Breaking

Thursday, August 4, 2016

அகிலத்தை ஆளும் Pokemon Go வினது இரகசியம் இதுதான்

உலகில் விளையாட விருப்பமானவர்கள் அதிகம் பேர் வாழுகிறார்கள். தற்போது mobile game களை மட்டுமே பெரும்பாலானோர் விரும்பி விளையாடுகின்றனர். Pokemon Go என்ற Game தற்போது விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் அதிகம் புலங்குகின்றது.



Pokémon Go (போகிமொன் கோ). இது ஒரு செல்லிடத் தொலைபேசி விளையாட்டு (Mobile phone game). பொக்கெட் மொன்ஸ்டர்ஸ் (Pocket Monsters) என்பதன்Pokémon சுருக்கமே ஆகியதாம். இவ் விளையாட்டில், Pokémon உலகில் சுற்றி மறைந்திருககும் சிறிய போகிமான்களை தேடிக் கண்டுபிடித்து நம் வசப்படுத்த வேண்டும். பின்னர் அவற்றுக்கு பயிற்சியளித்து அவற்றின் சக்திகளை அதிகரித்து மற்ற போகிமான்களுடன் சண்டையிட்டு அதன்மூலம் மேலும் பலமான போகிமான்களை பெற வேண்டும். போகிமானை விளையாடும் மனிதர்கள் trainers (பயிற்றுநர்கள்) என அழைக்கப்படுகின்றனர்.

1996 ஆம் ஆண்டு போகிமான் ஒரு காகித அட்டை விளையாட்டாக (card game) போகிமான் கம்பனியினால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட போகிமான் கம்பனியானது டோக்கியோ, வோஷிங்டன், லண்டன்,சியோல் ஆகிய நகரங்களில் தலைமையகங்களைக் கொண்டுள்ளது பின்னர் வீடியோ கேம்(Video game) பதிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ஸ்மார்ட் போன் தொலைபேசி மூலம் விளையாவடுதற்கான பதிப்பு தான் Pokémon Go.



அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Niantic நிறுவனத்தால் Pokemon Go உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய மொபைல் போன் கேம்களுக்கம் Pokemon Go க்கும் பெரும் வித்தியாசமொன்று உள்ளது. அதாவது நாம் இருக்கும் இடத்தின் சுற்றாடலுடன் தொடர்புடையதாக இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போனிலுள்ள Camera , Google map , GPS போன்றவற்றின் உதவியுடன் நாம் இருக்கும் சூழல் இனங்காணப்பட்டு, நமக்கு அருகிலுள்ள இடங்களில் போகிமான்கள் ஒளிந்து கொண்டிருப்பதாக காட்டப்படும். இது அகுமென்டட் வீடியோ கேம் என அழைக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனுக்குப் பதிலாக, கைக்கடிகாரம் போன்று மணிக்கட்டில் அணிந்துகொள்ளக்கூடிய போகிமான் கோ பிளஸ் எனும் சாதன மொன்றின் மூலமும் போகிமான் கோ விளையாடலாம்.



கடந்த 6 ஆம் திகதி அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் Pokemon Go வை அறிமுகப்படுத்தியது. The Pokemon Go Company ஜூலை 17 ஆம் திகதி வரை ஏனைய பல ஐரோப்பிய நாடுகள், கனடா உட்பட 32 நாடுகளில் Pokemon Go அறிமுகமாகியிருந்தது. ரஷ்யாவில். இலங்கை, இந்தியா முதலான ஆசிய நாடுகளில் போகிமான் கோ அமுலுக்கு வரவில்லை. பொதுவாக செல்போன்களில் வீடியோ கேம் விளையாடுபவர்கள், கதிரையிலோ, கட்டிலோ கிடந்து செல்போனை குடைந்து கொண்டிருப்பார்கள். இத்தகைய தொழில்நுட்பங்கள் மூலம் மக்கள் வர வர சோம்பேறியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விமர்சனம் உள்ளது. ஆனால், போகிமான் கோ விளையாட்டில் நிலைமை எதிர்மாறானது. போகி மான் கோ விளையாட்டில் போகிமான்களை கண்டுபிடிப்பதற்காக எழுந்து நடமாட வேண்டியிருக்கும்.

