Sunday, August 30, 2015

நீங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு
அட்மினாக இருக்கிறீர்களா? இதை
கட்டாயம் வாசியுங்கள்.. லைக் ஐ
அள்ளுங்கள்.


இன்று என்ன முக்கியமான செய்தி ?
என்ற காலம் மாறி இன்றைக்கு எந்த
செய்தி வைரலாக உள்ளது என்று
கேட்கும் நிலை உருவாகிவிட்டது.
இன்றைக்கு சில விஷயங்கள் உலக
அளவில் பலரால் பேசப்பட்டால் அதனை
வைரல் என ஒத்துக் கொள்கிறோம்.
இன்னும் சிலரோ. ஒரு சில
விஷயங்களை வேண்டுமென்றே
அனைவரையும் பேச வைத்து
வைரலாக்குகிறார்கள். 

மேகிக்கு தடை
என்றால் அதுவும் வைரலாகிறது.
இவை உலகம் முழுவதும்
அனைவராலும் படிக்கப்படும் விஷயம்
என்று வைத்துக் கொள்வோம். சம்பந்தமே
இல்லாமல் அஜித்துக்கு குழந்தை
பிறந்தது ‘குட்டி தல’ என்றும், விஜய்
படத்தில் டீஸர் வெளியானது ‘புலி
டீஸர்’ என்றும் எப்படி ட்ரெண்டாகும் என்ற
கேள்வி அனைவருக்குமே இருக்கும்.


பல ஃபேஸ்புக் பக்கங்களின் அட்மின்கள்
சிறப்பாக அன்றைய ட்ரெண்டை
பிடித்து, அதற்கேற்ப தங்கள் பதிவுகளை
பதிவிடுவார்கள். ஆனால் இன்னும்
சிலரோ, “இன்றைக்கு ட்ரெண்டாகும்
விஷயத்தைதான் நானும்
பதிவிடுகிறேன். ஆனால் எனது
பக்கத்தில் அதிக லைக்குகளோ அல்லது
ஷேர்களோ இருப்பதில்லை. அதிகபேர்
பதிவுகளை பார்ப்பதுமில்லை” என்று
புலம்புகிறார்கள்.

ஒரு பதிவு எப்படி அதிக பேரை
சென்றடைகிறது…? ஒரு பக்கத்தை
எப்படி ஒரு அட்மின் மேம்படுத்த
வேண்டும் என்பதை பார்ப்போம்…
ஃபேஸ்புக் எப்படி செயல்படுகிறது?
ஒரு பதிவை பயன்பாட்டாளர்களுக்கு
கொண்டு சேர்க்க சில விஷயங்களை
அடிப்படையாகக் கொண்டு ஃபேஸ்புக்
செயல்படுகிறது. 

உங்கள் பதிவு எந்த
மாதிரியான பதிவாக இருக்கிறது
என்பதை பார்க்கிறது. அது புகைப்படம்,
வீடியோ அல்லது வார்த்தைகளாகதான்
பெரும்பாலும் இருக்கிறது. இதனை
எந்த அளவுக்கு உங்களது பக்கத்தில்
பதிவிடுகிறீர்கள் என்பது முக்கியம்.
நீங்கள் பதிவிடும் தகவல் அனைவரையும்
சென்றடைவது அவ்வளவு எளிதல்ல.


மொத்தம் 18 மில்லியனுக்கும்
அதிகமான பிஸினஸ் பக்கங்கள் பணம்
செலவழித்து தங்களை சந்தைப்படுத்தி
வருகின்றன. இதற்கிடையே உங்களது
பதிவு அனைவரையும் சென்றடைய
சில வழிமுறைகளை தொடர
வேண்டும்.

1}- இணையதளங்களை
பொறுத்தவரையில் நாம் பதிவிடும்
நேரம் என்பது மிகவும் முக்கியம்.
செய்தியின் வேகம் என்பது
அனைவரைவிட வேகமாக இருக்க
வேண்டும். உதாரணமாக இலங்கை
கிரிக்கெட் அணியின் வெற்றி,
கிட்டத்தட்ட வெற்றி பெற்ற சில
நொடிகளில் பதிவிடப்பட வேண்டும்.

