Breaking

Saturday, September 5, 2015

யார் ஆசிரியர்? - who is the teacher?

ஒரு பேராசிரியர் ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கில் தனது பயிற்சி நெறியை ஒரு கேள்வியுடன்ஆரம்பித்தார்
நீங்கள் ஒவ்வொருவரும் எத்தனை வருடங்களாக ஆசிரிய பணியில் ஈடுபடுகின்றீர்கள்
ஒவ்வொருவரும் 10,20,15,22.....என பதில் கொடுத்துக் கொண்டே சென்றனர்....

பின்னர் இவ்வளவு நீண்ட காலம் கற்பித்தலில் ஈடுபடும் அவர்களை பாராட்டி பிரார்த்தித்து விட்டு எல்லோரையும் வியப்படையச் செய்யும் இலகுவான கேள்வியொன்றைக் கேட்டார்



ஓர் ஆசிரியர் மாணவருக்கு கொடுக்க வேண்டியது என்ன... எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

எதிர்பார்க்கும் விடை வித்தியாசமாக இருக்குமோ எனக்கருதி 
ஒவ்வொருவரும் அன்பு, மரியாதை, பாரபட்சமின்மை காட்டாதிருத்தல், உதவி, தனித்தனியாக கவனித்தல், குடும்ப நிலையை அறிந்திருத்தல், குறை சொல்லாதிருத்தல், பிறர் முன் அவமானப்படும்விதம் ஏசாதிருத்தல், பலவீனங்களை தனிப்பட்ட முறையில் கூறி பண்படுத்தல்......என்றனர்

ஆசிரியர்களின் முதிர்ச்சியான பதில்கள் ஒவ்வொன்றுக்கும் கைதட்டல் மூலம் உற்சாகம் கொடுத்துக்கொண்டேயிருந்த பேராசியரை வியப்போடு அவதானித்திருந்தனர் ஆசிரியர்கள்

எல்லாக் கருத்துகளையும் வரவேற்ற அவர் அப்படியாயின் ஓர் ஆசிரியரின் பணி என்ன என்றார்?

எதனைக் கேட்கிறாரோ எனக் கருதிய ஆசிரியர்கள் இதில் பேராசிரியரின் பதிலை எதிர்பார்த்து மௌனித்தனர்

இவ்வளவு நேரமும் அங்கும் இங்கும் ஓடியாடி கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் இப்போது கையில் "மார்க்கரை" எடுத்து 



ஓர் ஆசிரியரின் பணிகள் மூன்று என எழுதி 

1. (இலக்கமிட்டு) எது? என்றார்
யாரும் பதில் சொல்லவில்லை
பேராசிரியர் 
முதலாவது...
"MOTIVATION"
( ஊக்கப்படுத்துதல் உற்சாகமூட்டுதல்)

தொடர்ந்து 
2. எது? என்றார் போராசியரிடமே பதிலை எதிர்பார்த்து விளி உயர்த்தி நின்றனர்..........

இரண்டாவது "MOTIVATION" என்றார்
பின் 
3. எது தெரியுமா? என்றார்
.
.


பேராசிரியர் வித்தியாசமான ஓர் பதிலை சொல்வார் என எல்லோரும் ஊசி விழுந்தாலும் கேட்கும் நிசப்தத்தில் ஆவலோடிருக்க 
மூன்றாவது..........................
.
.
,

.
.
.

.
.
.
.
"MOTIVATION."...
என்றார் 
எல்லார் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வடிய சப்தமாக கைதட்டி பேராசியருக்கு நன்றி தெரிவித்தனர். 


பின் பேராசியர் சொன்னார்.
நீங்கள் எப்போதும் மாணவர்களுக்கு அவர்களை உட்சாகப்படுத்தும் ஆசானாக, நண்பனாக, தந்தையாக, சகோதரனாக, பயிற்றுவிப்பாளனாக, உறவினராக இருங்கள் அவர்கள் நிறையவே கற்றுக் கொள்வார்கள்.
அவர்களுக்கு நிறைய தகவல்ளை கற்றுக்கொடுக்கும் வகுப்பறை ஆசானாக இருக்க வேண்டியதில்லை 

இன்றைய மாணவர்களுக்கு தேவை தகவல்களல்ல MOTIVATION (ஊக்கப்படுத்தலும் உற்சாகமூட்டலும்) தான், அதன் மூலமே அவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற "தன்நம்பிக்கையை" வளர்க்கலாம் எனக் கூறி எமது பயிற்சி கருத்தரங்கின் முதல் அமர்வை உரத்த கைதட்டலுடன் நிறைவு செய்வோம் என ஆசிரியர்களையும் உட்சாகமூட்டி நிறைவு செய்தார்.


♥}*ஷிஹான் ஏ. ஜவாத்*{♥

Post Top Ad

Your Ad Spot

Pages