Breaking

Wednesday, September 2, 2015

இதுதான்வாழ்க்கை - this is life

தந்தையும் ஆறுவயது மகனும்
மலைச்சாரலில்
நடந்து கொண்டு இருந்தனர்..
மகனை ஒரு கல் தடக்கியது.

"ஒழிந்து போ..!" என்று கோபத்தில்
எட்டி உதைத்தான்..
"ஒழிந்து போ..!"
என்று எங்கிருந்தோ பதில் குரல்
வந்தது.

அப்பா இருக்கும் தைரியத்தில்..
"எதிரில் வந்தால் உன்
முகத்தை பெர்த்துடுவேன்..!"
என்று கத்தினான்..
அதே மிரட்டலாக பதில் வந்தது.
பையன் இந்த முறை மிரண்டான்..
அப்பாவின் கையைப் பற்றிக்
கொண்டான்.



"என்னை கவனி..!"
என்றார் அப்பா. "உன்னை மிகவும்
விரும்புகிறேன்..!"
என்று கத்தினார்..
"உன்னை மிகவும்
விரும்புகிறேன்..!"
என்று அதே வார்த்தைகள்
திரும்பி வந்தன.

அவர் அடுத்தடுத்து அன்பாகப்
பேசிய வார்த்தைகள் அதேபோல்
திரும்பி வந்தன.
மகனிடம் சொன்னார்.
"இதை எதிரொலி என்பார்கள்..!
ஆனால் உண்மையில் இதுதான்
வாழ்கை..!

அன்போ..,
கோபமோ..,
துரோகமோ..,
நீ மற்றவர்களுக்கு
என்ன வழங்குகிறாயோ..,
அதுதான் உனக்கு திரும்பி
வரும்..!
உனக்கு என்ன வேண்டுமோ
அதையே மற்றவர்களு
வழங்க கற்றுக்கொள்..!" 
என்றார்.

Post Top Ad

Your Ad Spot

Pages