அப்போதுதான் அது அதிகப்படியான
பயனீட்டாளர்களை சென்றடையும்.
மேலும் பயனுள்ள தகவல்களை கொண்ட
பொதுவான பதிவுகள் குறிப்பிட்ட
நேரத்தில்தான் அதிகப்படியான நபர்களை
சென்றடையும் என்பதால் அந்த நேரத்தில்
தான் பதிவிடப்பட வேண்டும். 

காலை 6
மணி முதல் மதியம் 3 மணி வரை
பதிவிடும் பதிவுகளை விட இரவு 10
மணி முதல் அதிகாலை 3 மணி வரை
பதிவிடும் பதிவுகள் அதிக
பயனீட்டாளர்களை சென்றடைவதாக
ஃபேஸ்புக் பற்றிய ஆய்வு கூறுகிறது.

அதனால் எந்த பதிவை எப்போது பதிவிட
வேண்டும் என்பதையும் ஆராய்ந்து
பதிவிட வேண்டும்.


2}- ஒரு ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின்
பதிவிடும் பதிவுகள்,
கூடியவரையில் ஒரிஜினல்
பதிவுகளாக இருக்க வேண்டும்.
புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள்
அவர்களால் உருவாக்கப்பட்டவையாக
இருக்க வேண்டும். 

இல்லையெனில்
ஃபேஸ்புக்கின் பயன்பாட்டாளர்கள்
அதிகப்படியானவர்களை
சென்றடையாது. மேலும்
பயன்படுத்துபவர்களும் இது எங்கயோ
பார்த்த பதிவுதானே என பகிராமல்
செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.


3}- பக்கம் ஆரம்பித்து அதிகமான
பதிவுகளை பதிவிடுவதும் மட்டும்
முக்கியமல்ல. பக்கத்தில்
பயன்பாட்டாளர்களுடன் எவ்வளவு
தொடர்பில் இருக்கிறோம் என்பதும்
முக்கியம். 

ஒரு பதிவுக்கு எத்தனை
பேர் கமெண்ட் செய்கிறார்கள்.
எத்தனை பேர் பகிர்கிறார்கள். எத்தனை
பேர் தங்களது சந்தேகங்களை, பக்கத்தின்
இன்பாக்ஸில் கேட்கிறார்கள் என்பதுதான்
விஷயம். அதிக தொடர்பில் இருக்கும்
பக்கங்கள் அதிக பேரை சென்றடையும்.




4}- அதுபோல தகவல்களை சில
இணையதள டூல்களை பயன்படுத்தி
எவ்வளவு அழகான முறையில்
அளிக்கிறோம் என்பதும் அதிக பேரை
சென்றடையும் காரணங்களில்
ஒன்றாகிறது.


5}- ஒரே விஷயத்தை அதிகம் பேர்
பேசும்போது அதற்கான ஒரு
ஹாஷ்டேக்கை உருவாக்குவார்கள்.
அந்த ஹாஷ்டேக் தொடர்பான
செய்திகளை உடனடியாக
வழங்கும்போது. சரியான
பயன்பாட்டாளரை அந்த செய்தி
சென்றடைய அதிக வாய்ப்பு உள்ளது.

♥ பதிவுகளை தடுப்பது என்ன?

1}- பயன்பாட்டாளர் ஒருவர் கிரிக்கெட்
பற்றிய பதிவுகளைதான் அதிகம்
பார்க்கிறார், விரும்புகிறார் என்றால்
ஃபேஸ்புக்கில் அவருக்கு அது
தொடர்பான பதிவுகள்தான் அதிகமாக
தெரியும். அதில் நீங்கள் பதிவிடும்
சினிமா பற்றிய பதிவு தெரிய
வாய்ப்பு மிகவும் குறைவு.

2}- உங்கள் பக்கத்தில் பயன்பாட்டாளர்கள்
அளித்துள்ள எதிர்மறை கருத்துக்களோ,
உங்களை பற்றிய எதிர்மறை
பதிவுகளோ கூட உங்களை பக்கத்தை
அதிகம் பேர் பார்ப்பதை தடுக்கும்.

3}- தனிமனித தாக்குதலால் புகார்
செய்யப்படுவது, செக்ஸ், பாலியல்
தொடர்பான பதிவுகள், ஆபாச
புகைப்படங்கள் ஆகியவற்றை
பயன்படுத்தும்போது அதிகம் பேர்
பார்ப்பதை தடுப்பதுடன், ஃபேஸ்புக்
இதுபோன்ற பதிவுகளை அழிக்கவும்
செய்துவிடுகிறது.

இதுபோன்ற விஷயங்களை கவனத்தில்
கொண்டு உங்கள் பதிவுகளை
கூடியமட்டில் நீங்களே உருவாக்கிய
பதிவாகவும், அதிக பயனுள்ள
தகவலாகவும் அளிக்கும் போது அது
அதிகபேரை சென்றடையும்.
இந்த விஷயங்களை ஒரு ஃபேஸ்புக்
பக்கத்தின் அட்மின் கவனித்தாலே
போதும் அந்த பக்கம் லைக்குகளால்
நிறையும்.






www.ariwahem.blogspot.com


Saturday, August 29, 2015

குமுறும் வயிற்றுக்காக
குப்பைத் தொட்டியில்
இரை தேடும்
குழந்தைக்கு

உண்டு முடித்த
உணவு மீதியில்
சிறு துண்டாவது
கிடைக்கும் என்று

தேடிப் பார்க்க
தன் முதுகை
தாங்கிக் கொடுக்கின்றாள்
தாய்

Thursday, August 27, 2015

மதியை மதித்தவன்
வானத்தி்ல் ஏறி
மதியை மிதித்துவந்தான் - தலை
விதியை நம்பி
விழுந்தவனே! நீ
விழுந்தே கிடக்கின்றாய்





வெற்றி எழுத்தாய் 
வியர்வையைக் கொண்டவன் 
விதியை எழுதுகிறான் - பொய் 
நெற்றி எழுத்தை 
நம்பியவன் நீ 
நீரி்ல் எழுத்தானாய்



கைகளில்தான் உன் 
வரும்காலம் அது 
கைகளிலின் சக்தியிலே - வெறும் 
பொய்களின் வழியில் 
போனவனே! அதை 
ரேகையில் தேடுகிறாய் 


கோளும் நாளும் 
குறித்து ராமன் 
கொற்றவன் ஆவதற்கு - அந்த 
நாளில் என்ன 
நடந்தது ? பாவம் 
நடந்தான் காட்டுக்கு 

காலம் பார்த்து 
நடந்தது தானே 
கண்ணகி கல்யானம் - அவள் 
கோலம் இழந்து 
கொண்டதுவோ மலர் 
குங்கும அலங்கோலம் 



சாதகம் பார்த்தாய் 
சகுனம் பார்த்தாய் 
சகலமும் பார்த்தாயே - ஒரு 
பாதகம் இன்றி 
வாழ்ந்தாயா? வெறும் 
பயத்தால் சாகின்றாய் 





அழுவது சிலநாள் 
சிரிப்பது சிலநாள் 
அ னைவர்க்கும் உள்ளதுதான் - கதை 
முழுவதும் உனக்கு 
முன்னால் தெரிந்தால் 
மூச்சில் சுவை ஏது? 

*# டாக்டர் அப்துல் ரகுமான் #*


Wednesday, August 26, 2015


ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ
சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும்
காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது
சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ?

பல மாஸ்டர்களிடம் போனான்.
எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத்
தர ஒப்புக் கொண்டார். பயிற்சி ஆரம்பமானது. 


குரு ஒரே ஒரு தாக்குதலை
மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.
நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து
போனான்

“குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான்.
“இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்”
என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு
பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான்.

சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது ! முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு
தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக பையன் வெற்றி பெற்றான். 

இரண்டாவது போட்டி. அதிலும்
அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி
வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான். கடைசிப் போட்டி. 



எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன்

பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து
அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில்
பையனை அடித்து வீழ்த்தினான்.
பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி.
போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள்.
“வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு. 

