Wednesday, March 14, 2018

PDF கோப்புகளை word docment ஆக Convert செய்வது எப்படி?


PDF கோப்புகளை word docment ஆக Convert செய்வது எப்படி?

தற்போது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் Document format ஆக PDF document (.pdf) மாறி வருகிறது இதற்கு காரணம் PDF file Format ல் உள்ள கோப்புகளை எளிதில் உடைத்து Edit செய்து விட முடியாது. மேலும் எதாவது ஒரு PDF Reader மென்பொருள் இருந்தால் போதும் PDF பைலை Open செய்துவிடலாம். சரி இவ்வாறு PDF கோப்பாக உருவாக்கும் Document களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை சரி செய்ய வேண்டுமெனில் நாம் கண்டிப்பாக மூன்றாம் தர மென்பொருளின் உதவியை நாடிச் செல்ல வேண்டும்.





World, Text, Image, HTML மற்றும் பல்வேறு File களை நாம் PDF  கோப்பாக மாற்றி பயன்படுத்துவோம். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மென்பொருளை நாட வேண்டும் அதற்கு பதிலாக PDF Convert தொடர்பான அனைத்து வேலைகளையும் ஒரே மென்பொருளில் செய்ய முடியும் அந்த மென்பொருளின் பெயர்தான் UniPDF or PDFMate.

கீழுள்ள இணைப்பில் சென்று அந்த மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.





 பின் அந்த அப்ளிகேஷனை Open செய்து PDF பைலை தேர்வு செய்யவும். பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டுமோ, அதை குறிப்பிட்டு பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும்
(செயன்முறையை கீழுள்ள gif படத்தை Downoad செய்து பாருங்கள்)




சிறிது நேரத்தில் கோப்பானது நீங்கள் குறிப்பிட்ட Format ல் கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும். பின் நீங்கள் அதை வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.


PDF கோப்புகளை பிரித்து தேவையான பக்கங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்தல், பல PDF கோப்புகளை ஒன்றாக இணைத்தல் போன்றவற்றை செய்வது எப்படி?

PDF கோப்பினை ஒருமுறை உருவாக்கி விட்டால் அதனை உடைக்கவோ, மறுவரிசைப்படுத்தவோ முடியாது மேலும் இவ்வாறு உருவாக்கும் PDF கோப்புகளில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. என்றுதான் பலரும் நினைத்துகொண்டு இருப்பார்கள் ஆனால் பிடிஎப் கோப்பினை விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. அந்த மென்பொருளின் பெயர்தான் ice cream PDF split & merge.

கீழுள்ள இணைப்பில் சென்று அந்த மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.



பின் அந்த அப்ளிகேஷனை திறக்கவும் நீங்கள் PDF கோப்பினை   உடைக்கவோ அல்லது தேவையான பக்கங்களை தேர்தெடுக்க அல்லது நீக்க விரும்பினால் Split என்னும் பொத்தானை அழுத்துங்கள். பின் Add Files என்பதை அழுத்தி தேவையான PDF கோப்பினை இணைத்திடுங்கள். அதற்கு பின் பின்வரும் 4 Option களில் ஏதாவதொன்றை தெரிவு செய்து PDF கோப்பினை உடைத்தெடுத்துக் கொள்ளலாம்.

Into single page file :
PDF கோப்பின் ஒவ்வொரு பக்கங்களும் தனித்தனி PDF கோப்பாக மாற்றலாம்
By Group of Page :
PDF கோப்பின் குறிப்பிட்ட பக்கங்களை மாத்திரம் தேர்ந்தெடுக்கலாம்
Delete Certain Page :
By page range :
PDF கோப்பின் குறிப்பிட்ட பக்கங்களை மாத்திரம் நீக்கிவிடலாம்

Save to: என்ற இடத்தில் split செய்யப்பட்ட PDF கோப்பு எந்த இடத்தில் சேமிக்கப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்து SPLIT என்னும் பொத்தானை அழுத்துங்கள்.
(செயன்முறையை கீழுள்ள gif படத்தை Downoad செய்து பாருங்கள்)






சிறிது நேரத்தில் கோப்பானது நீங்கள் குறிப்பிட்ட முறையில் Split செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும். பின் நீங்கள் அதை வழக்கம்போல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

நீங்கள் பல PDF கோப்புகுளை தனி PDF கோப்பாக ஒன்றிணைக்க விரும்பினால் Merge என்னும் பொத்தானை அழுத்துங்கள். பின் Add Files என்பதை அழுத்தி தேவையான PDF கோப்பினை இணைத்திடுங்கள். பின் MERGE என்னும் பொத்தானை அழுத்துங்கள் அவ்வளவுதான் சிறிது நேரத்தில் கோப்பானது நீங்கள் குறிப்பிட்ட முறையில் Merge செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.




PDF கோப்பின் அளவை( size ) குறைப்பது எப்படி?


PDF கோப்பின் அளவு எவ்வளவு வேண்டுமானலும் இருக்கும். மிக அதிகம் அளவுடைய PDF கோப்பினை மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமெனில் கண்டிப்பாக அனுப்ப முடியாது. குறிப்பிட்ட அளவுடைய மின்னஞ்சல் கோப்பினை மட்டுமே அனுப்ப முடியும். அதிக அளவுடைய கோப்பினை மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமெனில் அந்த கோப்பினை தனித்தனி பகுதிகளாக பிரித்து அனுப்பினால் மட்டுமே முடியும். அவ்வாறு பிரித்து அனுப்பும் போது அந்த குறிப்பிட்ட கோப்புகளை மீண்டும் சேர்க்க மென்பொருளினை பயன்படுத்த வேண்டும். மேலும் இவ்வாறு கோப்பினை தனித்தனி பகுதிகளாக பிரித்து அனுப்பும் போது சில பகுதி கோப்புகளை தவறுதலாக இழக்க நேரிடலாம். இதனால் முழு கோப்பும் மின்னஞ்சல் வாயிலாக சென்றடைய வாய்ப்பில்லை

அதிக அளவுடைய கோப்பினை மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப அந்த கோப்பின் அளவை சுருக்கி அனுப்பினால் அனுப்ப முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. அந்த மென்பொருளின் பெயர்தான் Free PDF Compressor.


கீழுள்ள இணைப்பில் சென்று அந்த மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.




பின் இந்த அப்ளிகேஷனை Open செய்யவும். திறக்கும் விண்டோவில் அளவு குறைக்கப்பட வேண்டிய பிடிஎப் கோப்பினை தேர்வு செய்யவும்பின் compress செய்து சேமிக்கப்பட வேண்டிய PDF கோப்பு சேமிக்கப்பட வேண்டிய இடத்தையும் தேர்வு செய்து. பின் எந்த விருப்ப தேர்வில் compress செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டு (பொதுவாக கோப்பின் அளவைக் குறைக்க முதலாவதாக உள்ள Screen – low resolution, screen view-only quality, 72dpi image என்ற தேர்வை தெரிவு செய்யுங்கள் ) பின் Compress என்னும் பொத்தானை அழுத்தவும்.
 (செயன்முறையை கீழுள்ள gif படத்தை Downoad செய்து பாருங்கள்)



சிறிது நேரத்தில் குறிப்பிட்ட கோப்பானது compress செய்யப்பட்டு , நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.


Pages