Wednesday, September 30, 2015

தவிக்கும் வாய்க்கு
தண்ணீர் தர
மறுத்துவிட்டு
கடிக்கும் பாம்புக்கு
பால் வார்க்க
விரைகிறோம்

பக்கத்து வீட்டுக்காரன்
பட்டினியை
விமர்சனம் 
செய்துவிட்டு
நம்ம வீட்டில்
மட்டன் பிரியாணியை-ஒரு
கட்டு கட்டுகிறோம்,

குடி, குடியை 
கெடுக்குமென
விளம்பரம் 
செய்துவிட்டு
கடையை திறந்துவைத்து
வியாபாரம் 
செய்கிறோம்

படிப்பவனுக்கு
வேலையென்று 
சொல்லிவிட்டு
பணம் படைத்தவனுக்கே
முன்னுரிமை 
கொடுக்கிறோம்


பெண்ணே
பூமியென்று 
சொல்லிவிட்டு
மண்ணுக்கு 
கொடுக்கும்
மரியாதையைக்கூட- ஒரு
பெண்ணுக்கு 
கொடுக்க மறுக்கிறோம்

கையேந்தும் 
பிச்சைக்காரனுக்கு
சில்லரை இல்லையென
சொல்லிவிட்டு
கோடிகளில் புரளும்
கோவில் உண்டியலில்
கொட்டுகிறோம்

கோவணம் கட்டிய 
விவசாயியை
வெய்யிலில்
காக்க வைத்துவிட்டு
வெள்ளை வேஷ்டி
கட்டியவனுக்கு
விருந்து வைத்து
மகிழ்கின்றோம்
இப்படிபட்டவர்களைதான்
மனிதர்களென சமுகம்
அங்கீகாரம் செய்கிறது
நேர்மையானவர்களை
'பிழைக்கத்தெரியாத
பைத்தியக்காரன்'-என
ஒதுக்கி வைக்கிறது

}♥ நாகை ஆசைத்தம்பி ♥{

Sunday, September 27, 2015

இதுதான்
பாடசாலையில்
சொல்லிக் கொடுக்க வேண்டிய
பாடம்

Thursday, September 24, 2015

செல்பி பிரியர்களுக்கு சந்தோசமான செய்தி இன்று அனைவர் மத்தியிலும் செல்பி மோகம் தலைவிரித்தாடுகின்றது

செல்லுமிடமெல்லாம் செல்பி தான் 
அண்மையில் செல்பி ஸ்டிக்(stick) அறிமுகப்படுத்தப்பட்டது 
அதற்கு அதிக வரவேற்பு வழங்கப்பட்டதாலே இப்போ லேடஸ்டா செல்பி கரண்டி சந்தைக்கு வந்துள்ளது 

உண்ணும் போதும் செல்பி எடுக்க
நினைக்கும் செல்பி பிரியர்களுக்காகவே புதிதாக செல்பி ஸ்பூன் (கரண்டி)அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


செல்பி ஸ்டிக் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே செல்பி பிரியர்கள்
இன்னும் மீள முடியாமல் தவித்து
வரும் நிலையில், தற்போது செல்பி
ஸ்பூன் என்ற புதிய சாதனம் சந்தைக்கு வந்துள்ளது. ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் ஆன, டோஸ்ட் கிரன்ச் இதை உருவாக்கியுள்ளது.

உண்ணுவதை செல்பி எடுக்க
முடியாமல் நிறைய பேர் தவிப்பதை
நிறுத்தவே இந்த புதிய தயாரிப்பு என
அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
30 அங்குல வரை விரியக் கூடிய இந்த கரண்டியின் மறுமுனையில் ஸ்மார்ட் தொலைபேசியையும் வைத்து இனி செல்பி எடுத்துக்கொள்ளலாம். 

Selfiespoon.com என்ற இணையத்தளத்தில் இந்த
சாதனத்தை ஓர்டர் செய்து கொள்ளலாம்
என தெரிவித்துள்ளனர்.

இனியென்ன சாப்பாட்டக் கூட ஸ்டைலாதான் சாப்பிடுவாங்க

Wednesday, September 23, 2015

ஒரு மனைவி தன் கணவனிடம்
"ஏங்க நம்ம பக்கத்து வீட்ல புதுசா
குடிவந்த பொம்பலைக்கு ஒழுங்காவே துணி துவைக்க தெரியல, நம்ம ஜன்னல் வழியே எட்டிப் பார்தேன், துணி எல்லாம் அழுக்கா காயப்போட்டு
இருக்கா, அவள் கணவன் அந்த அழுக்கு ஆடையை
எப்படித்தான் போடுரானோ?"
எனக் கூறினாள்.

