Breaking

Saturday, October 15, 2016

புள்ளி மான்கள்

கள்ளிச் செடிகளற்ற
கடற்கரையோரம்
அள்ளி வீசும்
மணல் விரிப்பில்
பள்ளி கொண்டுள்ள
புள்ளி மான்கள்
துள்ளி விளையாடும்
அழகை நான்
தள்ளி நின்று
அள்ளிப் பருகினேன் -மர
வள்ளிக் கிழங்கு
உண்டபடியே
அதில் கொஞ்சம்
கிள்ளி எறிகின்றேன்
உங்களுக்காக.....®

Post Top Ad

Your Ad Spot

Pages