Friday, October 30, 2015

நாம் எல்லோரும் விமானத்தில் பறக்க ஆசைப்படுவோம். விமானம் என்பது சொகுசான வாகனம் என்பது எமது கற்பனை. விமான சேவைகளிலும் தரமான,தரமற்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் காணப்படுகின்றன.

உலகிலேயே மிக மோசமான, தரமற்ற சேவைகளை வழங்கும் விமான நிறுவனமாக வட கொரியா அரசாங்கத்திற்கு சொந்தமான ஏர் கொர்யோ விமான நிறுவனம் தொடர்ந்தும் நன்காவது முறையாக
பயணிகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.



பிரித்தானியாவை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் என்ற விமான போக்குவரத்து ஆலோசனை நிறுவனம் உலகளவில் உள்ள 600 விமான நிறுவனங்களின் தரம் மற்றும் பயணிகள் சேவை குறித்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.


இந்த 600 விமான நிறுவனங்களில் வட கொரியா அரசாங்கத்திற்கு சொந்தமான ஏர் கொர்யோ(Air Koryo) விமான நிறுவனம் தான் தொடர்ந்து நான்காவது முறையாக மிக மோசமான நிறுவனங்களில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.


வட கொரியா என்றாலே முதலில் நினைவிற்கு வருவது 1995ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான உணவு பஞ்சமும், தற்போது அந்த நாட்டின் கொடுங்கோல் ஆட்சியாளரான கிம் யாங்-அன் தான். வறுமையில் இருந்து இன்றளவும் மீளாத உள்ள நிலையில், அடிப்படை வசதிகளை பெருக்காமல் தன்னுடைய ஆடம்பர வசதிகளில் அதிபர் கவனம் செலுத்தி வருவதும் இந்த பின்னடைவிற்கு காரணமாக நோக்கப்படுகின்றது.



தற்போது வரை ஏர் கொர்யோ நிறுவனத்தின் விமானங்கள் 6 நாடுகளில் உள்ள 14 விமான தளங்களுக்கு தனது சேவையை தொடர்ந்து வருகிறது. ஆனால், இந்த நிறுவனத்தில் பெரும்பாலான விமானங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது.


பல விமானங்கள் இன்னும் நவீனமயமாக்கப்படவில்லை. அதனால், விமானத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளின் திறன் மிக மிக குறைவு. இரண்டாவதாக, இந்த விமானத்தில்பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மிகவும் மோசமானதாக உள்ளதாக பல பயணிகள் புகார்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான ஆதார புகைப்படங்களையும்

வெளியிட்டுள்ளனர்.
சில பயணிகள் கூறுகையில், ஆசிய விமானங்கள் பலவற்றில் பயணம்

செய்திருந்தாலும், வட கொரியாவின் விமானத்தில் வழங்கப்படும் உணவை போன்று ஒரு மோசமான சுவையில் வேறெங்கும் உணவு அருந்தியது இல்லை என கூறியுள்ளனர்.

மூன்றாவதாக, வட கொரியா விமானத்தில் பயணிகளுக்கு உதவும் பணிப்பெண்களின் சேவையும் முகம் சுழிக்கும் விதத்திலேயே உள்ளது என சில பயணிகள் வாக்களித்துள்ளனர். மேலும், விமானத்தில் அமர்ந்தவுடன் வட கொரிய தலைவர்களை பற்றி புகழ் பாடும் வீடியோக்கள் தான் விமானத்தில் காட்டப்படுவதால், அது பயணிகளை மிகவும் எரிச்சல் அடைய வைக்கிறது என கூறியுள்ளனர்.


இறுதியாக வெளியாகியுள்ள தகவலில், வட கொரியா விமான

நிறுவனம் நான்காவது முறை மட்டும் பின் தங்கிய நிலையில் இல்லை. உலகளவில் பயணிகளிடம் ஒரே நட்சத்திரம்(one star ranking) பெற்ற ஒரே நிறுவனம் வட கொரியா விமான நிறுவனம் தான் என வாக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.




www.ariwahem.blogspot.com

Wednesday, October 28, 2015

கருப்பு உடையணிந்து
"கா கா" என்று அழைத்த
காகத்துக்கு புதிய உணவு கிடைத்தது

அழுக்கு உடையணிந்து
"அம்மா" என்று அழைத்தவனுக்கு பழைய உணவு கிடைத்தது


Sunday, October 25, 2015

ஒரு ஊர்ல ஒரு காகம் இருந்துச்சாம் அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.
அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். "நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே ..கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை" என்றது.

