கருவறையில்
கலைந்திடாது
கவனமாய்
காத்து வந்த
அன்னையவள் போல்
கனவுகளுடன் சுமந்து
வருகிறேன்
இதய வயிற்றலே
இலட்சிய சிசுவை
ஆயிரம் ஆயிரம்
ஆரம்பம் கண்டேன்
இன்னும் மீதமிருக்கிறது
முடிவினை தொட்டுவிட
தோல்விகள் பல கண்டு
வலிகள் பல சுமந்து
மீண்டும் எழுந்து
நிற்கிறேன்
இலட்சிய சிசுவினை
நெஞ்சினில் சுமந்து
கலைந்திடாது
கவனமாய்
காத்து வந்த
அன்னையவள் போல்
கனவுகளுடன் சுமந்து
வருகிறேன்
இதய வயிற்றலே
இலட்சிய சிசுவை

ஆரம்பம் கண்டேன்
இன்னும் மீதமிருக்கிறது
முடிவினை தொட்டுவிட
தோல்விகள் பல கண்டு
வலிகள் பல சுமந்து
மீண்டும் எழுந்து
நிற்கிறேன்
இலட்சிய சிசுவினை
நெஞ்சினில் சுமந்து

என் இலட்சிய குழந்தையும்
பிரசவமாகும்
அன்று அதனை
சுமந்த நானும்
வெற்றிப் பெருமையில்
ஒரு சொட்டு கண்ணீர்
வடிப்பேன் ஆனந்தமாக...
♥{ F.ரஸ்மினா }♥