Android இயங்குதளத்தின் வருகையின்
பின் Samsung
ஸ்மார்ட் போன்களும்
மக்கள் மத்தியில்
அதிகம் பழக்கத்துக்கு
வந்துள்ளது. அந்தவகையில்
நீங்களும் Samsung
ஸ்மார்ட் போன்
பயன்படுத்துபவரா?
அப்படியாயின் , அதில்
நாம் வழமையாக
பார்க்கக்கூடிய எழுத்துருவை ( Font )
மாற்றி புதிய
எழுத்துருக்களை நிறுவி
பயன்படுத்திக் கொள்ளவும்
முடியும். Samsung
ஸ்மார்ட் போன்களில்
அழகிய எழுத்துருக்களை
நிறுவிக் கொள்ள
உதவுகிறது HiFont எனும் Android ஸ்மார்ட்
போன்களுக்கான செயலி
நாம் கீழே வழங்கியிருக்கும்
இணைப்பின் மூலம்
இதனை இலவசமாகவே
உங்கள் ஸ்மார்ட்
போனுக்கு தரவிறக்கிக்
நிறுவிக் கொள்ள
முடியும்.
பின்னர் இந்த செயலியை
திறந்தால் பல
அழகிய எழுத்துருக்கள் ( Fonts ) இதில் பட்டியல்படுத்தப்படும்.
அவைகள் Fashion, Handwriting, All Caps,
Typewriter என ஏராளமான
பிரிவுகளின் கீழ்
வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளதுடன்
பல வர்ண
எழுத்துருக்களும் இதில்
தரப்பட்டுள்ளன.
அவற்றுள் உங்களுக்கு பிடித்த
எழுத்துருவை தெரிவு
செய்து Download என்பதை அழுத்த வேண்டும்.
குறிப்பிட்ட எழுத்து
தரவிறக்கப்பட்டதன் பின்னர்
தோன்றும் USE என்பதை
அழுத்துவதன் மூலம்
குறிப்பிட்ட எழுத்துருவை
உங்கள் ஸ்மார்ட்
போனில் நிறுவிக்கொள்ள
முடியும்.
*நிறுவும் போது Install Blocked எனும் பிழைச்செய்தி தோன்றினால்
Setting - Security எனும் பகுதியில்
தரப்பட்டிருக்கும் Unknown Sources என்பதில் Tick செய்து கொள்க.