Thursday, July 21, 2016

உங்கள் கணனியில் காணப்படும் Snipping Tool  பற்றி தெரியுமா?
அதன் பயன்பாடு என்ன?
அதை எப்படி பயன்படுத்துவது ?




நீங்கள் உங்கள் கணனியில் செய்யும் வேலைகலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்

மேலே நான் வினவியுள்ள கேள்விகளுக்கு கீழே  உள்ள காணொளிக் காட்சி (Video) செய்முறை விளக்கத்துடன் பதில் தருகிறது

கட்டாயம் பாருங்கள்



இக் காணொளியை தரவிறக்கம் (Download) செய்வதற்கான இணைப்பு (Link) :

Download.lk



Facebook ல் எங்களது  Ariwaham அறிவகம் பக்கத்தை Like செய்து பல சுவாரசியமான தொழிநுட்ப தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள்





*குறிப்பு :
மேலே வழங்கப்பட்டுள்ள அனைத்து LINK களையும் Click செய்தவுடன் விளம்பரமொன்று காண்பிக்கப்படும் 5 செக்கன்கள் காத்த்திருந்து SKIP AD என்பதை Click செய்தால் உரிய வலைப் பக்கத்தை பெற்றுக் கொள்ளலாம்










If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.


Friday, July 8, 2016

காடுவெட்டி கஷ்டப்பட்டு
வேலை செய்வான்
ஒருத்தன்
காலுக்கு மேல்
கால் போட்டதை
அனுபவிப்பான்
கிறுக்கன்

சேனையில் அமர்ந்த
குருவிக்கும்
கேட்பான் வரி
சேர்த்து வச்ச
கருப்பு பணத்துல
சேதி வைப்பான் நரி


வள்ளாலா வாழ்ந்தா
வாட்டுவான் அவனை
உள்ளதை வாங்கும் வரை
நொங்கெடுப்பான் உனை

சாட்டையில அடியடிச்சி
வேலை வாங்கியது
பாவக்காலம்
சாகும் வரை உழைச்சி
தின்னும் இது
உன் சாபக்காலம்


பாட்டு சொல்லி
மெட்டமைச்சா பட்ட
துயர்தான் மறக்குமா?
பரதேசி போல்
நீ வாழ்ந்தா
உலகம் தான் மதிக்குமா?

ஏட்டுல கற்ற கல்வி
ஏழைப் பசிக்கு
உதவுமா?
ஏங்கி நீ சோர்ந்து போனால்
ஏற்றம் தான்
கிடைக்குமா?


எதையும் எளிதென்று
எண்ணினால்
இருக்குமா பயம்
உலகிலே நீ
உழைக்காவிட்டால்,
கிடைக்குமா ஜெயம்

மனதை
உறுதியா வை
மறுமலர்ச்சியில்
காலை வை
உருகாமல்
இருக்குமா நெய்
உனக்குதவி
உன் கை

♥{ கவித்தென்றல் ஏரூர் }♥

Pages