தட்டச்சு செய்து தேடிப்பாருங்கள்.

புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அன்று தொடக்கம் இன்று வரை இணையத் தேடலின் அரசன் நான் தான் என்பதைஉறுதி செய்து கொண்டே வருகிறது.




♥whatsapp வழங்கும் புதிய பாதுகாப்பு முறை இதுதான்


♥ உங்கள் ஸ்மார்ட் போனில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே மாதிரியான அப்ளிகேஸன்களை பயன்படுத்துவது எப்படி?



♥ Whatsapp ல் தடித்த (BOLD), வளைந்த (ITALIC) மற்றும் குறுக்குக் கோடிட்டஎழுத்துக்களை எழுதலாம் (Playstore ல்கிடைக்காத Whatsapp பதிப்பு இங்கே)


If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.



Pages