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என
எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.
பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய்
நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல்
பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை.
அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்

“குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக்
கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே என்றான் புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள
மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு.
உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! 

உன்னுடைய அந்த பலவீனம் தான்
பலமானதாய் மாறி உன்னை சாம்பியன்
ஆக்கியிருக்கிறது குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான்.
தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.
நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும்
நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு
மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுக்கிறது


மூலம்: முகநூல்




Tuesday, August 25, 2015

மண் மீது நாம்
கண்டதெல்லாம்
நிலைப்பதில்லை
என்றபோதும்
விண்ணைத்தொடும்
ஆசைகள் பல
நுழைகின்றது மனதிலே....



இல்லை இல்லை 
போலி தான்
என்றெடுத்துச் சொல்லியும்
புரிந்துகொள்ள 
முயலுவதில்லை
மாயை சூழ்ந்த மனமே!

கிடைத்ததை மற்றவரோடு 
பகிர்ந்து
வாழும் நற்பண்பு 
நம்மிடத்திலே
என்றுமே இருக்க வேண்டும்



என்னருமைச் 
செல்வமே
ஒற்றுமை என்ற 
சொல்லோடு நாம்
ஒருமித்த வாழ்ந்துவிட்டால்
பெற்றதில் 
பெரும் செல்வம்
அதுவே இந்தப் பூமியிலே!

பொன் சேர்த்துப் 
பொருள் சேர்த்து
சுகபோகம் அனைத்தும் 
சேர்த்து
நிம்மதியை 
இழந்து தவிப்போர்
எத்தனை இந்த மண்ணிலே??

அன்பென்ற 
தாரக மந்திரம் நம்
உள்ளங்களில் 
விதைத்துவிட்டால்
துன்பங்கள் தொடருவதில்லை 
நம்
அன்றாட வாழ்வுதனிலே!

#* வத்தளையூர் துஷ்யந்தி *#

♥ திறமை என்பது இறைவனால் கொடுக்கப்பட்டது
அடக்கத்துடன் இருங்கள்

♥ புகழ் என்பது மனிதனால் கொடுக்க பட்டது
நன்றியுடன் இருங்கள்

♥ அகம்பவம் என்பது
தமக்கு தாமே கொடுத்து கொள்வது
எச்சரிக்கையுடன் இருங்கள்

♥ ஆட்சி ,அதிகாரம் என்பது சோதனைக்காக
கொடுக்கப்பட்டது
அமானிதமாக
வைத்து கொள்ளுங்கள்

♥ தன்னம்பிக்கை
என்பது மட்டுமே நம்மிடம் இருந்து
வருவது
அதை நன்மைக்காக மாத்திரம்
உபயோகித்து கொள்ளுங்கள்.....


Saturday, August 22, 2015



தேவை முடிந்த பொருட்களை தேவையற்ற பொருட்களாக கருதி தூக்கி எறிவதே நம்முடைய வழமை 

குப்பை தொட்டியில் எறியும் பொருட்களை பூந்தொட்டிகளாக மாற்ற முடியுமே என சிந்தித்து 
அவற்றை நிரூபித்தும் காட்டியுள்ளனர் சில சிந்தனை சிற்பிகள்  

குப்பையில் போட்டாலும் குன்றுமணி மங்காதாம் 

குப்பையில் போடாமல் பல கலைக் குன்றுகளை இதே போன்று எம்மாலும் உருவாக்க முடியும் 

தூக்கியெறியும் பொருட்களால் 
வார்த்து எடுத்த வண்ண 
கலைகளே இவை.....


















