வீட்டில் எப்படி தனித்தனி அறைகளாக சமையல்
அறை, வரவேற்பு அறை என்று
வைத்திருக்கிறமோ அதே போன்று கணினியிலும் பாட்டு, படம், வீடியோ
என்று ஒவ்வொன்றுக்கும்தனித்தனி கோப்பறைகள் (Folder) வைத்திருப்போம்.
பொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்பறையினை உருவாக்கும் போது அது மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கும் நாம் விரும்பினால் அதனை வேறு ஒரு நிறத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது.
கீழுள்ள இணைப்பில் சென்று மென்பொருளை Download செய்யுங்கள்:
குறிப்பிட்ட தளத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை Refresh செய்து கொள்ளவும். பின் கோப்பறையின் மீது Right கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Colorize என்பதை
தெரிவு செய்யவும்
.முதல் முறை நிறத்தை தெரிவு செய்யும் போது , அம்மென்பாருளை activate செய்ய வேண்டும்.
தோன்றும் விண்டோவில் உங்கள் email முகவரியை கொடுத்து Get my free Activation என்பதை அழுத்தவும்.
பின் உங்கள் email கணக்கைத் திறந்து பாருங்கள். உங்களுக்கு activation code அனுப்பிவைத்திருப்பார்கள். அதை copy செய்து activation window ல் paste செய்துதிடுங்கள் அவ்வளவுதான் colorize மென்பொருள் activate ஆகிவிடும்.
குறிப்பிட்ட folder ன் நிறம் மாறியுள்ளதை நீங்கள் காணலாம்.
தோன்றும் துணை வரிசையில் குறிப்பிட்ட நிறத்தினை தேர்வு செய்யவும். சில நிமிடங்களில் குறிப்பிட்ட நிறத்தில் கோப்பறையின் நிறம் மாற்றப்படும்.
Color என்பதை தெரிவு செய்து உங்களுக்கு விருப்பமான மேலதிக நிறங்களை இணைத்துக் கொள்ளுங்கள்
இதே போல் எந்தவொரு மென்பொருள் உதவியன்றி கோப்பறைகளின் வடிவத்தை மாற்றிக்கெபள்ள முடியும். கோப்பறையின் மீது Right கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Prortpeies என்பதை தெரிவு செய்து Customize என்பதை தெரிவு செய்யவும். பின் அவ்விண்டோவின் அடிப்பகுதியில் காணப்படும் Change
icon என்பதை தெரிவு செய்து அதில் உங்களுக்கு விருப்பமான வடிவத்தை (icon) தேர்தெடுத்து OK பொத்தானை அழுத்துங்கள். பின் Apply என்பதை தெரிவு செய்து OK செய்திடுங்கள். அந்த கோப்பறையின் வடிவம் மாறிருப்பதை நீங்கள் அவதானிப்பீர்கள்.