Breaking

Friday, October 14, 2016

அதி கூடிய கொள்ளளவுடைய microSD card வெளிவந்துவிட்டது

இன்றைய தொழில்நுட்ப உலகின் மிக வேகமான வளர்ச்சி காரணமாக அன்றாடம் பல புதுமைகள் புகுத்தப்பட்ட புதுப்புது சாதனங்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணமே உள்ளது.



அந்த வகையில் BARCELONA நகரில் இடம்பெற்ற MOBILE WORLD CONGRESS நிகழ்வில் 200GB கொள்ளளவு கொண்ட MicroSD card நினைவகத்தை அறிமுகப்படுத்தி இருந்தது SanDisk நிறுவனம்.

தற்பொழுது இதனை Amazon மற்றும் ebay தளத்தின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும்.
தற்போதைக்கு உலகின் அதிக கொள்ளளவைக் கொண்ட MicroSD சாதனம் இதுவாகும். இந்த MicroSD நினைவகத்தில் 20 மணித்தியாலங்களுக்கு இயங்கக்கூடிய Full HD வீடியோ கோப்புக்களை சேமித்து வைக்க முடியும். மிக வேகமாக தரவுகளை பரிமாறும் திறன் கொண்ட இதன் வேகம் ஒரு செக்கனுக்கு 90 Mb ஆகும்.



அதாவது ஒரு நிமிடத்தினுள் ஏறத்தாள 1200 புகைப்படங்களை (Photos )பரிமாற்ற முடியும். நீர், வெப்பம், அதிர்ச்சி, X-கதிர், மற்றும் காந்த ஈர்ப்புச் சக்தி போன்றவற்றால் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இது Class 10 எனும் சிறந்த தரத்தில் அமைந்ததாகும்.

Amazon தளத்தில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள இதன் விலை 239 அமெரிக்க டொலர்கள்ஆகும். இது இலங்கை ரூபாய்களில் கிட்டத்தட்ட 15200 வரை விலை குறிக்கப்பட்டுள்ளது.



இனியென்ன ஸ்மார்ட் கைப்பேசிகளில் memory பிரச்சனைக்கு இடம் கொடுக்க முடியுமா?

♥ இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை முகநூலில் பெற்றுக் கொள்ள எமது Ariwaham அறிவகம் பக்கத்தை Like செய்யுங்கள்

Post Top Ad

Your Ad Spot

Pages