Breaking

Sunday, November 12, 2017

Mp3 பாடல்களுக்கு உங்கள் படத்தை இணைப்பது எப்படி?

இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் MP3 பாடல்கள் அந்தந்த குறிப்பிட்ட தளம் மற்றும் திரைப்படத்தின் படம் இணைக்கப்பட்டிருக்கும். இதனை நாம் ஆடியோவினை கேட்கும் போது படத்தினை காண முடியும். குறிப்பிட்ட ஆடியோ டேக் படத்தினை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும்



Windows கணிணியில் பயன்படுத்தும் முறை

இதற்கு ஒரு இலவச மென்பொருள்  உதவி செய்கிறது. மென்பொருளை கீழே உள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்யுங்கள்.





இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Mp32tag அப்ளிகேஷனை Open செய்யவும்



தோன்றும் விண்டோவில் File மெனு பொத்தானை அழுத்தி Add directory யை தேர்வு செய்யவும்.



பின் தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட பாடல்களில் தொகுப்பு கோப்பறையை தேர்வு செய்யவும். பின் அனைத்து பாடல்களும் பட்டியலிடப்படும்.

பின் எந்த பாடல் உங்களுக்கு பிடிக்குமோ அதனை மட்டும் தேர்வு செய்யவும். பின் Extended Tags ஐகானை கிளிக் செய்யவும்.



நீங்கள் தெரிவு செய்த பாடலில்  ஏதாவது படம் (Image) இருந்தால்  ,தோன்றும் விண்டோவில் Remove cover பொத்தானை தெரிவு செய்தால் அந்தப் படம் இல்லாமல் போய்விடும் . 



பின்  Add cover பொத்தானை அழுத்தி உங்களுக்கு தேவையான படத்தை தேர்வு செய்து, பின் OK பொத்தானை அழுத்தவும்.





குறிப்பிட்ட பாடலுக்கு நீங்கள் தெரிவு செய்த படம் செட் செய்யப்பட்டு இருக்கும். அந்த படம் குறிப்பிட்ட பாடலுக்கு செட் செய்து சேமிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி தோன்றும்.

பின் குறிப்பிட்ட படமானது நீங்கள் குறிப்பிட்ட MP3 பாடலுக்கு செட் செய்யப்பட்டிருக்கும்.



Android Smart தொலைபேசியில் பயன்படுத்தும் முறை

மேற்குறிப்பிட்ட செயற்பாட்டை  Android Smart தொலைபேசியிலும் செய்ய முடியும். இதற்கு Star Music Tag Editor எனும் android app உதவுகிறது. இதை playstore லிருந்து Download செய்யுங்கள்.

Android app ஐ  கீழே உள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்யுங்கள்.



பின் அதை உங்கள் Android Smart தொலைபேசியில் Install செய்து , அதை Open செய்துகொள்ளுங்கள்.  பின் உங்களுக்கு பிடித்த பாடலொன்ரை தெரிவு செய்யுங்கள்.



பின் தோன்றும் விண்டோவில் Pick Picture பொத்தானை அழுத்தி உங்களுக்கு தேவையான படத்தை தேர்வு செய்து, பின் Save பொத்தானை அழுத்துங்கள்.




அவ்வளவுதான் இப்போது நீங்கள் தெரிவு செய்த பாடலுக்கு நீங்கள் தெரிவு செய்த படம் Tag ஆக மாறியிப்பதை அவதானிக்கலாம்.



Post Top Ad

Your Ad Spot

Pages