கொக்கு சொன்னது, "நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை. அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ?" என்றது.
காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது. 



"உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ,ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை. அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ?" என்றது. உடனே காகம், மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது



" ..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி" என்று.
"அழகு மயிலே , உன்னைக் காண இவ்வளவு பேர் .. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர்" என்றது.


\
மயில் சொன்னது "அன்புக் காகமே , நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று. ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது. இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப் படவில்லை .. எனவே நான் யோசித்தது , நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே" என்றது.



தோழர்களே , இதுதான் நமது பிரச்சினையும் ...நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம்.

நாம் எப்பவும் கடவுள் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை.அவர் கொடுத்ததை மதிப்பதும் இல்லை. இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது.

ஒப்பீடுகளால் யாதொரு பயனும் இல்லை. உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள். உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது.

Saturday, October 24, 2015

*A - Appreciation

மற்றவர்களின் நிறைகளை
மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behavior

புன்முறுவல் காட்டவும்,
சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட
நேரம் இல்லாதது போல்
நடந்து கொள்ளாதீர்கள்.

*C - Compromise

அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்
நேரில் சந்தித்து மனம் திறந்து
பேசுங்கள்.



*D - Depression

மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லையே
என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego

மற்றவர்களை விட 
உங்களையே உயர்த்தி
கர்வப்படாதீர்கள்.

*F - Forgive

கண்டிக்கக்கூடிய அதிகாரமும், நியாயமும் 
உங்கள் பக்கம் இருந்தாலும்,
எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி
இருக்கிறதா? 
என்று பாருங்கள்.

*G - Genuineness

எந்தக் கட்டத்திலும் 
சந்தேகம் வேண்டாம்.
எந்த விடயத்தையும் 
நேர்மையாகக் கையாளுங்கள்.


*H - Honesty

தவறு செய்தால் உடனே 
மன்னிப்புக் கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - Inferiority Complex

எவரையும் பார்த்து 
பிரமிக்காதீர்கள்.
நான் சிறியவன் என்ற 
தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

*J - Jealousy

பொறாமை 
வேண்டவே வேண்டாம்
அது கொண்டவனையே அழிக்கும்.

*K - Kindness

இனிய இதமான சொற்களை
மட்டுமே பயன்படுத்துங்கள்.




*L - Loose Talk

சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும்
பின் விளைவு அறியாமலும் 
பேச வேண்டாம்.

*M - Misunderstanding

மற்றவர்களைத் தவறாகப்
புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - Neutral

எப்போதும் எந்த விடயத்தையும்,
முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். 
பேசிவிட்டு முடிவெடுங்கள். 
முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.

*O - Over Expectation

அளவுக்கு அதிகமாகவும் 
தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.



*P - Patience

சில சங்கடங்களை 
சகித்துத் தான்
ஆகவேண்டும் என்பதை
உணருங்கள்.

*Q - Quietness

தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள்.
அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம்
தெரியாததைப் பேசுவது தான்.
கூடுமானவரை பேசாமலே
இருந்துவிடுங்கள்.

*R - Roughness

பண்பில்லாத வார்த்தைகளையும்,
தேவையில்லாத மிடுக்கையும்
காட்டாதீர்கள்.



*S - Stubbornness

சொன்னதே சரி,
செய்ததே சரி என
பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - Twisting

இங்கே கேட்டதை அங்கேயும், 
அங்கே கேட்டதை
இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - Underestimate

மற்றவர்களுக்கும்
மரியாதை உண்டு
என்பதை மறவாதீர்கள்.

*V - Voluntary

அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திரமால் நீங்களே பேச்சை முதலில்
தொடங்குங்கள்.
பிரச்சனை வரும்போது
எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.
பின்பு, அதற்கு பதில் கொடுங்கள்.


W - Wound

எந்தப் பேச்சும், செயலும் 
யார் மனதையும் 
காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - Xero

நம்மை மற்றவர்கள்
எப்படி நடத்த வேண்டும்
என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே
மற்றவர்களை நாம் நடத்துவோம்.