கணவன் "சரி விடு" என்றான்.
மறுநாளும் இதே போல் கணவனிடம்
பக்கத்து வீட்டு பெண்ணை பற்றி குறைகூறினாள்.
கணவனும் "சரி விடு" என்றான்.

இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் இப்படியே குறை சொன்னாள்.
நான்காம் நாள் வந்து தன் கணவனிடம்

"ஏங்க பக்கத்து வீட்டு பொம்பல
இன்னிக்குதாங்க துணிய ஒழுங்கா
பளிச்ன்னு துவச்சி காயப்போட்டு
இருக்கா" எனச் சொன்னாள்.

கணவன் அவளை பார்த்து சிரித்தான்.
அவள் 
"ஏன் என்னை பார்த்து
சிரிக்கிறீ்கள்?" என கேட்டாள்.
அதற்க்கு கணவன் 
"நீ நம் வீட்டு ஜன்னலின்
கண்ணாடியை துடைப்பதே இல்லை,
நான்தான் இன்று ஜன்னலின்
கண்ணாடியை துடைத்தேன்" என்று
கூறினான்.

அவள் தன்மீது குறையை
வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு
பெண் மீது குறை சொன்னோமே என
வருந்தி தலை குனிந்தாள்.

நம்மிடமே 1008 குறைகள்
இருக்குப்போது அடுத்தவரின்
குறையை துருவி துருவி
ஆராயலாமா? 

♥{ Fazna }♥

Monday, September 21, 2015

தன் நாற்றுக்களுக்காக
நூற்றுக் கணக்கான
கஷ்டங்களை
மாற்று வழியில்
ஏற்றுக் கொள்ளும்
அன்பின் ஊற்றுக்களே
பெற்றோர்

அன்பை ஊற்றி
போற்றி வளர்க்கப்பட்ட 
நாற்றுக்கள் 
பெற்ற கடனுக்கு 
பெற்றோரை 
வேற்றுப் பிறவியென 
தூற்றி 
விற்று விடுகின்றனர்
முதியோர் 
இல்லத்திற்கு®


ஆமாம்
இது உண்மை தான்,
அரைவயிறு 
உணவு உண்டு
அதிக காலமாகி விட்டது,
பசி கண்ட இடமெல்லாம்
வெந்து அழிகிறது


அந்த உணவகத்தின் 
அருகே
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
சிதறிக் கிடந்த
சோற்றுப் பருக்கைகளைப்
பார்க்கும் போது
பாவப்பட்ட வயிறு
பசியில் புலம்புகிறது

சமூக ஆர்வலர்களின்
பசி பற்றிய
போராட்டங்கள் மட்டும்
அட்டைப் பட 
விளம்பரமாய்,
வசந்த காலம் 
தொலைத்து
பலவீனமாக நாங்கள்

ஈரக்குலை 
துடிக்கிறது,
நாவறண்டு கிடக்கிறது,
இருந்தாலும் 
இங்கே
கடவுள் குளிக்க மட்டும்
பால் மிச்சம் 
இருக்கிறது

உணவில்லையெனில்
உலகை அழிப்பதாக
ஒருசேர உச்சமாய்
கூக்குரல்கள் எழுந்தாலும்,
பசிக்கு உணவு தர
ஒரு குரலும் 
வருவதில்லை

இப்போது கூட
எங்கோ ஒரு வயிறு
சத்தமில்லாமல்
சொல்லியிருக்கும்
அய்யோ பசிக்குதே!!!

♥{ மிதுன் }♥

Saturday, September 19, 2015

யார் இவர்கள் ??

பார்வை இல்லாமல்
பாராட்டை பெற்றவர்கள்
செவிப்புலனில்லாமல்
செவியேற்க வைத்தவர்கள்
கைகளில்லாமல்
கை தட்ட வைத்தவர்கள்
பேச்சில்லாமல் பிறரை
பேச வைத்தவர்கள்
பாதங்களில்லாமல்
பாரை ஜெயித்தவர்கள்
உறுப்புகளில்லாமல்
உயர்ந்தவர்கள்
ஊனத்தால் பிறருக்கு
ஞானம் புகட்டியவர்கள்

கையிருந்தும் காலிருந்தும்
உழைத்து வாழ தெம்பிருந்தும்
உதவாக்கரை பேரெடுத்து
உறங்கிக் கிடப்போரை
நாம் யாரும் கேலி செய்வதில்லை

பாதையிலே பாதமின்றி
படம் வரயைும் ஓவியனைப்
பார்த்து
சப்பாணி பையன்
சாப்பட்டுக்கு பிச்சை
எடுக்கிறான் என
பரிகசிக்கிறோம்

