Breaking

Saturday, January 21, 2017

Volume Button மூலம் என்ன செய்யலாம்?

எமது Android சாதனத்தில் தரப்பட்டுள்ள Volume button ஆனது Android சாதனத்தில் இருந்து வெளிப்படக் கூடிய ஒலியின் (சத்தம்) அளவை கூட்டிக் குறைப்பதற்காகவே தரப்பட்டுள்ளது. அதுவே நாம் அறிந்த விடயம் , எனினும் அதன் மூலம் எமக்குத் தேவையான ஏனைய வசதிகளையும் செயற்படுத்தலாம்.



Quick Click எனும் Android சாதனத்துக்கான செயலியானது Volume Button மூலம் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள வழிவகுக்கின்றது. இந்த செயலியின் உதவியுடன் உங்கள் Android சாதனத்தில் இருக்கக் கூடிய Volume Button களை பயன்படுத்தி
*புகைப்படங்கள் எடுத்தல்,  ( Photo )
*வீடியோ கோப்புக்களை பதிவு செய்தல் ( Video )
 *Flash light  ஒளிரச்செய்தல்
 *குரல் பதிவுகளை மேற்கொள்ளல் ( Dictaphone l
*குறுஞ்செய்திகளை அனுப்புதல் ( Message )
*அழைப்புக்களை ஏற்படுத்தல் ( Call )
*எந்த ஒரு செயலியையும் திறந்து கொள்ளல்
போன்ற  ஏராளமான செயற்பாடுகளை செய்து கொள்ள முடியும்.

கீழுள்ள இணைப்பில் Quick Click  செயலியை Download செய்து கொள்ளுங்கள்



Quick Click செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?

இந்த செயலியை தரவிறக்கி Install செய்து திறந்து கொண்ட பின் Volume Button மூலம் எவ்வாறான செயற்பாட்டை செய்ய விரும்புகிறீர்களோ அதனை தெரிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் Volume Button மூலம் புகைப்படங்களை எடுக்க விரும்பினால் Photo என்பதை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் அடுத்த பகுதியின் மூலம் குறிப்பிட்ட செயற்பாடு தொடர்பான மேலதிக வசதிகளை தெரிவு செய்து Ready என்பதை சுட்ட வேண்டும்.


உதாரணத்தின் படி நீங்கள் Photo என்பதை தெரிவு செய்திருந்தால், குறிப்பிட்ட புகைப்படம் பிடிக்கப்பட வேண்டிய கேமரா எது? (Back Or Front) அந்த புகைப்படத்தின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும்? (High, Medium, Low), புகைப்படம் பிடிக்கப்படும் போது Flash மற்றும் Auto-focus வசதி செயற்படுத்தப் பட வேண்டுமா? புகைப்படம் சேமிக்கப்பட வேண்டிய இடம் எது? புகைப்படம் பிடிக்கப்பட்ட பின் குறிப்பிட்ட புகைப்படம் திறக்கப்பட வேண்டுமா? அல்லது Gallery திறக்கப்பட வேண்டுமா? என்பவைகள் தொடர்பான அமைப்புக்களை தெரிவு செய்ய வேண்டும். அடுத்து தோன்றும் சாளரத்தில் Volume Button அழுத்தப்படும் முறையை தெரிவு செய்ய வேண்டும்.


உதாரணத்திற்கு அந்த சாளரத்தில் தரப்பட்டுள்ள ஒன்றன் பின் ஒன்றான கட்டங்களில் முதல் கட்டத்தில் ஒன்றை "+" ஆகவும் அதற்குக் கீழ் தரப்பட்டுள்ள இரண்டாவது கட்டத்தில் "-" என்பதையும் நீங்கள் தெரிவு செய்திருந்தால் குறிப்பிட்ட செயற்பாடானது Volume Button மேல் ஒரு முறை அழுத்தி விட்டு கீழ் ஒரு முறை அழுத்தும்போ து குறிப்பிட்ட செயற்பாடு இடம்பெரும். (உதாரணத்தின் படி புகைப்படம் பிடிக்கப்படும்)


இதனடிப்படையில் வெவ்வேறுசெயற்பாடுகளுக்கும் வெவ்வேறான படிமுறைகளை அமைத்துக்கொள்ளலாம். இறுதியாக குறிப்பிட்ட செயற்பாடு இடம்பெரும் போது Vibrate அல்லது சத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனின் அதனை தெரிவு செய்த பின் Finish என்பதை அழுத்த வேண்டும்.




அவ்வளவு தான். இனி நீங்கள் இட்ட கட்டளைக்கு ஏற்ப Volume Button அழுத்தும் போது குறிப்பிட்ட செயற்பாடு இடம்பெறும்


தொடர்புடைய இணைப்புக்கள்:





Post Top Ad

Your Ad Spot

Pages