போகிமான்களை தேடி பல கிலோமீற்றர் நடப்பவர்கள் உண்டு. இதனால், இவ்விளையாட்டில் ஈடுபடுபவர்கள் தம்மை அறியாமலேயே பெரும் உடற்பயிற்சி செய்பவர்களாகி விடுகிறார்கள். ஸ்பானிய பொலிஸார் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்ளின் முன்னேற்றத்துக்கும் இவ் விளையாட்டு உதவும் என மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். கனடாவின் டொரண்டோவிலுள்ள உளவியல் மருத்துவரும் ரியோர்சன் பல்கலைக்கழக விரிவுரையாளருமான டாக்டர் ஒரேன் அமிட்டே இது தொடர்பாக கூறுகையில், தனது நோயாளிகள் பலர் Pokemon Go விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.



அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்மெட்ரோ ரயில்வே துறை Pokemon Go விளையாட்டை ஊக்குவிக்கிறது. தமது ரயில் நிலையங்கள், ரயில்களில் எங்கெல்லாம் போகிமான்கள் காணப்படுமென டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கிறது. வணிக உலகிலும் Pokemon Go கலக்குகிறது. போகிமான் கோ அப்ஸ் வெளியிடப்பட்டு 2 வாரங்களில் உலகளாவிய ரீதியில் 3 கோடி தடவை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் Pokemon Go நிறுவனத்துக்கு 3.5 கோடி டொலர் (500கோடி ரூபா) வருமானம் கிடைத்துள்ளது. ஜப்பானில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் Pokemon Go அனுசரணையாளராக இணைந்துள்ளது.இது தொடர்பான தகவல் நேற்றுமுன்தினம் வெளியானதும் ஜப்பானில் மெக்டொனால்ட்ஸ் பங்குகளின் பெறுமதி 10சதவீதத்தால் அதிகரித்தது. Pokemon Go விளையாட்டின் மேலதிக அம்சங்களை வாங்குவதற்காக போகிகொய்ன்ஸ் (PokeCoins) அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 1,2 வருடங்களில் அப்பிள் நிறுவனத்துக்கு 3 கோடி டொலர்(சுமார் 447 கோடி ரூபா) வருமானம் கிடைக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது.



அதிக போகிமான்களை கண்டுபிடிக்கக்கூடிய இடங்களுக்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக விசேட வாடகைக் கார் சேவையை வழங்க அமெரிக்க சாரதிகள் சிலர் முன்வந்துள்ளனர். இவ்வாறு Pokemon Go விளையட்டானது போக்குவரத்து துறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. பல்தேசிய நிறுவனங்கள், பெரு நிறுவனங்களுக்கு மாத்திரமல்ல சிறு வியாபாரிகளுக்கும் போகிமான் கோ நன்மையளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. போகிமான்களைத் தேடி வீதியில் இறங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நடைபாதை வியாபாரிகள், பெட்டிக்கடைகள், உணவு விடுதிகளுக்கு வருமானம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

பாதுகாப்புத் துறையினருக்கு நெருக்கடி மறுபுறம், Pokemon Go விளையாட்டானது பல நாடுகளின் பாதுகாப்புத் துறையினருக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.போகிமான்களை தேடுபவர்கள் வீதிகளில் சமிக்ஞை விளக்ககளைக் கூட பொருட்படுத்தாமல் நடந்துசெல்கிறார்களாம். சில மோசமானவாகன சாரதிகளும் வாகனம் செலுத்திக்கொண்டே போகிமான் கோ விளையாட்டில் ஈடுபடுகின்றனர் இந்தோனேஷியாவில் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் போகிமான் கோ விளையாடிய சாரதி ஒருவர் தனது வாகனத்தை பொலிஸ் காரொன்றுடன் மோதினார். அத்துடன், போகிமான்களை பின்தொடரும் பலர் பாடசாலைகள் பொதுக்கட்டடங்கள், தனியார் வளாகங்கள், இராணுமுகாம்களுக்குள்ளும் அத்துமீறி நுழைய முற்படுகின்றனர். அண்மையில் அவுஸ்திரேலியாவின் பாடசாலை, நாஸி வதை முகாம்தொடர்பான அமெரிக்க நூதனசாலை ஆகியற்றிலும் சிலர் போகிமான்களைத் தேடித் திரிந்து சங்கடங்களை ஏற்படுத்தினர்.