பண நோட்டுக்களில் ஓட்டை, கிழிசல், அழுக்கு போன்ற குறைகள் இருந்தாலும் யாரும் அதை வேண்டாம் என ஒதுக்குவதில்லை

நம் கூட பிறந்த சகோதரன் கூனோடு பிறந்து விட்டால் வீணாய் போனவன் என்று விதண்டா வாதம் பேசுகிறோம்

நம் சரீரம் சீராக இருந்தும்
சாதனை செய்ய
சிந்திக்காது பொய்
சாட்டுக்கள் கூறியே
காலங்களையும் நேரங்களையும்
சாப்பிட்டு
செத்து மடிகின்றோம்

குறைியிருந்தும் தம்
மனதில்
தன்னம்பிக்கை
நிறையுண்டு என்பதை
நிரூபித்து இவர்கள்
சாதித்து காட்டுகின்றனர்

இதன் மூலம் இவர்கள் தன்னம்பிக்கையின் தனித்துவ சின்னங்களாய் மிளிர்கின்றனர்

♦ இவர்கள் இயலாதவர்கள் அல்ல, இயலாமையை மாற்றியமைக்கும் திறமைசாலிகள் ,
"மாற்றுத் திறனாளிகள்" ♦

"ஊனம் என்பது உடம்பிலுள்ளதல்ல, மனதிலுள்ளதே!!" என்பதை உறுதியாய் பறைசாற்றும் உத்தம ஹீரோக்கள் இவர்கள்

இவர்களை பாருங்கள்
இதயத்தை தொடுங்கள்
இடைவிடாது சிந்தியுங்கள்
இப்போது கூறுங்கள்

உண்மையில் ஊனமுற்றோர் யார்?

"இவர்களா ?? "

"நாமா ?!!!"






















"உள்ளம் நல்லா இருந்தா
ஊனம் ஒரு குறையுமில்ல 
உள்ளம் ஊனப்பட்டால் 
உடம்பிருந்தும் பயனுமில்ல" 

*ஊனம் என்னடா ஊனம்
ஞானம் தானே வேணும்
ஞானம் வர வேணும்னா
நம்ம மனசு மாற வேணும்*



www.ariwahem.blogspot.com

Wednesday, September 9, 2015

எப்பொழுதும்
நாமெழுதும்
கவிதைகளில்
எள்ளளவும்
பயன் விளைக்க
கருத்து வேண்டும்

முப்பொழுதும்
படிக்கின்ற
மக்களுக்கு
முழு மனதில்
நம் கவிதை
மணக்க வேண்டும்



தப்பாக
தான்தோன்றித் 
தனமாய் நாளும் 
தரமில்லா 
கவிதைகளை 
எழுதி நின்றால் 

ஒப்புக்கு
கவிதையென 
இருக்கும்
பின்னே 
ஒரு போதும் 
முகவரி நம்
நிலைப்பதில்லை

♥{*அஷ்பா அஷ்ரப் அலி*}♥

Monday, September 7, 2015

ஒருவன் "என்னிடம் கோடிகணக்கில்
பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே திரண்டு மெரினா பீச்சுக்கு வாருங்கள்" என அறிவித்தான். மக்களும் லட்சக்கணக்கில்
திரண்டனர்.


அப்போது அங்கே வருகை தந்த அந்த
கோடிஸ்வரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான். 
"என்னிடம்
எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது.
ஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல் வரிசையாக நில்லுங்கள்" என்றானாம்.

உடனே அனைவரும் வரிசையாக
நின்றனர்.வரிசை செங்கல்பட்டு வரை நீண்டது.அப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான் அந்த கோடிஸ்வரன்.

அதாவது "முதலில் நிற்பவருக்குஒரு
ரூபாயும், இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும்..ஆயிரமாவதாக
நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும்,
லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்சருபாயும்" என கண்டிசன் போட்டு விட்டு "ஒவ்வொருவராக வாருங்கள்" என அழைத்துள்ளான்.

முதலில் நின்றவர் 
"இங்கு என்ன நடக்கிறது?" என்று ஒதுங்கிவிட்டார்.
இரண்டாவதாக நின்றவர் "டீ குடிக்க போறேன்டு சென்று
விட்டார்" 
மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து விட்டார்.


இப்படியே முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் "நாம் பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே
கடைசியாக இணைந்து கொள்வோம்" என்று பேசிக்கொண்டார்கள்.

இப்படியே யாருமே உதவிகள் பெற
வரவேஇல்லை....
மனிதன் இப்படித்தான் 

♥}*அப்துல் இர்பான்*{♥

Pages