Thursday, August 20, 2015

திரை பின்
திரை இடும்
குறை கொண்ட
மானிடம்

அரை குறை
ஆடை எல்லாம்
அலங்காரம் என்பர்,
ஒருவர் நின்று
ஒன்பது பேரை
அடிக்க
ஊரே நின்று
விசிலடிக்கும்
அனாசாரம் எல்லாம்
கலாசாரம் என
காண்பிப்பார்


கண்ட மக்கள் 
கல்லின் போதையோ
எண்ணி மாறியது 
மானிட நாகரிக 
பாதையோ
மாயவலை போர்த்தி 
மந்திர காதல் 
செய்வார்

அதில் எந்திரமும் 
காதல் செயும்
கானல் நீரில் 
காதலை தேடுவர்
இளநீரில் நீந்தியும் 
காட்டுவர்

யாவும் உண்மை என
தாவும் 
மனித கூட்டம்
பாவம் பாலாகி 
பெரும் நட்டம்
மங்கை அலங்கரித்து 
மத்தியில் வெயிப்பர்
உடலை காட்டி ஊன்றி 
தன் கொடி நாட்டி
கோடியில் புரள்வர்
தாசிக்கும் 
இவ்வேசிக்கும் 
வித்தியாசம் யாதோ?

மாமியார் மருமகள் 
சண்டை
வீசி விளையாடாத 
கத்தி சண்டை
கூட்டு குடும்பமும்
கூண்டோடு அழியும்
நாட்டு நடப்பும்
வெறும் ஏட்டில் 
பதியும்
பல பொய்களை
தொட்டிலில் தாலாட்டி
கட்டிலில் காதலை 
காட்டுவர்


சந்தேகப் பட 
கற்று கொடுத்து
சந்தியில் உறவை 
நிறுத்தி
சமாதானம் நாடுவது 
நடிகர்கள் வழக்கம்

திரை பின் நடித்து 
எடுத்த பயிற்சி
நடிகர் கூட்டம் 
மக்கள் முன் நடிக்க
நாகரிகம் நாரி போச்சி

பள்ளியில் படிப்பவனும்
பத்திரமாய் காப்பான்
தந்திரமாய் பணம் 
கேட்கும்
மந்திகளின் புகைப்படத்தை

மூணு மணி நேரம்
குந்திருந்து பார்க்க
கூடி வரும் நேரம்
மூடி வரும் 
கார் மேகம்
பொழிந்தால் அனைத்தும் 
காமம்


மாற்றம் காண 
வந்தவரும்
மாறிப் போனார்
நாரிப் போன 
இச்சாக்கடையில்
நரிகளை நம்பி 
தொலைத்ததால்

#* Azra Nusrah *#

Monday, August 10, 2015

1.அகிலத்தில் அன்னையை தவிர
வேறெவரும் உண்மையாய் இருப்பதில்லை

2.ஏழைக்கு நண்பனில்லை

3.மனிதர்கள் நல்ல சிந்தையை விட
நல்ல பார்வைகளையே அதிகம்
விரும்புகின்றனர்

4.மனிதர்கள் பணத்திற்கு கொடுக்கும்
மரியாதையை சக மனிதர்களுக்கு
கொடுப்பதில்லை

5.நீ அதிகம் நேசிப்பவரே
உன்னை அதகமாய் காயப்படுத்துவார்


கண்ணீர் விட்டு - என்
பேனா தொட்டு
உபைதுல்லா(சாச்சா)வுக்காக
உள்ளத்திலிருந்து எழுதும்
உண்மை வரிகளிது

தட்டிக்கழிக்க முடியா
வார்த்தைகளை என் மனதில்
கொட்டி நிறைத்து
தட்டிக் கொடுத்தாய்


ஆசானாய் நீயிருந்து
அறிவுப் போசணை
வழங்கினாய்
மீஸான் தராசினிலே
உன் நன்மை தட்டு
உயராமல் இருந்திடவே
உலகத்தாரின் இறைவனவன்
உதவிடுவானே


அன்று நான்
முன்னேற வழிகாட்டினாய்
இன்று உன்
மண்ணறைக்கு
அருள்மதியால்
ஒளியூட்டுவான்


பணத்தை நீ
சம்பாதிக்காவிட்டாலும்
பல மனங்களை
சம்பாதித்துக் கொண்டாய்
சாந்தி நிறைந்த
சன்மானம் அதை
சர்வ வல்லோன் பரிசளிப்பான்

மேலான சுவனமதில்
மேற்தரக் கிளையினிலே
வீழாமல் நீயிருக்க
வீழாத கரமேந்தி
நாள்தோறும் வேண்டிடுவேன்......









Pages