Thursday, September 1, 2016

நான் வாழக் கற்றவன்

விழி தாண்டும்
பார்வையில்
ஓராயிரம் அர்த்தங்கள்
காலத்தின் பிணி
தனைச் சொல்லும்
நினைவுகள்.

மறக்கப்பட்ட உயிர்களில்
நின்று ஊசலாடும்
உணர்வுகள்
மறக்கவும் முடியாமல்
சிறைக்குள் அகப்பட்ட
கிளியாய்


சிலரது பேச்சுக்கள்
மட்டுமே உண்மை
இதுவும் ஒரு
பிரம்மை தான்
ஏமாற்றுப் பிழைப்பாய்
மெய் வார்த்தைகள்
உதவிக்கு அழைப்பு வரும்
கை முடிந்த பின்
நீயாரோ...


உம் உறவு ஏனோ
நஞ்சில் மூழ்கடித்த
சாதுவாய்
என்னைப் போல
விட்டில் பூச்சிகள்
ஏராளம் தாராளமாய்

மனது தொலைத்த
அப்பாவிகள்
இவர்கள் அடையாளம் கொடும்பாவிகள்.


உறவுக்கு அர்த்தம்
தெரியா கல் நெஞ்சுகள்
போலிக் கண் கொண்டு
வேஷ அடையாளம்
இடுகின்றனர் பாசத்தால்
துன்பங்கள் இவனுக்கு
தனியுடமையோ
புரியவில்லை

இருந்தும் துவண்டு
போகாது
இவன் நெஞ்சம்
வாழக் கற்றவன்
கோழையாய் சாவானா?
செதுக்கிய பாதையைச்
செப்பனிட்டு..
தைரியம் கொள்கிறான்
தன்னை வீரனாய் நினைக்கையிலே...


♥{ ச. றஹ்மதுல்லாஹ் }♥
♦ சம்மாந்துறை ♦

Pages