Breaking

Thursday, February 18, 2016

Paypal கணக்கு ஆரம்பிப்பது எப்படி ?


PayPal என்பது  ஆன்லைனில் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படும் உலகின் முதன்மையான பணபரிமாற்றதளம். 1பழைய காசோலைகளுக்கும் வரைவோலைகளுக்கும், பணவிடயங்களுக்கும் மாற்றாக DIGITAL முறையை பயன்படுத்தும் E-COMMERCE நிறுவனமே PayPal. இது இணையத்தில் இயங்கும் ஒவ்வொருவருக்கும் அவசியம்

நாட்டுக்கு நாடு நிறுவனத்து நிறுவனம் பணத்தை பரிமாற்ற உதவும் சேவை. இணையத்தில் பொருள்
வாங்குது என்றாலும் சரி, உறவினருக்கு அனுப்புவது என்றாலும் சரி Paypal தான் எப்போது சிறந்தது.
இன்று Ebay போன்ற சேவைகளுடன் இறுக பிணைக்கப்பட்டு விட்டது.


PayPal நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது


 PayPal சிறப்பம்சங்கள் :


உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பேபால் பணபரிமாற்ற சேவையை பயன்படுத்துகிறார்கள்.இந்நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்த 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது. பாதுகாப்பான பணபரிமாற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இதன் சிறப்பே பாதுகாப்பும் நம்பிக்கையும் ஆகும். தனிநபர் பாவனைக்கு இலவசமாக கிடைக்கிறது. வர்த்தக நடவடிக்கைகளில் வாங்குபவருக்கு பாதுகாப்பளிக்கிறது. தகுந்த காரணங்களுடன் Refund பெறும் வசதி என பல நன்மைகளை பாவனையாளுக்கு வழங்குகிறது. அதே போல Developers க்கு API வசதிகளை மிகுந்த பாதுகாப்புடன் வழங்கி கொண்டிருக்கிறது.

Paypal  கணக்கு ஏன் தேவை?

நீங்கள்  இணையத்தளத்தில் சம்பாதித்தால் அப்பணத்தைப் பெறவும், ஆன்லைன் சந்தைகளில் பொருட்களை வாங்கவும் ,விற்கவும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் உங்களுக்கு கட்டாயம்  Paypal  கணக்குஅவசியமாகின்றது.

Paypal இன் முக்கியம் என்ன ?

நேரடியாக Visa, Master கார்ட் மூலம் நிதி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவற்றில் எந்த பற்றுசீட்டுக்களும் நமக்கு கிடைப்பதில்லை. நேரடியாக பணம் பரிமாற்றிய வங்கி மூலமே நீண்ட அலைச்சலின் பின்னர் விவரங்களை பெற முடியும். ஆனால் paypal ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும் மின்னஞ்சல் மூலம் அறிக்கைகளை அனுப்பிக்கொள்ளும்.

நிறைய தளங்கள் உங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை Check அல்லது Paypal மூலம் தருகின்றன. இன்னும் பல Paypal வழியாக மட்டுமே பணம் செலுத்தும். எனவே Paypal Account Create செய்வது கட்டாயம் ஆகிறது.

இலங்கையில் வசிக்கும் மக்கள்  Paypal சேவையை பயன்படுத்த விரும்பும் தொழில்நுட்ப விரும்பிகளை மையப்படுத்தி இப் பதிவை பதிவிடுகின்றேன். இலங்கையருக்கான Paypal செயற்படுத்தும் நடவடிக்கை படிமுறைகள்
அடிப்படை தேவைகள் :

Paypal கணக்கு
HNB / Commercial Bank கணக்கு (BOC, People Bank, NSB இல் இயங்குவதில்லை)
HNB / Commerical Bank Visa/ Master Debit Card + International Account Activation



இதுவரை உங்களிடம், Paypal கணக்கு இல்லை என்றால் முதலில்  Paypal  ஆரம்பித்து கொள்ளுங்கள். அத்துடன் HNB / Commercial Bank இலும் கணக்கை ஆரம்பித்து Debit Card ஒன்றை பெற்று கொள்ளுங்கள் (ATM card டை தான் சொல்கிறேன்)




1.பேபால் கணக்குத் துவங்க Paypal.com என்ற முகவரிக்கு செல்லவும்


அதில் signup என்பதை கிளிக் செய்யவும்


2. இப்போது தோன்றும் பக்கதில் தேவையான விபரங்களைக் கொடுக்கவும்
select your country and region from the list என்பதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்கவும். முதலில் உங்கள் நாடு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும்
அடுத்து உங்களுக்கு தேவையான கணக்கு முறையைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இணையத்தில் மூலம் பொருட்களை விற்பவர் எனில் business Account ஐத் தேர்ந்தெடுக்கவும். சாதாரணமாக பண பரிவர்த்தனை மட்டுமே என்றால் personal என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். இணையதளத்தில் வர்த்தகம் செய்யவிரும்பினால் கட்டாயம் Busines or Permium வகைக் கணக்கை தேர்ந்தெடுக்க
வேண்டும். Personal Acount களுக்கு Fees எதுவும் கமிஷன் ஆக பெறப்படுவது இல்லை. அதனால் அதைப் பற்றிய கவலை வேண்டாம்.


