Breaking

Thursday, November 12, 2015

உண்மயைான செல்வந்தன்

ஒரு செல்வந்தர் தன்னிடமுள்ள எல்லா சொத்துக்களையும் விற்று ஒரு பெரிய பிரமாண்டமான மாளிகை ஒன்றை கட்டினார் பல கோடிகள் பெறுமதியான அந்த அற்புதமான மாளிகையை பார்ப்பதற்கு மக்கள் அணிதிரண்டு வந்தனர்
அங்கு வருகின்ற அனைத்து மக்களுக்கும் அந்த கோடீஸ்வரன் "இந்த மாளிகையில் ஏதாவது ஒரு குறையை யாரவது கண்டு பிடித்தால் அவர் கேட்பதை தருவதாக" ஒரு அறிவிப்பு செய்தார் அங்கு வந்தவர்களெல்லாம் மூலை முடுக்கெல்லாம் தேடியும் ஒரு சிறு குறையேனும் கண்டு பிடிக்க முடியவில்லை

ஊரிலே மிகவும் வறிய நிலையிலுள்ள நல்ல ஒரு மனிதர் வந்து அவரிடம் இதில் இரண்டு குறைகள் உள்ளது என்றார் வியந்து போன அந்த செல்வந்தர் "அவை என்ன" என்றார் ?

உடனே அந்த மனிதர்
1- இந்த மாளிகை என்றோ ஒரு நாள் அழிந்து போகக்கூடியது 
2- இதன் சொந்தக்காரர் என்றோ ஒரு நாள் அழிந்து போய் விடுவார்
என்றார் உடனே திகைத்துப் போன கோடீஸ்வரன் அவர் சொன்னதை உண்மை என ஒப்புக் கொண்டு தான் வாக்களித்த படி "நீ விரும்பியதைக் கேள்" என்றார்

அதற்கு அந்த மனிதர் எனக்கு உனது இந்த மாளிகை தான் வேண்டும் என்றார் மக்கள் மத்தியிலே தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் அந்த மாளிகையே அவருக்கு கொடுத்து விட்டார்

ஒரு நொடியில் ஊரிலுள்ள செல்வந்தர் ஏழையாகவும் ஏழை செல்வந்தராகவும் மாறியதைக் கண்டு மக்கள் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருக்கையில் அந்த
மனிதர் இதோ எனக்குச் சொந்தமான இந்த மாளிகையை நான் உனக்கே திரும்பவும் தர்மம் செய்து விடுகிறேன் என்று கூறி அவரிடமே மீண்டும் அதே இடத்தில் மக்கள் மத்தியில் கையளித்தார் அந்த கோடீஸ்வரன் வெட்கித் தலை குனிந்தான் இந்த உலக வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டான்

உண்மையான செல்வந்தன் தனக்காக மட்டும் வாழமாட்டான்  பிறருக்கும் உதவி வாழ்வான்

Post Top Ad

Your Ad Spot

Pages