*Y - Yield

முடிந்தவரை விட்டுக் கொடுங்கள்.
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.
கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்
கொடுப்பதில்லை.

*Z - Zero

இவை அனைத்தையும் 
கடைபிடித்தால் பிரச்சனை
என்பது பூஜ்ஜியம் 

♥{ Naazir Nasar }♥

Friday, October 23, 2015

நெல்நாற்று கதிர்களைத்
தாங்கி நிற்குதடா
அறுவடைக்குப் பின்
வைக்கப்போர் ஆகுதடா



பருத்திச்செடி 
காய்களைச் சுமந்து
நிற்குதடா
பறித்தப் பின் 
காய்ந்த பருத்திமார்
ஆகுதடா

வாழை குலையுடன் 
தலை வாசலில்
நிற்குதடா
விழா முடிந்த பின் 
கொல்லையில் 
கிடக்குதடா



பந்தியில் 
வாழை இலைக்கு
முதலிடமடா
பந்திக்குப் பின் 
கிடக்கிறது அது
குப்பையிலடா

பிறருக்கு உதவுவது 
குறை இல்லையடா
உனக்கு வாழ்வில் 
குறைவு இல்லையடா

சொந்தங்கள் 
பகையானால் என்னடா
நட்புகள் சொந்தமாகும் 
கவலையை விடுடா

♥} தி. அருணாசலம் {♥

Sunday, October 18, 2015

ஒருவருடைய பிரச்சினையை அறிய வேண்டுமென்றால்
அவருடைய இடத்திலிருந்து அதை பார்க்க வேண்டும்

Saturday, October 17, 2015

ஒரு நாள் ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார்.

''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' -என்று மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம்... அய்யா' என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு,

ஒவ்வொருவராக அழைத்து ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார்.
ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கிக் கொண்டே சென்றார்கள் .
மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். 

ஒவ்வொருவரிடமும் ஒரு பையை கொடுத்தார் , வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டு வரப்பட்டது. யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தங்கள் பையில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் .

இந்த தக்காளிப் பை எப்போதும் உங்களுடனே இருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்க வேண்டும் என கட்டளையிட்டார். ஒன்றும் அறியாமல் மாணவர்கள் தலையை ஆட்டினார்கள் .

ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்,ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர். 


புன்னகைத்தபடியே ஆசிரியர் , ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை பழியை மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்'' என்றார்! 

அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது. 
நமக்கு எப்போது தெளிவு பிறக்கப்போகிறது ???

♥{ பஸால் }♥



www.ariwahem.blogspot.com

Wednesday, October 14, 2015

வாழ்ந்துதான்
பார்க்கணும்
புறப்படு விருப்போடு
சாதனை
படைத்திடவே
வீறு நடைபோடு

துன்பங்கள்
துயரங்கள்
துரத்தி வரும்
ஏழ்மையும்
வறுமையும்
இணைந்து வரும்

வீட்டுக்குள்ளேயும்
சில நேரம்
துன்பப்புயலடிக்கும்
வீட்டுக்கு
வெளியேயும்
பல நேரம் 
பூகம்பங்கள் வெடிக்கும்

சோதனைகள்
சவால்கள் 
வீடு தேடி வரும்
கண்டு சோர்ந்தால்
அவைகளே
உன்னை சாகடிக்கும்

இரவு பகல்
மாறுவது
இயற்கையின் நியதி
இயலாமையை
விலக்கு மாறும்
உன் தலை விதி

அடிமேல்
அடி அடித்தால்
அம்மியும் நரும்
முயற்சியுடன்
முன்னேறு-உன்
வாழ்வு சிறக்கும்

வாழ்க்கையெனும்
கடலில் 
உன் கைகளை 
துடுப்பாக்க
துன்ப அலைகளையும்
தாண்டி வெற்றியை
தேடிப்புறப்படு

சாவுவரட்டும்
வருமுன் 
வாழ்ந்து பாரு ஒருமுறை
வாழ்வதற்காய்
பயந்து பயந்து 
சாகாதே பல முறை

♥{ பூமதீன் }♥


www.ariwahem.blogspot.com

Saturday, October 10, 2015

நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான
அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு
அளவாக அமையும் பொழுது சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், அப்பொருட் பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பவியலும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது.

ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களே அமர முடியும். பொதுவாக ஒரு மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது. புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர் ஆகும்.

நானோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு நுட்பம் ஆகையால் நானோ தொழல்நுட்பங்கள் (நானோ நுட்பவியல்கள்) என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் செய்து வருகின்றது.


அமெரிக்காவின் நேசனல் நானோ டெக்னாலஜி இனிசியேட்டிவ் (National Nanotechnology Initiative) (நாட்டின் நானோ தொழில்நுட்ப முன்னூட்டு) என்பது நானோ தொழிநுட்பத்தைக் கீழ் காணுமாறு வரையறை செய்கின்றது. "Nanotechnology is the understanding and control of matter at dimensions
of roughly 1 to 100 nanometers, where unique phenomena enable novel applications."
நானோ தொழில்நுட்பம் என்பது 1-100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அதன் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புது பயன்பாடுகளுக்கு வழி வகுப்பதாகும். 


கருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாக அணுப்
புறவிசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM)) மற்றும் வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

இது பற்றி முதலில் டிசம்பர் 29, 1959 ல் இயற்பியல் ஆய்வாளரும் பின்னர் நோபல் பரிசு பெற்ற அறிஞருமாகிய ரிச்சர்ட் பேயின்மன் ஓர் உரையை நிகழ்த்தினார். அதன் தலைப்பு "There's Plenty of Room at the Bottom," (உள்ளே ஏராளமாக இடம் உள்ளது). அணு அளவில் மாற்றங்கள் நடைபெறுவதை இயற்கை தடை செய்யவில்லை என்றார்.


இந்த வருங்காலத் தொழில் நுட்பத்தால் இயற்பியலின் வழி பயன்பாடுகளில் மாற்றம் ஏற்படும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. அதாவது புவியீர்ப்பு கொள்கை போன்றவை செயலிழந்து போவதுடன் மேற்பரப்பு இழுவிசை மற்றும் வேண்டர்வாலின் கவர்ச்சி என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.



நானோ தொழில் நுட்பம் (nanotechnology) என்ற சொல்லை முதல் முதலில் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகப் (Tokyo Science University) பேராசிரியர் நொரியோ தனிகுச்சி (Norio Taniguchi) என்பவர் 1974ல் அறிமுகப்படுத்தினார்.
(1980 களில் இந்த கருத்து மேலும் டாக்டர் எரிக் டிரெக்ஸ்லர் என்பவரால் பகுத்தாராயப்பட்டது. இவரே நானோ தொழில் நுட்பத்தை பேச்சுக்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்.1980 களில் இரண்டு கண்டு பிடிப்புகளுடன் நனோ நுட்பியல் வளர்ச்சி அடையத்தொடங்கியது.

சிறுகூட்ட அணுதொகை அறிவியல் அல்லது துணுக்கறிவியல் (cluster
science) பிறப்பு புரை ஊடுருவு மின்னோட்ட வருடு நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) இன் கண்டுபிடிப்பு இந்த தொழில் நுட்பம் மூலம் வெவ்வேறு பண்புகளையுடைய துகள்களை (துணிக்கைகளை) ஒன்று சேர்க்க முடிகின்றது உதாரணமாக காந்தவியல், மின்னியல் அல்லது ஒளியியல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

நானோ துணிக்கைகள் தொகையாக கொண்டு வரும் போது அவை தமது பொறியியல் தன்மையைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக
பாரம்பரிய பாலிமரை நானோ தொழில் நுட்பத்தால் உறுதியூட்டப்படலாம். இவற்றை நாம் உலோகங்களிற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இதன்காரணமாக பாரமற்ற உறுதியான அமைப்புகள் கிடைக்கின்றன.
இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இது
அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனக்கருதப்படுவதால்
ஆராய்ச்சிகள் மிக இரகசியமாகவே நடைபெறுகின்றன.

}♥ U.L.Mohamed Haleeth ♥{

www.ariwahem.blogspot.com

Wednesday, October 7, 2015

♪♪♪♪♪♪♪♪

If You can
You must Try

If you can't
You must practice

♪♪♪♪♪♪♪♪


Pages