Breaking

Friday, December 25, 2015

பணம் போடும் பாதை

பணமெனும் காகிதத்தில்
அலையோடு
போராடும் கப்பலாய்
துடுப்பில்ல ஓடமாய்
மனித வாழ்கை

புத்தியிருந்தும்
பணமின்றி
யுக்தியெல்லாம்
சக்தியற்று போகுது

வித்திட்ட 
மனிதெரெல்லாம்
விலைபேசி பார்க்குது
அறிவியல் வித்தகரையும்
கோழையாக்கி காட்டுது

பெற்றவரையும்
உற்றவரையும்
உருகெடுத்து
உறவை பறித்து
பந்த பாசம் எல்லாம்
காசுதான் பேசுது

கரு கொடுத்தவன்
உருபார்க்க பக்கத்தில்
தந்தையில்லை
பணமோகத்தில்.
அவனது யாகம்

பெண்மையெல்லாம்
பணதாகத்தில்
விலையாகி போகுது.
உண்மையாய் 
உழைக்க போன பெண்ணும்
பணநாட்டில்
கொடுமையிலும்.
கொலைத்தண்டனையிலும்
உயிரை வேட்டையாடுது

பெத்த பிள்ளையும்
பணத்துக்கு 
விலையா போகுது
மனித குணத்தை
தொலைத்தே வாழுது

பிணத்தையும் பேரம்
பேசி பார்க்குது
வையகத்தின் வாழ்க்கை
பணத்திற்க்கு
விலையாகி போனது
பண மையத்தில் புள்ளி
போட்டே உலகம் 
கோலம் போடுது

♥{ ஸியா }♥


Post Top Ad

Your Ad Spot

Pages