3. பின்னர் உங்கள் நாடு , email address , password என்பவற்றை கொடுத்து  CONTINUE என்பதை  click செய்யவும்





4. பிறகு தேவையான உங்களுடைய தகவல்களை படிவத்தில் நிரப்புங்கள். நீங்கள் நிரப்பும் உங்களுடைய சொந்த தகவல்கள் உண்மையாகவும், வங்கி கணக்கில் உள்ள விபரங்களுடன் ஒத்துப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும். இது மிக முக்கியமானதொன்று. குறிப்பாக சொல்வதெனில் உங்களுடைய பெயரின் எழுத்துகள்(Name Letters), இனிஷியல் (Initial),  குறிப்பிட்டுள்ள 
First Name ல் உங்களின் முழுப் பெயர் , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம்.  அதாவது Last name ல் உங்களது இனிசியலைக் கொடுக்கவும்.. 

இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் நீங்கள் உறுப்பினர் கணக்கு துவங்கும் பெயரில் உங்களுக்கு நமது நாட்டில் ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யாருடைய பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை PayPal உடன் இணைக்கும் பொழுது, PayPal ல் கொடுத்துள்ள பெயரும்  நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், நிச்சயமாக பணத்தினைப் பெற முடியாது.


தொலைபேசி (cell number, phone number)எண் மற்றும் Email address ஆகியவை மிகச் சரியாக எழுத்துப் பிழை இல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இணையத்தின் மூலம் அதிக பண
பரிவர்த்தனை(Money Exchange), பண பரிமாற்றம் (Money transfer)செய்யும் நபர்கள்
தங்களுடைய கடன் அட்டை விபரங்களையும் (Credit Card Details)கொடுக்க வேண்டியது கட்டாயம். இத்தளம் மிகச்சிறந்த பாதுகாப்பை அளிப்பதால் நம்பி விபரங்களைக்கொடுக்கலாம்.
அனைத்து விபரங்களையும் கொடுத்த பிறகு   அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள். அடுத்து உங்களது முகவரி மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்று உள்ளப் பட்டனைக் கிளிக் செய்யவும்




Postal code தெரியாத இலங்கையர்கள் கீழே உள்ள இணைப்பில் பெற்றுக் அதை கொள்ளலாம்.
postalcode.lk

பிறகு உங்களுடைய paypal அக்கவுண்ட் தொடங்குவது உறுதி செய்வதற்கான மின்னஞ்சல் வந்தடையும். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கு விபரங்களை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.

Paypal கணக்குடன் உங்கள் வங்கிக் கணக்கினை எவ்வாறு இணைப்பது?

உங்களது Paypal கணக்குடன் உங்கள் வங்கிக் கணக்கையும் , வங்கி அட்டையையும் (ATM card) இணைக்கும் வழிமுறை தெளிவாக கீழே உள்ள இணைப்பிலுள்ள (Link)  காணொளியில்  (Video) காணலாம்:
youtube.com

அதை தரவிறக்கம் (Dowload) செய்வதற்கான இணைப்பு (Link) :

download.com


பணத்தை Transfer செய்ய விரும்பும் நண்பர்கள் பதிவை தொடர்ந்து படிக்கவும்.

1. முதலில் உங்கள் paypal கணக்கிற்குள் Sign-in செய்யவும்.

2. இப்போது Overview பக்கத்தில் இருந்து Withdraw என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் “Withdraw funds to your bank account ” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது வரும் பக்கத்தில் Transfer செய்வதற்கான வசதிகள் இருக்கும். இதில், From this balance – உங்கள் Paypal கணக்கில் உள்ள பணம். இது டாலரில் தான் இருக்கும்.

3.Amount – நீங்கள் எவ்வளவு Transfer செய்ய விரும்புகிறீர்கள்.

4.To – எந்த வங்கிக் கணக்கிற்கு (ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணக்குகள் கொடுத்து இருந்தால்). இதில் நீங்கள் Amount கொடுத்து உள்ள பணத்தை உங்கள் நாட்டு மதிப்புக்கு மாற்றிக் கொள்ளலாம்.


Purpose code  என்ன காரணத்திற்கு பணம் Transfer செய்யப்படுகிறது. (பதிவர்கள் Freelance Journalism என்பதை கொடுத்து விடலாம். அல்லது உங்கள் விருப்பம்) இவற்றை கொடுத்த உடன், Continue என்பதை கிளிக் செய்து விடுங்கள். அவ்வளவே உங்கள் கணக்கிற்கு பணம் 5-7 நாட்களில் பணம் வந்து சேர்ந்து விடும்.

Paypal கணக்கை  ஆரம்பிக்கும் முறையை  கீழே உள்ள இணைப்பிலுள்ள (Link)  காணொளியில்  (Video) காணலாம்  :

youtube.com

அதை தரவிறக்கம் (Dowload) செய்வதற்கான இணைப்பு (Link) :

Download.com




*குறிப்பு:
மேலே தரப்பட்டுள்ள அனைத்து Link களையும் Click செய்தவுடன் விளம்பரமொன்று காண்பிக்கப்படும் 5 செக்கன்கள் காத்திருந்து SKIP AD என்பதை Click செய்தால் உரிய வலைத்தளத்தை பெற்றுக்கொள்ள முடியும்.










Post Top Ad

Your Ad Spot

Pages