Friday, July 14, 2017

Facebook தளத்தில் Game Request தொல்லையை உடனே நீக்கிடுங்கள்

உறவினர்கள் நண்பர்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் எண்ணங்கள், கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வதற்கும் இன்றைய சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன. சமூக வலைத்தளம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது Facebook தளமாகத்தான் இருக்க வேண்டும். 1.8 பில்லியன் பயனர்களால் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் இது உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமாகும்.
இந்த தளமானது வெறும் எண்ணங்கள், கருத்துக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியுடன் மாத்திரம் அதன் பயனர்களை மட்டுப்படுத்தி விடாது பொழுது போக்கிற்காக பல சுவாரஷ்யமான விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கும் வழி சமைத்துள்ளது.




அந்த வகையில் 8 Ball Pool, Candy Crush Sega, Real Racing போன்ற ஏராளமான விளையாட்டுக்களை நாமும் விளையாடி இருப்போம் அல்லவா? அது போன்ற விளையாட்டுக்களை விளையாடிய பின் எதோ ஒரு காரணத்திற்காக அதனை விளையாடாமல் விட்ட பின்பும் தொடர்ச்சியாக அதிலிருந்து உங்களுக்கு Game Request கள் Notification பகுதியில் தோன்றுகிறதா? இது சில சமயங்களில் தொல்லையாகக் கூட அமைவதுண்டு.

எனவே தொடர்ச்சியாக Game Request வருவது உங்களுக்கு தொல்லையாக அமைந்தால் அதனை பின்வரும் முறையில் தடுத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு நண்பரிடம் இருந்து வரும் Game Request மாத்திரம் நிறுத்த வேண்டும் எனில். உங்கள் Facebook கணக்கிற்குள் நுழைந்து கொள்க.

பின் Settings பகுதியில் தரப்பட்டிருக்கும் Blocking என்பதை சுட்டுக.



பிறகு கிடைக்கும் இடைமுகத்தில் Block app invites என்பதில் குறிப்பிட்ட நண்பரை தெரிவு செய்வதன் மூலம் அவரிடம் இருந்து வரக்கூடிய Game Request களை மாத்திரம் தடை செய்யலாம்.



*குறிப்பிட்ட Game மூலம் வரும் அனைத்து Game Request களையும் நிறுத்த வேண்டும் எனில்மேற்கூறிய முறையில் Settings - Blocking என்ற பகுதிக்கு சென்ற பின்னர் Block apps என்பதில் குறிப்பிட்ட விளையாட்டின் பெயரை உள்ளிடுவதன் மூலம் அந்த Game மூலம் வரும் அனைத்து Game Request களையும் நிறுத்த முடியும்.



மேலும் நீங்கள் Android மூலம் Facebook தளத்தை பயன்படுத்துபவர் எனின் பின்வரும் முறையை பின் பற்றுக. உங்கள் Android சாதனத்தில் உள்ள Facebook செயலியை திறந்துகொள்க.

பின் வலது மேல் மூலையில் தரப்பட்டிருக்கும் Settings பகுதியை சுட்டுக.



பின் அதன் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Account Settings சுட்டுவதன் ஊடாக Notification - Notification From Apps எனும் பகுதிக்கு செல்க.





இனி தொல்லை தரும் வகையில் Notification ஆக வரும் விளையாட்டுக்களில் இருக்கும் Tick அடையாளத்தை அகற்றி Save செய்து விடுக


அவ்வளவு தான். இனி இருக்காது Facebook தளத்தில்Game Request தொல்லை.


Pages