இன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல்
ஒரு போனைக் கூடப் பார்த்திட முடியாது. அவ்விரு Apps க்கும் போட்டியாக ‘ஆலோ’(Allo), ‘டுவோ’ (Duo) என இரு App களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ் அப் தான் அதிகம் பயன்பாட்டிலுள்ளது. போதாக்குறைக்கு மல்டிமீடியாவிலிருந்து PDF பைல்கள் வரை அனைத்தையும்
அதிலேயே ஷேர் செய்யுமளவிற்கு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கூடிய விரைவில் ஜி-மெயிலே தேவையில்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று பேசப்பட்டது.
அதேசமயம் ஃபேஸ்புக்கின் சிறப்புகளையும் நாம் ஒதுக்கி விடமுடியாதே. உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவரோடு நட்பு பாராட்ட உதவும் ஃபேஸ்புக்கில் இன்று சிறுவண்டுகள் கூட லைக்ஸ் தட்டிக் கொண்டிருக்கின்றன.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என வைத்துக்கொண்டு மொத்த டெக்னாலஜி உலகையும் ஆண்டுகொண்டிருக்கிறார் சூக்கர்பெர்க். ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த கூகுளால் சும்மா இருக்க முடியுமா?
அவர்களும் கூகுள் பிளஸ், ஹேங் அவுட், மெசெஞ்சர் என எத்தனையோ ஆப்களை அறிமுகப்படுத்தியும்
அவ்விரண்டு ஆப்களையும் ஓவர்டேக் செய்ய முடியவில்லை. எனவே எப்படியேனும் ஆப் உலகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இப்போது இந்த இரு புது App கள்.
அல்லோ மற்றும் டுவோ எனும் இரு மெசெஞ்சர் செயலிகளை
அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். பேஸ்புக் மெசெஞ்சர், வைபர், ஸ்கைப் போன்ற சேவைகளுக்கு பெரும் போட்டியாக இவைகள் அமையலாம்.
இவ்விரு செயலிகளும் வெவ்வேறுபட்ட வசதிகளை
தரக்கூடியவைகள் ஆகும். அல்லோ எனும் செயலி மூலம் எண்ணங்கள் கருத்துக்களை எழுத்துக்களாகவும்
புகைப்படங்களாகவும் பகிர்ந்துகொள்ள முடியும்.
அதேநேரம் டுவோ(Duo) செயலியானது வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள உதவுகிறது. இந்த செயலிகள் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை எனினும் கீழுள்ள இணைப்பு மூலம் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
இதன் மூலம் இந்த செயலிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் இவற்றை உங்களால் உடனடியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் இதனை பயன்படுத்துவதற்கு கூகுள் கணக்கு அவசியமில்லை. வாட்ஸ்அப் மற்றும் ஏனைய சேவைகளை போன்று உங்கள் தொலைபேசி இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் கணக்கொன்றை உருவாக்கி கொள்ள முடியும். மேலும் இவற்றின் ஊடாக பகிரப்படும் தகவல்கள் End-to-end encryption எனும் முறையில் பாதுகாக்கப்படுகிறது.
அதாவது நீங்கள் பகிரும் தகவல்களை அல்லது டுவோ மூலம்
மேற்கொள்ளும் வீடியோ அழைப்புக்கள் போன்றவற்றை எந்த ஒருவராலும் கண்காணிக்க முடியாது.
♥ கூகுள் அல்லோ சிறப்பம்சங்கள்
அல்லோ செயலியானது வெறும் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு மாத்திரமின்றி கூகுள் நவ் (Google Now) போன்று தானியக்க முறையில் தகவல்களை பெற்றுக்கொள்ளவும் உதவுகின்றது.
இதன் மூலம் நீங்கள் எழுத்துக்களை பகிரும் போது அதன்
அளவை கூட்டி குறைப்பதற்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீங்கள் புகைப்படங்களை பகிரும் போது அவற்றின் மேல் தேவையானவற்றை கையால் எழுதவும் வரையவும் முடிகிறது.
♥கூகுள் டுவோ சிறப்பம்சங்கள்:
வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள உதவும் டுவோ செயலியில் நொக் நொக் (Knock Knock) எனும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அழைப்புக்களுக்கு பதிலளிக்க முன்னரே அழைப்பவரை வீடியோ மூலம் அறிந்துகொள்ள முடியும். மேலும் இது குறைந்த வேகைத்தை கொண்ட இணைய இணைப்பின் போதும் சிறப்பாக இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான இதன் செயலிகள் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எனினும் நாம் மேற்கூறியது போன்று நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர் எனின் இந்த செயலிகளை பயன்படுத்துவதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதனால் வீடியோ காலிங் ஆப்களில் டுவோ ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில்
இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பேஸ்புக் மெசெஞ்சர், வாட்ஸஅப், வைபர் போன்றவற்றுக்கு ஈடாகுமா? அல்லது அவற்றையும் மிகைக்குமா? வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் அளவிற்கு வெற்றி பெரும் அளவிற்குப் பெரிதாக இந்த ஆப்களில் ஏதுமில்லை என்கிறார்கள் கேட்ஜெட் கில்லாடிகள் சூக்கர்பெர்க்கின் ஐடியாவைத் தாண்டி கூகுளால் ஏதேனும் சாதிக்க
முடியுமா? என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்
தொடர்புடைய இணைப்புக்கள்: