Friday, April 7, 2017

Android Apps களை Windows கணனிகளில் பயன்படுத்துவது எப்படி?

கணினிகளுக்கான இயங்குதளங்களுள் WINDOWS இயங்குதளமும் ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளங்களுள் ANDROID இயங்குதளமும் மிகச்சிறந்த இயங்குதளங்கள் ஆகும். எனினும் எமக்குத் தேவையான பல்வேறு கருமங்களை நிறைவேற்றிக் கொள்ள இவற்றுக்கு என தனித்தனியே மென்பொருள்களும் (Software) செயலிகளும் (Apps) உள்ளன.



எனவே, விண்டோஸ் கணினியில் பயன்படுத்தும் ஒரு மென்பொருளை ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலோ ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்தும் ஒரு செயலியை விண்டோஸ் இயங்குதளத்திலோ சாதாரணமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது.



அதற்கு Android Emulators எனும் மென்பொருள்கள் நமக்கு உதவுகின்றன. Bluestacks,Andy, KoPlayer,Memu போன்றவற்றை அம்மென்பொருள்களுக்கு உதாரணமாக கூறலாம். இன்று நாம் பார்க்கவிருக்கும் மென்பொருளின் பெயர் Memu. Memu மூலம் ஆண்ட்ராய்டு செயலிகளை விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தலாம்.



Memu மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் நாம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நிறுவும் செயலிகளை விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பல மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களால் பயன்படுத்தப்படும் இந்த மென்பொருள் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரில் (Playstore) இருக்கும் எந்த ஒரு செயலியையும் உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்.
கணினியை பயன்படுத்தும் எந்த ஒருவராலும் இந்த மென்பொருளை மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.



Memu மென்பொருளை கணினியில் நிறுவுவது எப்படி?

கீழே குறிப்பிட்டுள்ள இணைப்பிலுள்ள இணையதளத்தில் இருந்து இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிய பின் குறிப்பிட்ட மென்பொருளை திறந்து கொள்க.



இனி அதன் பிரதான இடைமுகத்தில் வெவ்வேறுபட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் தரப்பட்டிருக்கும் அவற்றை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவ விரும்பினால் அவற்றை சுட்டும்போது தோன்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் இடைமுகத்தில் INSTALL என்பதை சுட்ட வேண்டும். இனி குறிப்பிட்ட செயலியை Memu மூலமாக உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்.



கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை தரவிறக்க உங்கள் ஜிமெயில் கணக்கை பயன்படுத்த வேண்டும். மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் தோன்றும் Search Button மூலம் எந்த ஒரு செயலியையும் தேடிப்பெற்று அதனை நிறுவிக்கொள்ள முடியும்.


Memu வின் வலது பக்கத்தில் பயனுள்ள Option பலவற்றை எம்மால் காண முடியும்



சிறப்பம்சங்கள்:

*Android செயலிகளை(apps) இலகுவாக பயன்படுத்தலாம்

*ROOT வசதியும் வழங்கப்பட்டுள்ளது



*Screenshot, Screen record செய்து கொள்ள முடியும்

*நாம் விரும்பிய புகைப்படத்தை பின்புலப்படமாக வைத்துக்கொள்ள முடியும்

*Game Tools களை பயன்படுத்த முடியும்



*கைப்பேசியை கணனியுடன் இணைத்து Files Share பண்ண முடியும்

*கணனியுள்ள apk கோப்புக்களை இலகுவாக INSTALL செய்யலாம்



மென்பொருளின் செயன்முறை பற்றிய PDF கைநூலை ( User Manual ) கீழே உள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்யுங்கள்


குறிப்பு:
மேலே வழங்கப்பட்டிருக்கும் இணைப்புகளை செய்து , 5 செக்கன்கள் காத்திருந்து SKIP AD என்பதை Click செய்தால் உரிய வலைப்பக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.








Pages