Friday, January 30, 2015

தனயன் செய்த
தந்திரங்கள்
மறைத்து
தமையனாய்
எனை வளர்த்தார்

தன் பிள்ளை
வளர
தன் நீர் வியர்வையை
தாரமாக கொடுத்தார்

தாய்க்கும்
சேய்க்கும்
தன் செந்நீரை
செல்வத் தாராக
மாற்ற
தன் உழைப்பை
தானமிட்டார்
என் தந்தை ®

நட்பு
அது ஒன்றும்
நடிப்பு அல்ல
அதுதான்
எங்கள்
நாடித் துடிப்பு

நன்றி கெட்ட
இவ்வுலகில்
நல்லது செய்தவன்
நீ தானடா

நான்
நல்லவனாக இருப்பதால்
உன்
நண்பனாகவில்லை
உன்
நண்பனாகவும்தான்
நல்லவன் ஆனேன்

நாம் பிறந்த
பின்புதான்
நம் நட்பு
பிறந்தது
நாம் இறந்த
பின்பும்
நம் நட்பு
இறக்கப் போவதில்லை

நான் தவம்
இருக்கா
வரம் நீ
நம் நட்புக்கு
நிகருண்டோ
இனி.....

♥* Mohammed Sajeeth *♥

Friday, January 23, 2015

மரணப் போர்வை
எனைப்
போர்த்த முன்
உன்
கண் பார்வைக்காய்
காத்திருக்கிறேன்
மகனே !
உனை உள்ளத்தில்
வைத்து
முதியோர் இல்லத்தில்


Wednesday, January 21, 2015

கணக்கியல்
படிக்கும் போது
பல பிணக்குகள்
எனக்குள்
தோன்றின
பித்தனாய்
மாறிப்போனேன்
சுத்தமாய்
ஒன்றும் விளங்காததால்......






Saturday, January 17, 2015

தேடல்களுக்காக
தேசம் கடந்தேன்
தேவைகளில்
நிறைவும் பெற்றேன்
ஆனால்
தேடல்களின் இறுதியில்
என்னை தேடினேன்

உழைத்தேன் உழைத்தேன்
வாலிபம் பாறையானது
வயதும் வெளுத்தது
வாளைப் போன்ற
உறவுகளுக்கு என்
உழைப்பில்
ரொம்பவும்தான் அக்கறை
இரத்தத்தை
வெட்ட முடியுமா?

நடந்தவர்களெல்லாம்
நன்றாகத்தான்
இருக்கிறார்கள்
கதையெழுதும் நான்தான்
கருவை
தொலைத்து விட்டேன்
என் சோகங்களுக்கு
சிறகுகள்
இருந்தால்
பறந்தாவது போயிருக்கும்

என் மன
உளைச்சலோ
உறங்கவிலலை
எண்ணங்களையெல்லாம்
புதர்களில் மறைத்து
முட்களோடு
பேசிக் கொண்டிருக்கிறேன்

அன்புகள் எல்லாம்
அம்பாக
களுத்து வரை பாய
இந்த
ஆண் மகனைப் பற்றி
யாருக்குமே
கவலையில்லை

எனக்கும்
வாழ்க்கையை தேடுவார்களென்று
வட்டம் போட்டன
கனவுகள்
முடிவில்
போலியில்
பிசைந்த முகங்கள்
நனவில் தொங்கின

♥* Fathima Naleera *♥



Tuesday, January 13, 2015


 கோழி முட்டை சைவமா? அசைவமா? என்ற வாதம் இன்றும்  நடைபெறுகிறது. அது புறமிருக்க முற்று முழுதாக தரவர சேர்வைகளால் உருவாக்கப்பட்ட செயற்கை முட்டை சந்தைக்கு வருகிறது.



அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த உணவுபொருள் விஞ்ஞானிகள் தாவரப் பொருள்களைகொண்டு நவீனசெயற்கை முட்டையை உருவாக்கி இருக்கிறார்கள். இதை கனோலா, பட்டாணி, சூரியகாந்தி(leicithin) போன்ற 11 வகையான சத்துமிக்க பொருட்கள் மற்றும் புளிக்கரைசல் கொண்டு தயாரிக்கிறார்கள்.



இம் முட்டையில் 92 வீதம் தாவர இனப் பண்புகள் காணப்படுகின்றது. விவசாய உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு இம்முட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
.”நாங்கள் வரையறுக்கப்பட்ட வளங்களை கொண்டு ஒரு புதுமையான தயாரிப்பு மாதிரியை உருவாக்க முயன்று அதில் வெற்றியும் கண்டோம்” என டெட்ரிக் குறிப்பிடுகின்றார்



தற்போது இந்த செயற்கை தாவர முட்டை அமெரிக்க மார்க்கெட்டில்  விற்பனைக்கு வந்துள்ளது. கோழி முட்டையை விட இதன் விலை  18  சதவீதம் குறைவு என்றும், இதனால் கோழிப் பண்ணை தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்தநிறுவனத்தில் தலைமைசெயல் அதிகாரி டேட்ரிக் கூறுகிறார்.

உண்மையான முட்டைகளிலிருந்து கிட்டத்தட்ட பிரித்தறிய முடியாத வகையில்    இம் முட்டைகள் காணப்படுகின்றன.



சைவ பிரியர்களே! இது சைவ முட்டை







Thursday, January 8, 2015

கல்வித் தாகம்
போக்க
தன் மானத்தை
விற்று
தண்ணீர் புகட்டும்
மனிதர்

Sunday, January 4, 2015

ஓடி விடும்
காலத்தில்
தேடி வரும்
நேரத்தில்
பாடி வரும்
நிமிடத்தை
கோடி எண்ணங்களில்
புதைக்க
மாறிவரும்
உலகில்
மாறித்தான்
பேனதே!

தேயாத
அன்பும்
தேய் பிறையாக.....

*♥ Azra Nusrath ♥*



Friday, January 2, 2015

உடைந்த
மனித மனங்களுக்கு
உரமூட்ட
அறம் செய்ய
கரம்
கொடுப்போம்

Thursday, January 1, 2015

அமைதியான
காலையிலே
அமர்ந்தருக்கிறேன்
நானும்
அகீதா பாடத்திற்காய்
அசுத்தமான
வகுப்பினலே.....

அன்பு ஆசான்
அழுத்தமான
வார்த்தைகளை கூறி
அங்கே
தூங்கும் சிலரை
அதட்டுகிறார்.....


அனஸின்
கண்கள் மூட
அல்தாபின்
தலை விழ
அருகிலிருந்த
முஸாதீனோ
அசைக்கின்றான் தலையை
அங்குமிங்குமாய்
ஏனோ.....

அன்பு ஆசான்
அனைத்தையும்
வாசிக்காமலே
அருமையான
கதைகளை
அவரின் வாயோ
அசை போட்டது
வகுப்பிலே.....

அடுத்தது என்ன?
அறியாத ஓர்
மிஸ் கோல்தானே
அதனோடு
தொடர்ந்தது
அடுத்த பகுதியும் .....


அப்படியிருக்க
அழகாய் தன்
வேலையை
அமைதியாய்
முஸ்தக்
நிறைவேற்ற.....


அறுதியாய்
இறுதிப் பரீட்சை
அதை பற்றிதான்

அடித்தது
மணியும்
அனைவரும்
வீழ்ந்தனர்
அருமைத் தூக்கத்தில்.....

அதனோடு நானோ
அனைத்தையும்
அறிந்து
அதை
அலங்கரித்தேன்
கவியால்

அதனை
அவதானிப்பாயோ
அன்புத் தோழனே!!!!!


*♥ A.M.M.Irhan ♥*








Pages