Friday, July 8, 2016

உறுதி எடு

காடுவெட்டி கஷ்டப்பட்டு
வேலை செய்வான்
ஒருத்தன்
காலுக்கு மேல்
கால் போட்டதை
அனுபவிப்பான்
கிறுக்கன்

சேனையில் அமர்ந்த
குருவிக்கும்
கேட்பான் வரி
சேர்த்து வச்ச
கருப்பு பணத்துல
சேதி வைப்பான் நரி


வள்ளாலா வாழ்ந்தா
வாட்டுவான் அவனை
உள்ளதை வாங்கும் வரை
நொங்கெடுப்பான் உனை

சாட்டையில அடியடிச்சி
வேலை வாங்கியது
பாவக்காலம்
சாகும் வரை உழைச்சி
தின்னும் இது
உன் சாபக்காலம்


பாட்டு சொல்லி
மெட்டமைச்சா பட்ட
துயர்தான் மறக்குமா?
பரதேசி போல்
நீ வாழ்ந்தா
உலகம் தான் மதிக்குமா?

ஏட்டுல கற்ற கல்வி
ஏழைப் பசிக்கு
உதவுமா?
ஏங்கி நீ சோர்ந்து போனால்
ஏற்றம் தான்
கிடைக்குமா?


எதையும் எளிதென்று
எண்ணினால்
இருக்குமா பயம்
உலகிலே நீ
உழைக்காவிட்டால்,
கிடைக்குமா ஜெயம்

மனதை
உறுதியா வை
மறுமலர்ச்சியில்
காலை வை
உருகாமல்
இருக்குமா நெய்
உனக்குதவி
உன் கை

♥{ கவித்தென்றல் ஏரூர் }♥

Pages