ஸ்பானிய பொலிஸார் பாதுகாப்பாக Pokemon Go விளையாடுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களையும் ஸ்பானிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. பொஸ்னியாவில் 1990களில் நடைபெற்ற யுத்ததத்தின் போது புதைக்கப்பட்ட மிதிவெடிகளில் Pokemon Go விளையாடுபவர்கள் சிக்கிவிடக்கூடும் என உணர்ந்த அதிகாரிகள் இதுதொடர்பில் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளனர். ஜப்பானில் விரைவில் Pokemon Go வெளியிடப்படவுள்ளதை முன்னிட்டு,விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல் பிரசாரங்களை ஜப்பானிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இந்தோனேஷியாவில் Pokemon Go விளையாடிக்கொண்டு இராணுவ முகாமொன்றுக்குள் நுழைந்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, இந்தோனிய ஜனாதிபதி மாளிகை அருகில் Pokemon Go விளையாட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்தோனேஷிய பொலிஸார், இராணுவத்தினர் கடமை நேரத்தில் போகிமான் விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் உத்தியோகபூர்வமாக Pokemon Go அறிமுகமாவில்லை. எனினும் சிலர் வெளிநாட்டு பதிப்புகளை சட்டவிரோதமாக தரவிறக்கம் செய்து விளையாடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.



சவூதியில் போகிமான் கோவுக்கு எதிரான குரல்களும் ஒலிக்கின்றன. 2001 ஆம் ஆண்டு போகிமான் ஒரு காகித அட்டை விளையாட்டாக இருந்த காலத்திலேயே சவூதி அரேபிய மதகுருக்கள் போகிமானுக்கு தடைவிதித்திருந்தனர். சவூதி அரேபியாவில் 15 வருடகாலமாக அமுலிலுள்ள இத்தடை Pokemon Go அறிமுகத்தின் பின்னர் மீளவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது ஆனால், சவூதியில் Pokemon Go கேம் மீதான தடை மீள பிரகடனப்படுத்தபபட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என சவூதி அரேபிய கலாசார மற்றும் தகவல் துறை அமைச்சின் உதவி செயலாளர்தெரிவித்துள்ளார்.




அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் போகிமான்களை பின் தொடர்ந்து சென்ற இருவர் வீட்டு வளாகம் ஒன்றுக்குள் நுழைந்த போது அவர்களை திருடர்கள் என எண்ணி அவ்வீட்டின் உரிமையாளர் துப்பாக்கி பிரயோகம் செய்தார். இதனால் அவ்விருவரும் காயமடைந்தனர். குவாத்தமாலாவில் போகிமான்களை பின் தொடர்ந்து சென்று வீடொன்றுக்குள் நுழைந்த 18 வயதான ஜேர்ஸன்லோபஸ் லியோன் எனும் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இச் செய்திகள் உண்மையானால் போகிமான் கோ காரணமாக இடம்பெற்ற உலகின் முதல் மரணமாக இது இருக்கலாம். விரைவில் இலங்கையிலும் போகிமான் கோ அறிமுகமாகலாம். பொது இடங்களில் இவ்விளையாட்டில் ஈடுபடுபவர்களும் அவர்களை எதிர்கொள்பவர்களும் எச்சரிக்கையுடன் செயற்படுவது நல்லது.



உலகின் பல நாடுகளில் அறிமுகமாகியுள்ள போகிமான் கோ(Pokemon Go) எனும் மொபைல்போன் கேம் இலட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ள நிலையில், போகிமான் பாத்திரங்களில் ஒன்றுக்கு சிலையொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் நியூ ஓர்லீன்ஸ் நகரில் இச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ‘பிக்காச்சு எனும் போகிமான் கோ பாத்திரத்தின் சாயலில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.நியூ ஓர்லீன்ஸ் நகரிலுள்ளபூங்காவொன்றில் இச் சிலை திறந்துவைக்கப்பட்டிருந்தது. எனினும் முன்அனுமதியின்றி சட்ட விரோதமாக இச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அதிகாரிகளால் இச் சிலை விரைவில் தகர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




Pokemon GO Game பற்றிய காணொளிக் காட்சியை தரவிறக்கம் (Download) செய்வதற்கான இணைப்பு (Link) :


Facebook ல் எங்களது  Ariwaham அறிவகம் பக்கத்தை Like செய்து பல சுவாரசியமான தொழிநுட்ப தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள்
Click Here:







If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.


Post Top Ad

Your Ad Spot

Pages