Breaking

Wednesday, September 13, 2017

Kaspersky Anti-Virus மென்பொருளை இலவசமாகப் பயன்படுத்துங்கள்

எமது கணனி வைரஸால் பாதிக்கப்படுவதும் அதனை அகற்ற நாம் எடுக்கும் முயற்சியும் வழமையாகிவிட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் கணனி வைரஸக் கண்டு நடுங்கி நின்ற இந்த உலகம் அவற்றிட்கு எதிராக செயற்படும் மென்பொருட்களின் ( Anti-Virus ) வருகையால், ஆறுதல் அடைந்திருக்கின்றது எனலாம். 







 விரும்பத்தகாத தீங்குகளை ஏற்படுத்தும் வைரஸ் நிரல்களை நீக்குவதற்கு எமது கணனியில் சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ( Anti-Virus ) நிறுவுவது அவசியமாகும். அவற்றை தொடர்ந்து புதுப்பித்தும் ( Renew ) வரவேண்டும். ஏராளமான Anti-Virus மென்பொருள்களை இலவசமாகவும் , கட்டணம் செலுத்தியும் நாம் பயன்படுத்துகிறோம். 

 Avira , Avast , AVG போன்ற நிறுவனங்கள் தமது இலவசத் தொகுப்புக்களை பயனர்களுக்கு வழங்கி வருவது நாம் அறிந்த விடயமே. என்றாலும் , Anti-Virus மென்பொருளை வடிவமைப்பதில் முன்னணி நிறுவனமான Kaspersky ன் இலவசப் பதிப்பு இல்லாதமை பெரும் குறைபாடாகவே இருந்தது. தற்பொழுது இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் Kaspersky தனது இருபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு வருடம் பயன்படுத்துவதற்கான இலவச Anti-Virus பதிப்பை வெளியிட்டுள்ளது.

 Kaspersky Free Anti-Virus மென்பொருளானது எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளதுடன் ஆகக் குறைந்த Pop-up Window களினையே காட்டுகிறது. இதனால் Battery ன் உழைப்பு நேரத்தையும் அதிகரித்துக்கொள்ளலாம். 

 இந்த Kaspersky Free Anti-Virus இலவசப் பதிப்பை கீழுள்ள இணைப்பில் ( Link ) சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள். 




பின் அதை Open செய்தால் 162 mb கொள்ளவுடைய கோப்பு Download ஆகி Install ஆகும். (இணைய இணைப்பு அவசியம்)  



இப்போது Kaspersky Free Anti-Virus மென்பொருளின் அடிப்பகுதியைப் பாருங்கள். 365 நாட்களுக்கான License வழங்கப்பட்டிருக்கும். 



 இந்த மென்பொருளை Download செய்வதற்கு முன் உங்கள் கணனியில் வேறு ஏதாவது Anti- Virus மென்பொருள் இருந்தால், அதனை கட்டாயம் Uninstall செய்து கொள்ளுங்கள் 

 Kaspersky Free Anti-Virus மென்பொருளை நிறுவிய பின் அதை ஒருமுறை Update செய்து Full Scan மூலம் Scan செய்யுங்கள் உங்கள் கணனியுள்ள வைரஸ் கோப்புக்களை அதன் மூலம் கண்டறிந்து நீக்கிக் கொள்ளலாம். 



கட்டாயம் வாரத்திற்கு ஒரு முறை இதை Update செய்து கொள்ளுங்கள். (இதற்கு குறைந்த Data வே தேவைப்படும்) 






Post Top Ad

Your Ad Spot

Pages