Breaking

Thursday, May 25, 2017

உங்கள் கணனியில் காணப்படும் Context Menu வில் இதனையும் சேர்க்கலாம்

Windows கணணியை பயான்படுத்தும் நாம் Right செய்து பெறப்படும் சாளரத்தினூடாக ( Context Menu ) ஏராளமான செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம். அந்தவகையில் புதியதொரு கோப்பினை உருவாக்குவதற்கு, உருவாக்கப்பட்ட கோப்பு ஒன்றினை நீக்குவாதற்குகணணியை Refresh செய்வதற்கு, கணனி திரையில் இருக்கக்கூடிய Icon களை ஒழுங்குபடுத்துவதற்கு, ஒரு கோப்பு தொடர்பான முழுத் தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு என ஏராளமான செயற்பாடுகளை நாம் Right Context Menu ஊடாக செய்து கொள்கின்றோம்.




எனவே இதுபோன்ற பயனுள்ள செயற்பாடுகளுக்காக நாம் அடிக்கடி பயன்படுத்தும் Right Context Menu இற்கு மேலும் பெறுமதியை சேர்கின்றது  Easy Context Menu எனும் மென்பொருள் இதன் மூலம் உங்கள் Windows கணணியில் Right Click செய்து பெறப்படும் சாளரத்துக்கு பல பயனுள்ள புதிய வசதிகளை சேர்த்துக்கொள்ள முடியும் அதே நேரம் நீங்கள் உங்கள் கணனி மூலம் மேற்கொள்ளும் செயற்பாடுகளை மிக இலகுவாகவும் விரைவாகவும் செய்து கொள்ள முடியும். இலகுவாக தரவிறக்கி பயன்படுத்தக் கூடிய Easy Context Menu எனும் இந்த சிறிய மென்பொருளானது, Right Click Context Menu இல் 30 இற்கும் மேற்பட்ட வசதிகளை சேர்க்க உதவுகின்றது.



நீங்கள் Desktop இல் Right Click செய்யும் போது பெறப்படும் Context Menu இற்கு மட்டுமல்லாது ஒரு கோப்புறையை (Folder) Right Click செய்யும் போது பெறப்படும் Context Menu, ஒரு கோப்பினை (File) Right Click செய்யும் போது பெறப்படும் Context Menu, Drives context menu, System tools sub menu, Turn off computer sub menu என அனைத்துக்கும் புதுப்புது வசதிகளை சேர்க்க உதவுகின்றது.




முதலில் இந்த மென்பொருளை கீழேயுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள். இது Portable மென்பொருளாகும். இதை கணனியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை Click செய்து பயன்யடுத்தலாம்.






இந்த மென்பொருளை நீங்கள் தரவிறக்கி திறந்து கொண்ட பின் நீங்கள் Right Click Context Menu இல் சேர்க்க விரும்பும் அம்சங்களை தெரிவு செய்து Apply Changes என்பதை அழுத்துங்கள் அவ்வளவு தான் இனி குறிப்பிட்ட வசதிகள் Right Click Context Menu இல் சேர்க்கப்பட்டிருக்கும். அந்தவகையில் கணனியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.



இம்மென்பொருளில் காணப்படும் விசேட அம்சம் என்னவென்றால் உங்களுக்கு விருப்பமான மென்பொருள்களை இந்த easy context menu மென்பொருளில் சேர்த்துக் கொள்ளலாம்.

  1. easy context menu மென்பொருளில் காணப்படும் List Editor என்பதை தெரிவு செய்க

2. அதில் கீழே காணப்படும் Add New என்பதை தெரிவு செய்க


3. உங்களுக்கு விருப்பமான மென்பொருளை தெரிவு செய்து Save Changes என்பதை அழுத்துங்கள். இனி நீங்கள் தெரிவு செய்த மென்பொருளை easy context menu மென்பொருளில் காணலாம். நான் flux setup எனும் மென்பொருளை சேர்த்துள்ளதை படத்தில் காணலாம்





குறிப்பிட்ட மென்பொருளின் மூலம் Right Click Context Menu இல் நீங்கள் உருவாக்கிய மாற்றத்தினை நீக்கிக் கொள்ளவும் இதில் வசதி தரப்பட்டுள்ளது. பயன்படுத்திப் பாருங்கள் இதன் பெறுமதி உங்களுக்கே புரியும்


தொடர்புடைய பதிவுகள்;

Android Apps களை Windows கணனிகளில் பயன்படுத்துவது எப்படி?

Volume Button மூலம் என்ன செய்யலாம்?

IFTTT என்றால் என்ன?

Post Top Ad

Your Ad Spot

Pages